பேய்களை வரவழைக்கிறோம் என்று சவால் விட்டுத் தோற்றுப் போன இரு மந்திரவாதிகளை, பொது மக்களின் கோபத்திலிருந்து காவல்துறையினர் காப்பாற்றினர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜயசிங்கபூர் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் ஓர் அமைப்பு பேய், பூதம் எதுவும் இல்லை என்று கூறியதாம். இதையடுத்து, தாங்கள் பேய்களை வரவழைத்துக் காட்டுவதாக அந்த இரு மந்திரவாதிகளும் சவால் விட்டனராம். உடனே அவர்கள் கூறிய இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விட்டனர்.
அந்த மந்திரவாதிகளின் பெயர்கள் சித்திஜ் ஷின்டே, மகாதேவ் சவான் ஆகும். ஆனால், கூறியபடி அவர்களால் பேய்களை வரவழைக்க முடியவில்லை. தோற்றுப்போன மந்திரவாதிகள் அந்த அமைப்பிடமும் மக்களிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரினர்.
இருந்தும் மக்கள் ஷின்டேயின் வீட்டில் கல்வீச்சில் இறங்கினர். மூடநம்பிக்கை ஒழிப்பு அமைப்பின் வேண்டுகோளின் பேரில், காவல்துறையினர் பின்னர் மந்திரவாதிகளைப் பொது மக்களின் கோபத்திலிருந்து காப்பாற்றினர்.
முன்னதாக மந்திரவாதிகள் வெற்றி பெற்றால் ரூ.2 லட்சம் தருவதாக அந்த அமைப்பு கூறியிருந்தது. ஆதாரம்: தினமணி (பெங்களூரு) 8.12.1990
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment