பிரதமர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைவதால் கூட்டங்கள் சரியானபடி நடப்பதில்லை
புதிய தலைவரை நியமனம் செய்து நியாயமான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
காவிரி நீர்ப்பிரச்சினையில் கருநாடக அரசு சட்ட விரோதமாக நடந்து வருவதால் கண்காணிப்புக் குழுவுக்குப் புதிய தலைவரை நியமனம் செய்து தமிழ்நாட்டுக்கு நியாயமான தீர்வை வழங்கிட மத்திய அரசு முயல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-
விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளதை கடந்த சில நாள்களாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, நிலைமையை நேரில் கண்ட நாம் தெரிந்து கொண்டோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதத்திலேயே வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, காவிரிப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினோம்.
டெல்டா விவசாயிகளின் கவலை
டெல்டா விவசாயிகளின் கவலை
காவிரிப் பிரச்சினைக்கு அவ்வப்போது தற்காலிகத் தீர்வுகளை காணுவதே வழமையாக உள்ளதே தவிர, நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் என்பது கொடிய கானல் நீரோடையாக அமைந்துள்ளது.
டெல்டா விவசாயிகளின் கவலைக்குக் காரணம் ஜீன் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படக்கூடிய சூழல் இவ்வாண்டு இராது என்ற யூகமே ஆகும். காரணம் மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர்மட்ட அளவு 41.47 ஆயிரம் கனஅடிதான்.
மொத்தம் உள்ள கொள்ளளவு 93.47 ஆயிரம் கனஅடியாகும்.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த நீரின் அளவு 84 ஆயிரம் கனஅடி ஆகும்.
நமக்கு இடைக்காலத் தீர்ப்பு நிவாரணமாக கர்நாடக அரசால் தரப்பட வேண்டிய அளவு 205 (தமிழ்நாட்டுக்கு) டி.எம்.சி. மே வரை முதல் 4 மாதங்களில் 137 ஆயிரம் கனஅடி.
ஜீலை 42. 76 ஆயிரம் கனஅடி
ஆகஸ்ட் 54.72 ஆயிரம் கனஅடி
செப்டம்பர் 29.36 ஆயிரம் கன அடி
குறுவை சாகுபடிக்கு இப்படித் தண்ணீர் பங்கீடு இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1992லேயே காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டு எடுத்து வைத்த வாதங்களின்படியேதான் மேற்காணும் அளவீடு ஆகும்.!
ஆகஸ்ட் 54.72 ஆயிரம் கனஅடி
செப்டம்பர் 29.36 ஆயிரம் கன அடி
குறுவை சாகுபடிக்கு இப்படித் தண்ணீர் பங்கீடு இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1992லேயே காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டு எடுத்து வைத்த வாதங்களின்படியேதான் மேற்காணும் அளவீடு ஆகும்.!
கர்நாடக அரசின் அடாவடித்தனம்
கர்நாடக அரசு இந்த மாத கணக்குப்படி நீர் அளிப்பதில்லை.
கர்நாடக அரசு முற்றிலும் நியாய விரோதமாகத் தங்களின் கோடைப் பயிர் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரை தங்களிடம் உள்ள நான்கு பெரிய அணைகளில் காவிரித் தண்ணீரைத் தேக்கி வைத்து அடவாடித்தனம் செய்து வருகிறது. இதுபற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிவிவாதித்துப் பரிகாரம் தேடிட வேண்டிய காவிரிநீர்க் கண்காணிப்புக் குழு (MONITERING COMMITTEE) ) கடந்த (10) பத்து மாதங்களாக கூட்டப்படவே இல்லை!
இதை தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது!
காவிரி(ஆறு) ஆணையக் கூட்டத்தை அதன் தலைவரான பிரதமர் உடனடியாக கூட்டி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவரச அவசியமாகும்!
முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி (NDA) அரசில் இந்த காவிரி ஆணையத்திற்குப் பிரதமர் (வாஜ்பேயி) தலைவராக இருப்பார் என்று அமைந்தபோதே பிரதமர் போன்ற பல்வகைப் பொறுப்பைச் சுமப்பவர் தலைவராக இருந்தால் உடனடியாக தீர்வுக் காண முடியாமல் கூட்டங்களே நடக்க முடியாமல் போகக்கூடும்; காலதாமதம் ஏற்படும்; பருவத்தே பயிர் செய்ய வேண்டியது தள்ளிக்போகக் கூடும். உடனடி பரிகாரம் கிடைக்காமலும் போகக்கூடும் என்று நமது கழகம் சுட்டிக்காட்டியதை ஏற்று வேறு தலைவரைப் போடவில்லை. அதனால் இவ்வளவு பெருஞ்சுமை. விவசாயிகளுக்கு ஏற்படும் நிலைமை உருவாகிறது!
காவிரி ஆணையத்துக்குப் புதுத் தலைவர் தேவை
எனவே இதுபற்றி இணக்கமாக மத்திய அரசு சிந்தித்து காவிரி நீர் ஆணையத்திற்கு ஒரு புதுத்தலைவரை (அவர் தேசிய நீர்வளத்துறை அமைச்சராகவோ அல்லது சிறந்த நீதிபதி தகுதியில் உள்ளவர்களோ அல்லது வழக்கில் சம்பந்தப்படாத மாநிலங்களைச் சார்ந்த வல்லுனர்களாகவோ இருக்கலாம். நியமிக்க வேண்டும்!
கர்நாடகத்தின் வறட்டுப் பிடிவாதத்தினை மாற்றிட நியாயமான தீர்வை மத்திய அரசு உருவாக்கி தரவேண்டியது அதன் தலையாய கடமையாகும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தலைவர், திராவிடர் கழகம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பெட்ரோல் விலையைக் குறைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் மே 30-ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- நாடெங்கும் எதிர்ப்புப் புயல் எதிரொலி பெட்ரோல் விலையைக் குறைத்திட மத்திய அரசு அவசர ஆலோசனை
- பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்துவோம்
- பெட்ரோல் விலை உயர்வு: டீசல், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம் 3 வயது சிறுவன் கடத்திக் கொலை - நரபலியா?
No comments:
Post a Comment