Tuesday, March 27, 2012

நூலைப்படி பூணூலே!


தி.க. தலைவர் வீரமணி: இணைந்து வாழ முடி யாத பெண்கள், விவாகரத்து பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து, அவர்கள் உடனே விலகி, மனநிம்மதியுடன் வாழச் செய்யும் திரு மணச் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது, தந்தை பெரியார் வெகுகாலமாக சொல்லி வந்த ஒரு கருத்து.
டவுட் தனபாலு: தெரியாமத்தான் கேட்குறேன்... மணவிலக்கு, கர்ப்பப் பையை அகற்றிடறது, தாலியே இல்லாம இருக்கிறது... இந்த மாதிரி விஷயங்களைத் தான் உங்க அய்யா பெரியார் வலியுறுத்திட்டே வந்திருக் காரா...? ஒழுங்கா கல்யாணம் பண்ணி, ஒழுக்கமா குடும்பம் நடத்துறது பத்தி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையா?
(தினமலர் 27-3-2012)
பெண்கள் உரிமைக்கானவை என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லும் கீதைதானே இவாளின் தேவாமிர்தம்!
தங்கள் தாயை, ஒரு கணம் நினைத்துப் பார்ப்பார்களா? தான் பெற்ற மகளை ஒரே ஒரு மணித்துளி எண்ணிப் பார்ப்பார்களா? தனக்கு ஒரு பங்குதான் திரவுபதி என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணை வைத்துச் சூதாடிய அயோக்கியர்களை உச்சி மோந்து கூத்தாடும் கூட்டமாயிற்றே! உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு எந்தத் தடிப்பயலோடும் உறவு கொள்ளலாம் என்கிற சாத்திரங்களை எழுதி வைத்திருக்கும் சழக்கர்கள் பேனா பிடிக்கலாமா? பெண்ணைத் துணைவராக, இணையராக ஆக்கியவர் பெரியார். பெண் ஏன் அடிமையானாள் என்ற பெரியாரின் அறிவு நூலை பூணூல் கூட்டம் படித்துப் பார்க்கட்டும்!
ஒழுங்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்புத் தோணியில் இணையராகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் பெரியார் கூறும் வாழ்வியல்! பெரியாரியல் என்பது ஒரு வாழ்க்கை நெறி! (A way of  life) பெண்ணைக் கூட்டுறவு சொசைட்டியாக நடத்தும் மகாபாரதப் பேர்வழிகள் பெரியாரைப்பற்றிப் பேச லாயக்கற்றவர்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...