Saturday, June 16, 2012

புதிய இராணுவத் தளபதியின் அறிவுரை


இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள் ளார். இராணுவத் தலைமையகத்தில் அய்ந்து முக்கிய மான பதவிகளை வகித்த சிறப்புப் பெற்றவர் இவர்.
பதவியை ஏற்றுக் கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை.
இராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் அரசியல் சார்பற்ற முறையிலும், மதச் சார்பற்ற முறையிலும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் இராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்க் கும்பலின் ஊடுருவல் கணிசமாக உள்ளது என்பதற்குப் பல நிகழ்வுகளும் ஆதார ங்களும் இருக்கவே செய்கின்றன.
இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமிக்கப்பட்டனர் என்று விமானப்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் போட்டு டைக்கவில்லையா?
ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி. ஆட்சியில் சேர்க்கப்பட்டனர் என்றால் அந்த நிலையைக் கூர்மையாகச் சிந்தித்தால் உண்மை என்ன என்ற நிலைமை புரியுமே!
பி.ஜே.பி.யின் தேசியச் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவத் தலைமை அதிகாரிகள் அழைக்கப்பட்ட நிலைமை கூட உண்டே!
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியார்? சிறீகாந்த் புரோகித் என்ற பார்ப்பனர் இராணுவ அதிகாரி அல்லவா?
மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து வெளியில் கிடைக்க முடியாதவை - இராணுவத் துறையில் மட்டும் பயன்படுத்தப்படக் கூடியவை; அதனை மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தியுள்ளனர் என்றால் இராணுவத்தில் இவர்கள் எந்தளவு ஊடுருவியிருக்கின்றனர் என்பது விளக்காமலேயே விளங்கும்.
இவர்கள் இராணுவப் பள்ளிகளையும் நடத்து கின்றனர். இங்கு பயிற்சி பெறுவோர் ஆயிரக் கணக்கில் இராணுவத்துக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றனர். மாலேகான் குண்டு வெடிப்பில் முதல் குற்ற வாளியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான சிறீகாந்த் புரோகித்தின்மீதுள்ள குற்றச்சாற்று என்ன?
இந்து ராஷ்டிரம் அமைக்கத் திட்டமிட்டு அரசியல் சட்டம், கொடி போன்றவற்றையும் எழுதியும், வடிவமைத்தும் வைத்திருந்தனர். இசுரேலுடன் தொடர்பு கொண்டு போட்டி அரசாங்கம் ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்பது அவர் மீதுள்ள முக்கிய குற்றச்சாற்றாகும். இந்தியாவிலிருந்து வெளியேறி இசுரேலிடம் சரண் அடைந்து போட்டி அரசினை நடத்திடத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாற்று என்ன சாதாரணமா?
இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து உரிய முறையில் ஆய்வு செய்தால், புதிய இராணுவத் தளபதி ஜெனரல் விக்ரம்சிங் தெரிவித்த அறிக் கைக்கு ஆழமான பின்னணி உண்டு என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாமே!
சங்பரிவார்க் கும்பல் இராணுவத்தில் ஊடுருவல் என்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல; இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும்  பேராபத்தாகும்.
இந்து ராஷ்டிரத்தை அமைத்தே தீருவோம் என்ற கொள்கையுடைய சங்பரிவார்க் கும்பல் இராணுவத் தில் ஊடுருவி இருந்தால், அது இராணுவத்தில் மதச் சிக்கலை உண்டாக்குவதோடு அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கும் ஆபத்தாக முடியக் கூடிய நிலை தான் ஏற்படும்.
எனவே புதிய தளபதியின் அறிவுரை மிக மிக  முக்கியமானது. பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் இராணு வத்தில் புகுத்தப்பட்டவர்கள்பற்றி ஆய்வு செய்து அவர்களை வெளியேற்றுவது அவசர அவசியமான கடமையாகும்.
வரலாற்றில் காட்டிக் கொடுப்பது என்பது பார்ப் பனர்களுக்குக் கை வந்த கலையாகும். உஷார்! உஷார்!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...