Tuesday, February 14, 2012

இரு வழக்குகளும் ஊடகங்களும்


கருநாடக மாநிலம் பெங்களூருவில் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா மீது வருமானத் துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வழக்குக்குள் செல்வது நமது நோக்கமன்று.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச் சாரியா திறமையுடன் செயல்பட்டு வருகிறார்.  கருநாடக மாநில தலைமை வழக்கறிஞராகவும் (அட்வகேட் ஜெனரலாகவும்) இவர் நியமிக்கப் பட்டார்.
இந்த நிலையில் இரு அரசு பதவிகளில் ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இருக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், ஏன் வீண் சர்ச்சை என்ற நோக்கில் அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகினார். இது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியது.
சிறிய பதவியை வைத்துக் கொண்டு பெரிய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டாரே என்பதுதான் அந்த வியப்புக்குக் காரணமாகும்.
ஆனால், ஆச்சாரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது எதற்காக? செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் அரசு வழக்கறிஞர் பொறுப்பி லிருந்து ஆச்சாரியா விலக வேண்டும் என்பதுதான்.
கருநாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், மத்திய பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களும் இந்த அழுத்தத்தைக் கொடுத்ததாக ஆச்சாரியா பேட்டியே கொடுத்துள்ளார்.
இந்த மிகப் பெரிய பிரச்சினை மீது இந்தியாவில் உள்ள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்பதுதான் முந்தையதை விட மிக ஆச்சரிய மானது.
ஆனால், இந்தியாவில் உள்ள ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் அந்த ஆச்சரிய மும் ஒரே ஒரு நொடிப் பொழுதில் ஓடி மறைந்து விடும்.
ஊழலைப் பற்றி  வாயை ஒரு முழம் அகலமாக்கி அண்டம் கிழிய கத்தும் இந்த பி.ஜே.பி. எவ்வளவுக் கேவலமாக ஒரு முக்கிய வழக்கில் நடந்து கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது பி.ஜே.பி.யின் கடைந்தெடுத்த - தரம் தாழ்ந்த, வெட்கப்படத்தக்க புத்தியைக் காட்டுவதாகும்.
நீதித் துறையிலேயே தலையிடுவது பணத் தொடர்பான ஊழலை விட அருவருப்பான செயல் அல்லவா?
பி.ஜே.பி. தனித் தன்மையானது - தார்மீக நோக்கம் கொண்டது என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு இது ஒன்று போதாதா?
இன்னொரு வழக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் மீதான கொலை வழக்கு.
61 நாட்கள் சிறையில் இருந்த ஜெயேந்திர சரஸ்வதிக்குப் பிணை கொடுத்தது தவறு என்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. பாதிக்கும் மேலான சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக ஆக்கப்பட்டு விட்டன.
போதும் போதாதற்கு இந்த வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி நீதிபதியிடம் பேரம் பேசியது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட புதுச்சேரி நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையையும் இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் அப்படியே அமுக்கி விட்டன. இதன் பின்னணியை பொது மக்கள் உணர வேண்டும்.
நீதி பற்றியும், ஊழல் பற்றியும் மற்ற மற்ற விசயங்களில் எல்லாம் ஓங்கி சத்தம் கொடுக்கும் பார்ப்பன ஊடகங்கள் அவர்கள் சம்பந்தப்பட்டவை என்றால் உண்மைகளின் கழுத்தைத் திருகிக் கொன்று விடுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர் பிறந்த தேதியை மாற்றி எழுதி மோசடி செய்து பதவியில் நீடித்தபோதும் கூட, இந்தப் பார்ப்பன ஊடகங்கள் இப்படித்தான் நடந்து கொண்டன என்பதையும் இந்த நேரத்தில்  நினை வூட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#2 pugazhendhi 2012-02-17 08:27
ஊடகங்கள் என்றால் பத்திரிகைகளையும ் சேர்த்துதான் சொல்வது வழக்கம் கட்டுரையாளர் சொல்வது தினமலர்,தினமணி, ஹிந்து எக்ஸ்பிரஸ் போன்றவைகளும் ஆனந்தவிகடன் ,குமுதம் ரிபோர்ட்டர் ,ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு பத்திரிகைகளை பற்றி
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 mugil 2012-02-15 11:50
தமிழ்நாட்டில் உள்ள டிவி ஊடங்கங்கள் எல்லாம் பார்பனர்கள் கையில் இல்லையே. எல்லாம் உங்கள் கழக முதலாளிகளிடம் தான் உள்ளது. மற்றும் ஆச்சர்யா ஒரு பர்ர்பனர் தானே. அவர் எப்படி ஜெ வுக்கு எதிராக நிற்கிறார் ? உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்களோ ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...