Saturday, February 4, 2012

சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?


சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள்  உள்ளன. ஒன்பது கோள்கள் உள்ளன என்று நீங்கள் கருதினால், வேறொரு சூரிய மண்டலத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று தான் கருதவேண்டும்.
கோள் என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பது என்பது பற்றி நீண்ட காலமாக கருத்து வேறுபாடு கொண்டிருந்த அனைத்துலக வானவியல் யூனியனின் பொதுக்குழு 2006 ஆகஸ்ட் 24 அன்று ஒரு முடிவுக்கு வந்தது. கோள்கள் என்றால் அவை மூன்று நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். ஒன்று அவை சூரியனைச் சுற்றி வருவதாக இருக்க வேண்டும்.  இரண்டாவதாக, அது உருண்டை வடிவம் கொண்ட ஒரு பெரிய பிண்டமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக,  அவை சுற்றி வரும் பாதையில் இருந்த மற்றவை அகற்றப்பட்டிருக்க வேண்டும். அதாவது அவற்றின் சுற்றுப் பாதையில் வேறு எதுவும் குறுக்கிடாததாக இருக்க வேண்டும். ப்ளூட்டோவால்  முதல் இரண்டு நிபந்தனைகளை மட்டுமே நிறைவு செய்ய இயன்றது என்பதால், அது அளவில் குறைந்த கோள் (Dwarf Planet)  என்ற நிலைக்குக் கீழ் இறக்கப்பட்டது.
பூமியோ, ஜூபிடரோ அல்லது நெப்ட்டியூனோ கூட அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் தடைகள் நீக்கப்பட்டவையாக இல்லை என்று சில வானவியலாளர்கள் வாதாடுவர். என்றாலும் ப்ளூடோவின் முரண்பட்ட நிலைக்கு அது தக்க விளக்கம் அளிக்கிறது.
1930இல் ப்ளூடோவைக்  கண்டுபிடித்தவர்கள் கூட அதன் நிலை பற்றி தெளிவான முடிவு கொண்டவர்களாக இருக்கவில்லை.
அதனால் அதனை நெப்ட்டியூனைக் கடந்து சூரிய மண்டலத்தின் ஓரத்தில் இருக்கும் ஒன்று என்று பொருள்படும் டிரான்ஸ்-நெப்ட்டியூன்-பொருள் (trans-Neptune-object- TNA) என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.
ப்ளூட்டோ மற்ற அனைத்துக் கோள்களையும் விட மிகவும் சிறியதாகும். நிலவின் அளவில் அய்ந்தில் ஒரு பங்கு அளவே இருக்கும் இது மற்ற கோள்களில் ஏழு நிலவுகளை விடச் சிறியதாகும்.  இது தனது முக்கிய நிலவான சாரோனைப் போல இரு மடங்கு அளவு கொண்டது. இதுவும்,  இதை விடச் சிறிய  வேறு இரு நிலவுகளான நிக்ஸ் மற்றும் ஹைட்ரா ஆகியவை 2005இல் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் சுற்றுப் பாதை, மற்ற கோள்களின் சுற்றுப் பாதையில் இருந்து மாறுபட்டதாகவும்,  தாறுமாறானதாகவும்  இருப்பதாகும்.  அதன் கட்டமைப்பு முற்றிலும் வேறுபட்டதாகும். உள்வட்டத்தில் இருக்கும் நான்கு கோள்கள் நடுத்தர அளவு கொண்டவை; கற்பாறைகள் கொண்டவை. மற்ற நான்கு கோள்களும் மிகப் பெரிய அளவு கொண்டவை; வாயுக்கள் கொண்டவை. சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள அகலம் குறைந்த பெல்ட் போன்ற கூபியர் (Kuiper belt) பகுதியாகத் தோற்றம் பெற்றுள்ள  60,000 சிறிய வால்நட்சத்திரங்கள் போன்றவைகளில் ஒன்றாக இருக்கும் ப்ளூட்டோவை ஒரு சிறிய பனிக்கட்டிப் பந்து என்று கூறலாம்.
எரிகற்கள்,   TNO  மற்றும் இதனைப் போன்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணற்ற விண்கோள்களைப் போன்ற இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக சிறு கோள்கள் என்று அறியப்பட்டுள்ளனவாகும். அவை 371,670 என பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் மேலும் மேலும் 5000 புதியவை  கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட இதனைப் போன்ற விண்கோள்கள் 20 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை கோள்கள் என்று கருதப்படுவதற்கு தகுதி அற்றதாக மிகச் சிறிய அளவினைக் கொண்டதாக இருப்பவையாகும். ஆனால் அவற்றுள் 12 விண்கோள்கள் புளூட்டோவுடன் கோள் என்னும் அந்தஸ்து பெறுவதில் போட்டியிடக் கூடியவையாக உள்ளன.
அவற்றில் ஒன்றான 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட 2003UB313  என்பதற்கு தற்போது ஏரிஸ் (Eris) என்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது ப்ளூட்டோவை விடப் பெரியதாகும். செட்னா (Sedna), ஓர்கஸ் (Orcus), க்வோவார் (kuaor) என்ற மற்றவை வெகு தொலைவில் இருப்பவை அல்ல. மார்சுக்கும் ஜூபிடருக்கும் இடையே உள்ள இந்த விண்வெளி பெல்டில் உள்ள மிகப் பெரிய அளவு கொண்டவை ப்ளூடோ, ஏரிஸ் மற்றும் செரீஸ் ஆகியவையாகும். இவை மூன்றும் முதல் Dwarf Planets என்று அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


ஆகஸ்ட் 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...