திராவிடர் கழக செயற்குழு தீர்மானம்:
மதவாத அமைப்புகளும், ஏடுகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மக்கள் மத்தியில் மூடத் தனங்களை மூர்க்கத்தன மாக பிரச்சாரம் செய்யும் நிலையில், பெரியாரின் கருத்துக்களை முதன் மைப்படுத்த, நவீன யுக்தி களைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தீவிர மாகப் பரப்பப்படும்.
டவுட் தனபாலு :
அவர் உயிரோட இருந்த ப்பவே பரப்ப முடியாத கொள்கைகளை இப்போ என்ன யுக்தியை பயன் படுத்தி பரப்பப் போறீங் களோ தெரியலை . . . அப்பவும், இப்பவும் உள்ள பகுத்தறிவு அளவையும், உங்க அறக்கட்டளை சொத்து அளவையும் ஒப் பிட்டுப் பார்த்தால் தெரிஞ் சிடுமே . . . எதை வளர்க்க நீங்க யுக்தியைப் பயன் படுத்தியிருக்கீங்கன்னு . . .!
(தினமலர் 5-2-2012 பக்கம் 6)
என்னடா சில நாட்களா தினமலர் சாரைப் பாம்பின் சத்தத்தைக் காணோ மேன்னு பாத்தோம். சாரை கொழுத்தா வளையில் தங் காது மாட்டுக்காரனைக் கூப்பிடும் என்பார்களே, அது போல, அப்பப்ப தலையை நீட்டி நாலு அடி வாங்கினால்தான் அதுக் குத் தூக்கம் வரும்.
அவர் இருந்தப்ப பரப்ப முடியாத கொள்கைகளாம். சொல்றது தினமலர் அவிட்டுத் திரி.
அவர் (பெரியார்) இருந் தப்ப பரப்பின கொள்கை யால்தான் உடம்பு பூராவும் மூளை உள்ளவருன்னு தோளிலே தூக்கி வச்சி கிட்டு ஆடுனீங்களே . . . கொல்லைப் புற கதாநாய கன் திருவாளர் ராஜாஜி இரண்டு வருஷங் கள்கூட ஆள முடியாம துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடினாரே - நினைவிருக் கிறதா? (குலக் கல்வித் திட்ட குல்லுகபட்டர்).
அவர் பரப்புன கொள் கையாலதான் இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்துவிட்டது; இந்த நாட்டை விட்டே போக விரும்புகிறோம் என்று உங்கள் ஆச்சாரியா ரையே கையொப்பமிட்டு ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுக்கச் செய்தது.
நீங்க நம்பின யுக்தியைப் பயன்படுத்தி, கோவில் கர்ப் பக்கிரகத்துக்குள்ளேயே உங்கள் அர்ச்சகப் பார்ப் பான், பக்தைகளிடம் கர்ப் பத்தை உண்டு பண்ணி னான் (நவீன முறையில் கைப்பேசியால் அதைப் படம் எடுத்து சி.டி.யாகப் போட்டு . . . அடடே . . ) உங்க ஜெகத் குரு பத்தி ஊரே சிரிக்குது. அதை அம்பலப்படுத்தியதும் நாங்கதான்.
ஆகம விதிகளை எல் லாம் பயன்படுத்தி தேரோட் டத்துக்கு ஹைட்ராலிக் பிரேக் கேக்குது.
உங்க பகவான் ஏழு மலையான் கண்டுப்புடுச் சுக் கொடுத்ததா இந்தக் கருவிகள் எல்லாம்?
உங்க பகவான் ஏழு மலையான் கண்டுப்புடுச் சுக் கொடுத்ததா இந்தக் கருவிகள் எல்லாம்?
இந்தப் பித்தலாட்டத் தைத் தோலுரிக்க நவீன யுக்திகளை நாங்கள் பயன் படுத்தினால் தினமல ருக்கு ஏன் தேள் கொட் டுது? பூணூலில் ஏன் பூரான் கடிக்குது?
பொழைப்பு கெட்டுப் போய்விடும் என்றா?
பொழைப்பு கெட்டுப் போய்விடும் என்றா?
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல் லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இட மாகும். (விடுதலை 26-4-1967) என்று சும்மாவா சொன்னார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரி யார்?
எங்க அறக்கட்டளை சொத்து வளர்ந்தால், உங் களுக்கு ஆபத்துதானே - அந்த வயிற்றெரிச்சலில் மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழு வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எங்க அறக்கட்டளை சொத்து வளர்ந்தால், உங் களுக்கு ஆபத்துதானே - அந்த வயிற்றெரிச்சலில் மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழு வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெரியார், அறக்கட்ட ளையை உண்டாக்கினார், எங்க தலைவர் வீரமணி வளர்த்தார் என்பதுதானே பெருமை!
உங்களாத்து ரமணரிஷி பார்ப்பான் மாதிரி ஏமாந்த பக்த சோணகிரிகளின் பணத்தை உறிஞ்சி, சுரண்டி சொந்த தம் பிக்கு எழுதி வைத்து விட் டுப் போனாரா பெரியார்?
சந்நியாசிக்கு சொத்து வாரிசு எப்படி இருக்க முடி யும் என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு நான் எப்ப சன்னியாசியானேன்? என்று அந்தர் பல்டி அடித்த சாமார்த்தியம், சவுண்டிகளை விட வேறு யாருக்குத்தான் வரும்? தினமலரே தின மலரே ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ளாதே!
No comments:
Post a Comment