Tuesday, April 17, 2012

திருமலை வெங்கடாசலபதி கோவிலில் நடக்கும் தில்லுமுல்லுகள்


இந்தியாவிலேயே அதிக அளவில் பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்லும் கோவில்களில் முதல் இடத்தைப் பெற்றிருப்பது திருப்பதி-திருமலை வெங்க டேசப் பெருமாள் கோவிலாகும். அதே போல் அதிக வருமானம் கொண்ட பணக்காரக் கோவிலாகவும் இது விளங் குகிறது. இதன் ஆண்டு வரவுசெலவு திட்டம்  ஒரு சிறு மாநிலத்தைப் போன்று 2000 கோடி ரூபாய் அளவில் இருப்ப தாகும். இக்கோவில் நிர்வாகத்தில் 98 துறைகளில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கி, தரிசனத்துக்காக திருமலை செல்லும் பேருந்தைப் பிடிப்பது முதல், தங்குமிட ஒதுக்கீட்டை இணை நிருவாக அலுவலரிடமிருந்து பெறுவது, மொட்டை அடித்துக் கொள்வது, தரிசனம் செய்வது, லட்டு பிரசாதம் வாங்குவது என்று அனைத்திலும் யாருக்காவது  லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற அள வில் இக்கோவில் நிருவாகத்தில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது.
தரிசனம் காணவரும் பக்தர்கள் படும் பாடு
ஆர்ஜித சேவை, நைவேத்தியம், சுப்ரபாதசேவை, தோமாலை சேவை என்பது போன்ற பலவகைகளான வழி பாடுகள் மற்றும் சடங்குகளுக்காக தினமும் எட்டு மணி நேரம் ஒதுக்கப் படுகிறது. முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்கு என்று நாள்தோறும் 3-4 மணி நேரம் செலவாகிறது. இவை யெல்லாம் போக பொதுபக்தர்களின் தரிசனத்துக்கு நாள்தோறும் 10-12 மணி நேரமே கிடைக்கிறது. கோவில் நிரு வாகம், செயல் முறைகள் பற்றி வெளிப் படையாகவும், நியாயமாகவும் தேவஸ் தானம் நடந்து கொள்ளாமல் போனால், பெரும் அளவிலான பக்தர்களின் மனதில் எரிச்சலும், கோபமும்  எழத்தான் செய்யும். பெருமாள் சிலை இருக்கும் இடத்தி லிருந்து 100 மீட்டர் தொலைவில், ஒரு மணி நேரத்தில் 5000 - 6000 பக்தர்கள் மின்னல் வேகத்தில் தரிசனம் செய்து வைக்கப்படுகின்றனர். எந்த பக்தரும் ஒரு நிமிடம் கூட நிற்கமுடியாது. ஜருகண்டி, ஜருகண்டி என்று கோவில் ஊழியர்கள் பக்தர்களைத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.
கடந்த வைகுண்ட ஏகாதசி அன்று திருமலை கோவில் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தது. 15,000 முக்கிய பிரமுகர் களுக்கு தேவஸ்தானம் பாஸ் வழங்கிய தால், சாதாரண பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேர்ந்தது. அலிபிரி, சீனிவாசமங்காபுரம் வழியாக கால் நடையாக வந்த பக்தர்கள், அவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப் பட்டிருந்தபோதிலும், தரிசனம் செய்யா மலேயே திரும்பிச் செல்ல வேண்டிய தாயிற்று.
தரிசனத்துக்கான டோக்கனை நான் ஜனவரி 4 ஆம் தேதி இரவு வாங்கினேன். ஜனவரி 7 ஆம் தேதி பிற்பகலில் எனக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று பெங்களூரு அய்.பி.எம். நிருவாக அதிகாரி எல்.வி.கிஷோர் நினைவு கூர்கிறார். 1940-களின் இடைக்காலத்தில்தான் திருமலை கோவில் வரை பேருந்தில் செல்ல மலைப்பாதை அமைக்கப் பட்டது. அதுவரை பக்தர்கள் மலை அடிவாரத்தி லிருந்து திருமலைக்கு நடந்துதான் சென்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் திருமலையின் தோற்றமே முற்றிலுமாக மாறிப்போனது. தேவஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்த அலுவலர்கள், இடைத்தரகர்களின் துணையோடு  எதற்கெடுத்தாலும் கையூட்டு பெறுவது, தருவது என்ற நடைமுறையை உருவாக்கி வளர்த்து விட்டனர். திருமலைக்கு இப்போது வரும் பக்தர்கள் அவர்களது கருணையில் உள்ளவர்களே என்று ஆந்திர உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பர்வதராவ் கூறுகிறார். அதிகாரிகளின் குறுக்கீடுகள், இடை யூறுகள், செல்வாக்கு மிகுந்த, உயர் பதவிகளில் உள்ள அரசியல்வாதிகளின் தலையீட்டினால் பின்பற்றப்படும் ஏறு மாறான கொள்கைகள் திருமலையின் பெயருக்கே பெருங்களங்கத்தை  ஏற் படுத்திவிட்டன.
