திருவிதாங்கூர் சமஸ்தானத் துக்கு உட்பட்ட வைக்கத்தில் தந்தை பெரியார் வருணாசிரமப் பார்த்தீனியத் துக்கு எதிராகக் கொளுத்திவிட்ட தீ... அந்த வட்டாரத்தையே சுழன்று சுழன்று தீய்த்தது.
அதன் உடனடிப் பலன் சுசீந்திரத் தில் முட்டி மோதியது. அங்கு கோயில் நுழைவுப் போராட்டம் என்கிற அள வுக்கு அது தகித்தது.
சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை வரவேற்று எழுதினார் வைக்கம் வீரர் (குடிஅரசு, 31.1.1926).
தமிழ்நாட்டில் சுசீந்திரத்தில் உரிமைப்போர் நடப்பதற்குத் தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக் கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும் என்று அந்தக் குடிஅரசு தலையங் கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளம் - பாலக்காடு நக ராட்சிக்கு உட்பட்ட கல்பாத்தி என்னும் கிராமத்தில் பார்ப்பனர்கள் வாழும் பகுதியில் ஈழவர்களும், தீயவர்களும் நடந்து செல்லக் கூடாது என்ற வருணா சிரமவெறி படம் எடுத்து ஆடியது; மீறிச் சென்றால் அடி உதைதான்.
அது குறித்தும் தந்தை பெரியார் எழுதுகிறார் குடிஅரசில் (16-5-1926).
அது குறித்தும் தந்தை பெரியார் எழுதுகிறார் குடிஅரசில் (16-5-1926).
சென்ற வருஷத்தில் வைக்கம் சத்தியாக் கிரகத்திற்குப் பிறகு மறுபடியும் கல்பாத்தி அக்கிரகாரத் துக்குள் ஈழவர்கள் பிரவேசிக்க முயன் றார்கள். அது சமயம் சட்டசபையிலும், பொது ரஸ்தாவிலும், எல்லா ஜாதி யாரும் போகலாம் என்று ஒரு தீர் மானத்தை நிறைவேற்றினார்கள் என்று அத்தலையங்கத்தில் தந்தை பெரியார் குறிப்பிட்டது. குறிப்பிடத் தக்கதே!
நாகர்கோவிலை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பது ஆரியத்தின் வேட்டைக்காடாக இருந் தது என்று சுருக்கமாகச் சொல்லலாம். கேரள மாநிலத்தைப் பற்றி விவே கானந்தர், பைத்தியக்காரர்களின் நாடு என்று சொன்னது பொருள் பொதிந்த பொன் வாக்காகும்.
அந்தப் பகுதியில் நாகர் கோவிலை நடுநாயகமாகக் கொண்டு முற்போக்குக் காற்று நாலா திசை களிலும் சுழன்றடித்தது.
காந்தியாரையே கலக்கியவர்கள் நாகர்கோவில் சுயமரியாதை இயக்கத் தீரர்கள்.
காந்தியார் திருவனந்தபுரம் வருகிறார் என்றவுடன் தந்தை பெரியா ரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நாகர்கோவில் தோழர்கள், தந்தை பெரியார் நடத்திய புரட்சி இதழில் வெளிவந்த காந்தி பகிஷ் காரம் ஏன்? என்ற தலைப்புடன் வெளி வந்த தலையங்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருவிதாங்கூர் வாலிபர்களுக்கு விண்ணப்பம், காந்தி யாரை பகிஷ்கரியுங்கள்! என்ற தலைப் பில் பதினாயிரக் கணக்கில் துண்டு வெளியீடுகளை அச்சிட்டு கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், நாகர் கோவில் முதலிய இடங்களில் காந்தி யார் வந்தபோது வெளியிட்டனர். காந்தியாரை நேரில் சந்திக்க விரும்பும் தங்கள் கருத்தையும் தெரியப்படுத்தி யிருந்தனர்.
