நெஞ்சு நிறைய ஓசோன் காற்றை சுவாசிக்க நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?நெஞ்சு நிறைய ஓசோன் காற்றை சுவாசிக்க நீங்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டியதில்லை. கடற்காற்று ஆரோக்கியம் நிறைந்தது என்ற 19ஆம் நூற்றாண்டின் கருத்து அடிப்படையைத் தவறாகப் புரிந்து கொண்ட தாகும். உப்பு வாடை, சுவை கொண்ட கடற்காற்றுக்கும், நிலையற்ற ஆபத்தான ஓசோனுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.ஜெர்மன் வேதியியலாளர் கிறிஸ்டியன் ஷோன்பெம் 1840இல் ஓசோனைக் கண்டுபிடித்தார். மின்சாதனங்களைச் சுற்றி நிலவும் ஒரு மாறுபட்ட மணத்தைப் பற்றி ஆய்வு செய்யும்போது, அந்த மணம் ஒரு வாயுவிலிருந்து வருகிறது என்பதைக் கண்டார். கிரேக்க மொழியில் நுகர்வதற்கான ‘to smell’ என்ற பொருள் தரும் ozein என்ற சொல்லில் இருந்து இதற்கு O31 என்று பெயர் வைக்கப்பட்டது. கனமான காற்று என்னும் ஓசோன், கெட்ட மணங்களில் இருந்து நோய்கள் உருவாகின்றன என்ற கோட்பாட்டின் பிடியில் இருந்த மருத்துவ அறிவியலாளர்கள், நோய்களைத் தீர்க்கும் என நம்பினர். உடலுக்கு ஊறு விளைவிக்கும் நுரையீரலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத அருவருப்பூட்டும் காற்றை ஒசோன் நீக்கிவிடும் என்றும், அதை கடற்கரையில் பெறலாம் என்றும் அவர்கள் நம்பினர். ஓசோன் மருத்துவம், ஓசோன் ஓட்டல் என்று ஓசோனைச் சுற்றி ஒரு தொழிலே வளர்ந்தது. 1939 இல் இங்கிலாந்தின் ஆரோக்கியம் நிறைந்த ஓசோன் மண்டலம் என்ற பெருமையை பிளாக்பூல் பெற்றிருந்தது.இப்போதெல்லாம் கடற்கரை பக்கத்தில் ஓசோன் வாசனை வீசுவதில்லை. அது அழுகிப் போன கடற்பாசி வாசனை வீசுகிறது. இந்த மணம் உங்களுக்கு நல்லது செய்யும் என்பதற்கோ, கெடுதல் செய்யுமோ என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அது பெரும்பாலும் கந்தக மணம் வீசுவதாக இருந்தது. உங்களது மகிழ்ச்சி நிறைந்த குழந்தைப் பருவ நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் உங்கள் மூளையின் மீது அது தூண்டுதல் ஏற்படுத்த இயன்றதாகும்.ஓசோனைப் பொருத்தவரை, உங்கள் காரின் புகைபோக்கியிலிருந்து வரும் புகை சூரிய ஒளியுடன் சேர்ந்து கடற்கரையில் இருப்பதை விட அதிக அளவு ஓசோனை உற்பத்தி செய்கிறது. உங்களுக்கு ஓசோன் வேண்டுமென்றால் காரின் புகை போக்கியில் வாயை வைத்து உறிஞ்சிக் கொள்ளலாம். ஆனால் இதை எவரும் பரிந்துரைக்கமாட்டார்கள். அந்த ஓசோன் புகை உங்கள் நுரையீரலுக்கு நிவர்த்தி செய்யமுடியாத அழிவினை ஏற்படுத்தும் என்பதுடன், அது உங்கள் உதட்டைச் சுட்டுவிடவும் செய்யும். பிளீச்சிங் என்னும் தூய்மைப்படுத்தும் தூள் தண்ணீரில் உள்ள கிருமிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படுகிறது. இது குளோரினுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாகும். தொலைக்காட்சி, போட்டோ நகலெடுக்கும் இயந்திரம் போன்ற அதிக வோல்டேஜ் உள்ள மின்கருவிகளாலும் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓக் மற்றும் வில்லோ மரங்கள் வெளியிடும் ஓசோன் காற்று அவற்றைச் சுற்றியுள்ள தாவரங்களை நச்சாக்கிவிடும்.சுருங்கி வரும் ஆபத்து நிறைந்த அல்ட்ரா-வயலட் (ஊதா புறநீலக்) கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஒசோன் படலத்தை சுவாசித்தால் அது மனிதரை சாகடித்துவிடும். பூமியில் இருந்து 24 கி.மீ. (15 மைல்) உயரத்தில் உள்ள ஓசோன் படலம் ஜேரேனியம் தாவரம் போன்ற வாசனை கொண்டது.(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- ஆங்கிலேய படைவீரர்கள் அதிக அளவில் கொல்லப்பட்ட போர் எது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- ஆங்கிலேய படைவீரர்கள் அதிக அளவில் கொல்லப்பட்ட போர் எது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment