Friday, January 13, 2012

கேரட் கிழங்கு எந்த வண்ணம் கொண்டது ?



தங்களின் உட்புறத்தில் காணப்படும் ஆரஞ்சு வண்ணத்தை கேரட் கிழங்கு 5,000 ஆண்டு காலமாக வெளிப்படுத்தாமல் இருந்தது.
கேரட்டை கி.மு. 3000இல் மனிதன் முதன் முதலாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்துள்ளது. அப்போதிருந்த கேரட்டுகள் வெளியில் கருஞ் சிவப்பு நிறத்தையும் உள்பக்கம் மஞ்சள் நிறத் தையும் கொண்டிருந்தன.
பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர் களும், பெரும்பாலும் மருத்துவப் பயன்பாட்டுக் காகவே இந்த காய் வகையைப் பயிரிட்டனர். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டு மருத்துவர் உடலில் இருந்து வாயுவை வெளியேற்ற கேரட்டைப் பரிந் துரைத்துள்ளார். கேரட்டின் நெருங்கிய உறவான பார்ன்சிப்பில் (Parsnip)   இருந்து வேறுபடுத்தி முதன் முதலாக அடையாளம் கண்டவர் இவர்தான்.
கேரட் விதைகளை அராபிய வர்த்தகர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரப்பினர். அரேபிய கேரட்டுகள் பல வண்ணங்களில் கருஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்பிலும் கூட பூத்துக் குலுங்கின. டச்சு நாட்டு அரசரின் அரண்மனையின் வண்ணமான ஆரஞ்சு வண்ணத்துடன் இது ஒத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முதன்முதலாக ஆரஞ்சு கேரட் ஹாலந்து நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் வளர்க்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டில் கேரட் தயாரிக்கும் அய்ரோப்பிய நாடுகளில் டச்சு நாடுதான் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. இன்று உலகில் காணப்படும் அனைத்து வகை கேரட்டுகளும் அவர்களின் நான்கு ஆரஞ்சு வண்ணங்கள் கொண்ட கேரட்டின் வழித்தோன்றல்களே ஆகும்.
ஆரஞ்சு வண்ணத்தில் அல்லாத கேரட்டுகளுக்கு இப்போது ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் கொண்ட கேரட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. 1997 இல் அய்ஸ்லாந்து நாட்டில் சாக்லேட் சுவை கொண்ட கேரட் ஒன்று உருவாக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
1903 ஆம் ஆண்டில் 287 வகை கேரட்டுகள் இருந்தன என்று அய்க்கிய நாடுகள் மன்றம் தெரிவிக்கிறது. ஆனால் இப்போது அவற்றில் 21 வகைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.  இது 93 விழுக்காடு வீழ்ச்சியாகும்.
பனிப்படிமங்கள் வளர்வதைத் தடுக்கும் ஒரு புரதசத்து சில வகையான கேரட்டுகளில் உள்ளன. உறைவதற்கு எதிரான சத்தை இவ்வாறு இயற்கையாக கேரட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டு, மருத்துவப் பயன்பாட்டுக்காகவும்,  உறைநிலையில் உணவை பாதுகாத்து வைக்கும் காலத்தை நீட்டிக்கவும்,  உடல் சதைகளைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...