தரிசனத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களால்  பக்தர்கள் படும் பாடு
பெருமாளுக்கு முன் பக்தர்கள் அனைவரும் சமமே என்று கூறப்படுகிறது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகளின் கண்களுக்கு பொதுமக்களை விட முக்கியப் பிரமுகர்களே முக்கியமானவர் களாக ஆகிவிட்டனர். கோவிலின் வைகுந்தம் பகுதியில் வரிசையில் உட் கார்ந்து காத்திருந்த பக்தர்கள் பொறுமை இழந்து மார்ச் 18 அன்று அங்கேயே முழக்கங்கள் எழுப்பினர். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அன்று தரிசனத்திற்கு வந்திருந்ததால், பக்தர்கள் நீண்ட நேரம் காக்க நேர்ந்ததே இதன் காரணம். இந்த ஆண்டில் மட்டும் இதற்கு முன் ஜனவரி 8, 25,  மற்றும் பிப்ரவரி 5, 6  என்று பலமுறை  தரிசனத்துக்காக ஆளுநர் வந்திருக்கிறார்.
காலை, மாலை இரு வேளைகளிலும் தரிசனத்துக்கென அதிக அளவாக 1500 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக் கப்படலாம் என்ற அளவு 3000 - 4000 என்று உயர்ந்து கொண்டே போகிறது. அதனால் சாதாரண பக்தர்கள் 3-4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட முக்கிய பிரமுகர்கள் யார், யார்? தேவஸ்தான விதிகள்படி அதற்கென அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்.,அய்.பி.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. 1 கோடி ரூபாய்க்கும் மேலாக நன்கொடை அளித்தவர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்களும் முக்கிய பிரமுகர்களாகவே கருதப் படுகின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் கோவிலுக்கு வந்துவிடுவதில்லை என்பதால், அவர்கள் வருவதைப் பற்றி எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அவர்களுடன் வரும் ஒரு பட்டாளத்துடன் நீண்ட நேரம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது, சாதாரண பக்தர் களைப் பெரும் சிரமங்களுக்குள்ளாக்கு கிறது. இது போதாதென்று, அவர்கள் தரும் பரிந்துரைக் கடிதங்களுடன் வருபவர்கள் ஒரு பெரும் பட்டாளமாகும். முக்கிய பிர முகரின் பரிந்துரைக் கடிதம் வைத்திருப்ப வரும் முக்கியப் பிரமுகராகவே கருதப் படுகிறார். முக்கிய பிரமுகர்களின் கால் களில் விழுந்து வணங்குவதே தேவஸ் தானத்தின் தற்போதைய தலைவர் கனிமூரி பாபிராஜூவுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். முக்கிய பிர முகர்களின் கடிதங்களுடன் வருபவர் களுக்கும் அவர் முக்கிய பிரமுகர்களின் பாஸை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி வாரி வழங்குகிறார் என்று  இந்து தேவாலய பரிரட்சன சமிதியைச் சேர்ந்த கமலானந்த பாரதி சாமி குற்றம் சாட்டு கிறார். பெருமாளின் பல்வேறுபட்ட சேவை நிகழ்ச்சிகளுக்கும், தரிசனத்திற்கும் அனுமதி அளிப்பதற்கான முக்கிய பிர முகர்களின் பரிந்துரைக் கடிதங்களைக் கையாள்வதற்கென்றே ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு விசேட அனுமதி வழங்கப் படும் பிரமுகர்களின் எண்ணிக்கையை 1500-க்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இப்போ தெல்லாம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தினமும் எவ்வளவு முக்கிய பிரமுகர்கள் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று ஏன் தேவஸ்தான அறிக்கை வெளியிடக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் சமஞ்சி சீனிவாஸ் கேட்கிறார். கோவில் முன் னேற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட் டுள்ள பணிகளுடன் இந்த முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களுக்கு இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரமுகர்களின் பட்டியலை மாற்றி அமைக்காதவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக் காது என்று தேவஸ்தான நிருவாக அதி காரியாக உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகிறார். - (தொடரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...