லண்டன், மார்ச் 15- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2 ஆவது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.Sri Lanka's killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Lanka's killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.
ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வீடியோ காட்சி இங்கே...

.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவுபற்றி கலைஞர்
- திரிணாமுல் காங்கிரஸ் நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை
- சென்னை- ராயபுரத்தில் 4 ஆவது ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை: ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
- கோவில்களில் 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு அர்ச்சகர் பணிகள்! தமிழ்நாடு அரசு பின்பற்றுமா?
- சதாம் உசேன், பின்லேடன் வரிசையில் ராஜபக்சே?
No comments:
Post a Comment