பெரும்பாலும் அணுவினுள் எதுவுமே இல்லை. ஓர் அணுவின் பெரும் பகுதி வெற்றிடமாகவே இருப்பதாகும்.அதைப்பற்றி ஒரு சரியான கண்ணோட்டம் பெறவேண்டுமெனில், அனைத்துலக விளையாட்டரங்கம் அளவுள்ள அணு ஒன்றினைக் கற்பனை செய்து கொள் ளுங்கள். அதன் மேல்பகுதியில், ஒவ்வொன்றும் குண்டூசி முனையை விடச் சிறியதாக இருக்கும் எலக்டிரான்கள் (நுடநஉவசடி) உள்ளன. விளையாட்டரங்கின் பிச்சில் அணுவின் மய்யக் கரு (சூரஉடநரள) ஒரு சிறு பயறு அளவில் அமைந்திருக்கும்.ஒரு தனிமத்தின் பிரிக்க முடியாத மிகச்சிறிய பகுதிதான் அணு என்று நீண்ட நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. அதனால்தான் கிரேக்க மொழியில் உடைக்க முடியாதது என்ற பொருள் தரும் ஆடம் என்ற பெயர் இதற்கு வந்தது.பின்னர் 1897இல் எலக்டிரான் கண்டுபிடிக்கப்பட்டது. 1911இல் அதனைத் தொடர்ந்து அணுவின் மய்யக்கரு கண்டுபிடிக்கப்பட்டது.1932இல் அணு பிளக்கப்பட்டு நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அணுவின் மய்யக் கருவில் இருக்கும் மின்செறிவூட்டப்பட்ட புரோடான்களும், செறிவூட்டப்படாத நியூட்ரான்களும்தான் இன்னமும் மிகச் சிறிய கூறுகளாக இருந்தன. குவார்க்ஸ் (ளூரயசமள) என்று அழைக்கப்படும் இந்த சிறிய கூறுகளுக்கு வியப்பானது (ளுவசயபேநநேளள) என்றும் கவர்ச்சி (உயசஅ) என்றும் பெயரிடப்பட்டன. இவை பல்வேறுபட்ட சுவைகளிலிருந்து வந்தவையாக இருந்தனவேயன்றி பல்வேறு வடிவங்களிலிருந்து வந்தவையாக இல்லை. மய்யக்கருவை நீண்ட தொலைவில் உள்ள ஒரு வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கும் எதிர்மறை மின்செறிவூட்டப்பட்ட எலக்டிரான்கள் இப்போது அந்தப் பெயரில் அழைக்கப்படுவதில்லை. ஆனால் அது பி.டி.எஸ். (ஞசடியெடைவைல னுநளேவைல ஊயசபநள) என்று அழைக்கப்பட்டது.1950இல் 100க்கும் மேற்பட்ட சிறு அணுக்கூறுகள் காணப்பட்டன. பொருள் என்னவாக இருந்தாலும் சரி, எவர் ஒருவராலும் அதனை அதன் ஆழம் வரை சென்று காணமுடியவில்லை. இத்தாலி நாட்டில் பிறந்த இயற்பியலாளராக என்ரிகோ பெர்மி என்பவர் மேற்கொண்ட அணுஉலைப் பணிக்காக 1938இல் நோபல் பரிசு பெற்றார். அவர் கூறினாராம்: இந்த கூறுகள் அனைத்தின் பெயர்களையும் என்னால் நினைவு வைத்துக் கொள்ள முடியுமானால், நான் ஒரு தாவரவியலாளராக ஆகியிருப்பேன் என்று கூறினார்.ஓர் அணுவின் உள்ளே இருக்கும் கூறுகளின் மொத்த எண்ணிக்கை 24 என்று பெர்மிக்குப் பின் வந்த அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டனர். மிகச் சிறந்த ஊகமான இது ஸ்டேன்டர்ட் மாடல் (ளுவயனேயசன ஆடினநட) என்று அறியப்பட்டது ஆகும். எது என்ன என்ற ஒரு நல்ல அறிதலை நாம் பெற்றிருக்கிறோம் என்ற கருத்தை இப் பெயர் அளித்தது. பொதுவாக இந்தப் பிரபஞ்சம் அணுவைப் பொறுத்தவரை குறைந்த அளவு எண்ணிக்கை கொண்டதாக இருப்பது என்று நம்மால் கூறமுடியும். விண்ணில் சராசரியாக ஒரு கன அடி இடத்தில் ஒரு சில அணுக்கள் மட்டுமே உள்ளன. சில நேரங்களில் புவி ஈர்ப்பு விசை இவற்றை சில நட்சத்திரங்களை, கோள் கள் நோக்கி இழுப்பது, அதே அளவு அசாதாரணமானதாகத் தோன்றுவதாகும்.(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் கூந க்ஷடிடிம டிக ழுநநேசயட ஐபடிசயஉந பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- சிக்கன் டிக்கா மசாலா எங்கிருந்து வந்தது?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- சிக்கன் டிக்கா மசாலா எங்கிருந்து வந்தது?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment