கேரள எல்லையில் மீனவர்கள் இருவர் இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாவலர் களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட இரு இத்தாலி யர்களும் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் மனைவி ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டு கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதற்கிடையே இத்தாலி நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் இந்தியா வந்துள்ளார். நட்ட ஈட்டைக் கொடுத்துவிட்டு, சிறையில் உள்ள இரு இத்தாலியர்களை விடுவித்துக் கொள்ளலாம் என்று இத்தாலி அரசின் எண்ணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்திய நாட்டுச் சட்டப்படிதான் செயல்பாடுகள் இருக்கும் என்று இந்தியத் தரப்பில் தெளிவாக்கப்பட்டுவிட்டது.
இது வரவேற்கத்தக்க முயற்சி என்பதில் அய்யமில்லை. இதற்குப் பிறகாவது தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்படுமேயானால் அது வரவேற்கத் தக்கதாகும்.
ஒருவர் இருவர் அல்ல; இதுவரை சிங்களக் கடற் படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 570 என்று (3-2-2011 வரை) கூறப் பட்டது. அதற்குப் பிறகும் கூட படுகொலைகள் நடை பெற்றுள்ளன.
கேரளாவில் இரு மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதற்கே, தடபுடலான நடவடிக்கைகள் அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன் னொரு நாடான இலங்கை அரசின் கப்பற்படையால் கொல்லப் பட்டபோது எவ்வளவு தீவிரமான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்? பொது நிலையில் சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமல் போகாது.
500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இன் னொரு நாடான இலங்கை அரசின் கப்பற்படையால் கொல்லப் பட்டபோது எவ்வளவு தீவிரமான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்? பொது நிலையில் சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமல் போகாது.
இந்தியாவுக்குள்ளேயே கேரளா எல்லையில் மீனவர்கள் கொல்லப்பட்டால் அதற்கொரு அணுகு முறை; தமிழின மீனவர்கள் படுகொலை செய்யப் பட்டால் வேறொரு அணுகுமுறையா? இந்தியாவுக்குள் தானே இந்த இரு மாநிலங்களும் உள்ளன?
மேற்கு பாகிஸ்தான் பகுதியில் (இன்றைய பங்களா தேசத்தில்) வங்காளிகள் பாதிக்கப்பட்டபோது - பாகிஸ்தான் படைகளோடு இந்தியா மோதி தனி பங்களா தேசத்தை உருவாக்கிக் கொடுக்க வில்லையா? அதே கண்ணோட்டம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசுக்கு ஏன் இல்லை என்பது நியாயமான வினாவே! குறைந்த பட்சம் மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியாவது ஒரே கல்லால் இரு காய்களை வீழ்த்துவது போல ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு, தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு என்ற நிலையை உருவாக்கி இருக்கலாமே!
அதனைச் செய்ய மனம் வராவிட்டால் குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவை மீட்டுக் கொடுக்கலாமே!
எந்த வகையில் பார்த்தாலும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும் சரி, தமிழக மீனவர்கள் பிரச் சினையிலும் சரி, இந்திய அரசு சரியாக நடந்து கொண்டு இருக்கிறது என்று கருதுவதற்கு ஒரு துளி அளவு சாட்சியம்கூடக் கிடைக்கவில்லை என்பது வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டு இருக்கும் இந்தியாவுக்கு அழகு அல்ல!
குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர் களையும் வேட்டையாடும் இலங்கை அதிபரைக் காப்பாற்று வதுதான் தனது கடமை என்று கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு இந்தியா நிற்கிறதே - சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு எப்படி உயர்ந்து நிற்கும்?
இந்தியாவுக்குள்ளிருக்கும் மாநிலங்களுக்குத் தான் எப்படி நன்னம்பிக்கையும் பிறக்கும்?
இந்திய அரசு சிந்திக்குமாக!
இந்திய அரசு சிந்திக்குமாக!
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்தியா என்ன செய்யப் போகிறது?
- மதம் செல்லுபடியாகாது
- மத்திய அமைச்சருக்கு அழகல்ல!
- முகமூடிகள் கிழிகின்றன!
- விடுதலை வைப்பு நிதி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தனியார் கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வா?
- பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தின் இலட்சணம் பாரீர்!
- அவசரப் பணிகள்
- குஜராத் முதல் மாநிலமா?
- ஜெயேந்திரர் ஜே கோஷம் போட்டுத் திரிவது எப்படி?
Comments