Saturday, March 3, 2012

திருஞானசம்பந்தன்


சென்னையில் இன்று தேவாரம் பாடிய சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தனுக்கு விழா எடுக்கப்படுகிறது. சோலை சுந்தரப் பெரு மாள் என்பார் திருஞான சம்பந்தனை இழிவு படுத்தி தாண்டவபுரம் என்ற நூல் ஒன்றை எழுதி விட்டாராம். இதனை எதிர்த்து அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்பார் களே அந்த அடிப்படை யில் இந்த விழா நடை பெற உள்ளதாம்.
சபாஷ்! இப்படியல் லவா மீசையை(?) முறுக் கிக் கொண்டு கோதாவுக் குள் குதிக்க வேண்டும்?
இந்த சைவர்களின் முழு முதற் கடவுளான சிவன் தாருகாவனத்து ரிஷிகளின் பத்தினிப் பெண்களை கற்பழித் தான் என்றும், அதனால் ஆத்திரப்பட்ட ரிஷிகள் சாபமிட அதன் காரண மாக சிவனின் ஆண் குறி அறுந்து விழுந்ததாகவும், அதனை பார்வதிதேவி யார் தன் குறியால் தாங்கிப் பிடித்ததாகவும், அந்த அடையாளத்தைத் தான் சிவலிங்கம் என்று உருவகப்படுத்தி, ஊர் எங்கும் கோவில் கட்டி, இந்த அருவருப்பான - ஆபாசமான உருவத் தினை விழுந்து விழுந்து பக்தர்கள் கும்பிட்டுத் தொலைக்கிறார்களே - இது எங்கள் முழு முதற் கடவுளான சிவனை இழிவுபடுத்துவதாகும் என்பதால் சிவபுராணங் களையும், லிங்க புராணங் களையும் கொளுத்தும் போராட்டத்தில் குதிக்க வேண்டாமா? (இல்லை. இது உயிர்களின் தத் துவம் என்று கில்ட்டு அடித்து வியாபாரம் செய் யப் போகிறார்களா?)
இந்தத் திருஞான சம்பந்தனின் யோக்கி யதைதான் என்ன?
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!
என்று திருஞானசம் பந்தன் பாடியிருக் கிறானே - சமணர், பவுத்தர் வீட்டு அழகிய பெண் களைக் கற்பழிக்க அருள் புரியுமாறு மதுரையில் வீற்றிருக்கும் சிவனுக்கு விண்ணைப்பம் போட்டு அருள் வேண்டுகிறாரே - இந்த யோக்கிய சிரோன் மணியை யாரோ ஒருவர் இழிவுபடுத்திப் புத்தகம் போட்டு விட்டார் என்று புலம்புவானேன்?
எலும்பைப் பெண் ணாக்கியவர் - தேவாரப் பாட்டால் திருஞான சம்பந்தன் என்று பீற்றிக் கொள்பவர்கள், அந்தத் திருஞான சம்பந்தனுக்கு விண்ணப்பம் போடுவது தானே!
பாண்டிய மன்னனின் வெப்பு நோயை திருஞான சம்பந்தனின் திருநீறு குணமாக்கியது என்றெல் லாம் கதை அளப்பவர்கள். இந்த விடயத்தில் திரு ஞான சம்பந்தனுக்காக அடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு அலை வானேன்?!                                                           - மயிலாடன்


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...