Wednesday, March 21, 2012

வன்முறை ஊழல் ஒழுக்கக் கேட்டின் உறைவிடம்


பாரதிய ஜனதா ஆட்சி என்றால் வன்முறை - ஊழல் ஒழுக்கக் கேட்டின் ஒட்டு மொத்தமான உறைவிடம் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அன்றாடம் நடை பெறும் நிகழ்ச்சிகளே இவற்றை நிர்வாணமாக நிரூபிக்கின்றன.
வன்முறை என்பதற்கு குஜராத் மாநிலம் ஒன்று போதுமே. நரேந்திரமோடி என்றால் நர வேட்டை மனிதன் என்கிற முத்திரை ஆழமாகப் பதிந்து போன ஒன்றே! என் ஆட்சியில்தானா மதக் கலவரம் நடந்தது? என் ஆட்சிக்கு முன்பும் நடைபெற்றுள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் தமது ஆட்சியில் மதவன்முறை நடைபெற்றது உண்மையே என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.
இதற்குமேல் தம்மீது படிந்த வன்முறைக் கறையை மறைக்க முடியாது என்ற நிலையில், வேறு வழியின்றி இப்படி அவர் பேசி இருப்பது ஒரு வகையில் திருப்பத்தைத் தரக் கூடியதே!
உச்சநீதிமன்றம் அவரை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுச் சொன்னதை இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்து அதற்குள் சிறுபான்மையின மக்களின் கதையை முடித்து விடுங்கள்! காவல்துறை கண்டு கொள்ளாது என்று முதல் அமைச்சராக இருந்தபோது சொன்னதை ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களே தெகல்கா முன் கூறியது ஒலி- ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (சோ ஒருவர்தான் இதை நம்பவில்லை. அந்த அளவுக்கு வறட்டுத்தனமான ஆர்.எஸ்.எஸ். பக்தர் அவர்)
இரண்டாவதாக ஊழல் என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவில் முதன்மையான இடத்தில் இருப்பது பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநிலம்தான்.
அம்மாநில அமைச்சர்கள் இருவர் இன்னும் சிறையில்தான் உள்ளனர். எடியூரப்பா மீதான வழக்கி லிருந்து விடுபட்டதாக ஒரு காரணம் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கத்தான் செய்கின்றன. முற்றிலும் விடுவிக்கப்படவில்லை என்பதை மறக்கக் கூடாது.
மூன்றாவதாக ஒழுக்கக்கேடு பற்றியது. பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது கைப்பேசியில் ஆபாச நிர்வாண காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டி ருந்த காரணத்தால் அமைச்சர்களின் பதவிகள் பறி போய்விட்டன.
இதற்காக பி.ஜே.பி. அமைச்சர் சொன்ன சமாதானம் இருக்கிறதே - அதை நினைத்தால் ஒரு பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டதற்குப் புல் பிடுங்கப் போனேன் என்று சொன்னவன் கதைதான் நினைவிற்கு வருகிறது.
பிப்ரவரியில் உடுப்பி அருகே இருக்கும் செயின்ட் மேரி தீவில் செக்ஸ் பார்ட்டியை பி.ஜே.பி. அரசு ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுவதை எதிர்த்துப் பேச தனக்கு விஷயங்கள் தேவை என்று அந்தக் காட்சிகளைப் பார்த்ததாக விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா சொன்ன காரணம் இருக்கிறதே - அது ஆபாசத்துக்குப் பொட்டு வைத்தது போன்றதாகும். இது என்ன பெரிய குற்றம் - குடி மூழ்கிப் போய் விட்டது? மற்றவர்கள் அவ்வாறு பார்ப்பதை யார் தடுத்தார்கள் என்று ஒரு போடு போட்டாரே பார்க்க லாம் (அந்த மூன்று அமைச்சர்களும் எடியூரப்பா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இவ்வாறு கூறியுள்ளார்).
பி.ஜே.பி. என்றால் ஒரு வித்தியாசமான கட்சி அறநெறி சார்ந்த கட்சி, தார்மீக ஒழுக்கமுடைய கட்சி என்று சொல்லுவதெல்லாம் ஊரை ஏமாற்றும் உதார் பிரச்சாரம் என்பதை உணர வேண்டும். இந்த யோக்கியதையில், மாநிலங்களை ஆளும் பி.ஜே.பி. தான் மத்தியில் மீண்டும் ஆள வேண்டுமாம். அதுவும் நர வேட்டை நரேந்திர மோடி பிரதமராக ஆக வேண்டு மாம். நாடு சுடுகாடாகத்தான் இந்தச் சத்தம் - எச்சரிக்கை!


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...