திருவனந்தபுரம் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஆர். பத்மநாபன் (உப்பு சத்தியாக்கிரத்தின் போது சிறை சென்றவர்) எஸ்.ராமகிருஷ்ணன், பி.கே.வாசுதேவன், எஸ்.பாடலிங்கம் (நால்வரும் பி.ஏ. வகுப்பு மாணவர்கள்) ஆகியோரும், நாகர்கோயில் சுயமரியா தைச் சங்கப் பிரதிநிதிகளான தோழர் கள் ஈ.ராமசாமி, எஸ்.பூதலிங்கம், சுப்பையா ஆகியோரும் 21-1-1933 செவ்வாய் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலில் சந்தித்தனர்.
பல்வேறு கேள்விகள், குறுக்குக் கேள்விகள் - விடைகள் இடம் பெற்றன.
அத்தோழர்கள், காந்தியாரிடம் தங்களை எப்படி அறிமுகம் செய்து கொண்டார்கள் தெரியுமா?
தேசத்தின் நன்மைக்காக எத்தகைய நஷ்டத்தையும் அனுப விக்க நாங்கள் தயாராயிருக்கி றோம். நாங்கள் அனைவரும் பகுத் தறிவு இயக்கத்தைச் (சுயவடியேடளைவ ஹளளடிஉயைவடி) சேர்ந்தவர்கள். நீங்கள் சொல்லும் ஹரிஜன ஆலயப் பிரவேச சேவையில் எங்களுக்கு நம்பிக்கை யில்லை. இதைவிட்டு பொருளாதாரம், சுகாதாரம், கல்வி முதலிய துறைகளில் நீங்கள் ஒத்துழைப்பதானால், நாங் களும் உங்களோடு ஒத்துழைக்க விரும்புகிறோம். அதற்கு நீங்கள் என்ன திட்டம் போடுகிறீர்கள் என்ற துவக்கத் தோடு வினாக்களை எழுப்பினார்கள். காந்தியார் அவருக்கே உரிய சனாதன முறையில் பதில் கூறிக்கொண்டு இருந்தார். ஓர் இடத்தில் சிக்கலான ஒரு கேள்வியை எழுப்பி காந்தியாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதுதான் சந்திப்பு இமயமலையின் உச்ச கட்ட மான எவரெஸ்டு விடயமாகும்.
சுயமரியாதைக்காரர்கள்: கல்வி, வைத்தியம், சுகாதாரம் ஆகிய துறை களில் ஈடுபட்டு சட்டசபைகள் மூலம் வேலை செய்ய பலமான ஒரு கட்சியை ஸ்தாபிப்போம்.
காந்தியார்: செய்யலாம். எனது ஆயுள் மிகவும் குறுகியது. இன்னும் சில வருஷங்கள்தான் இருக்க முடியும். ஆகவே வேறு துறைகளில் இனி இறங்க முடியாது. நீங்கள் வாலிபர்கள். உங்கள் கட்சி பலப்பட்டு விட் டால், நான் ஜீவித்திருந்தால், உங்கள் கட்சியில் சேரத்தயார்! என்று காந்தியார் பதில் அளித்தார். (புரட்சி 4-2-1934)
எப்படிப்பட்ட இயக்கம், நமது இயக்கம் பார்த்தீர்களா? காந்தியாரே நமது இயக்கத்தில் சேர ஆசைப்பட்டார் என்றால் அது என்ன சாதாரணமா?
நாகர்கோவில் - நமது இயக்கத் தில் இதன் மூலம் சரித்திரத்தில் முண் டாசு கட்டி நிற்கவில்லையா?
மேலும் வரலாறு படைப்போம். ஏப்ரல் 27 இல் வாருங்கள் தோழர்களே குடும்பம் குடும்பமாக! கொள்கை முரசறைவோம்! குன்றத்து விளக்காய்ச் சுடர் முகம் காட்டுவோம் வாரீர்! வாரீர்!!
- மின்சாரம் -
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- லேபர் கமிஷனர் என்ற பதவியை நீதிக்கட்சி சாகடித்ததா? - (3)
- கொள்கை நெருப்போடு கூளங்கள் மோத வேண்டாம்
- நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு நீதி செய்யவில்லையா? - (2)
- தீட்சிதர் வீட்டில்
- துறையூரை நோக்கி!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment