Wednesday, January 25, 2012

கடவுள் ஒரு நோய்க் கிருமி


ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உலக நாத்திக அறிஞர் டாக்கின்ஸ் கருத்துரை


ஜெய்ப்பூர், ஜன. 25- மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன என்ற ஒரு காரணத் துக்காக யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத வகையில் சிலர் செயல் படுவது எவ்வாறோ ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றார், கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (The god Delusion)
என்ற நூலை எழுதிய உலகப் புகழ்பெற்ற நாத்திகர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.
(அதை திராவிடர் கழகம் தமிழாக்கம் செய்து வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்).
எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக இறந்து (அழிந்து) போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று புகழ் பெற்ற அறிவியலாளரும், உலகில் பெரும் அளவு விற்பனையான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை எனும் நூலின் ஆசிரியருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறினார்.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடவுள் நம்பிக்கை ஒரு நோய்க் கிருமி என்று  கடுமையாக சாடினார். சல்மான் ருஷ்டியை இந்த விழாவில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியது, ஒரு பெரும் அவமானம் என்று  அவர் கடுமை யாகக் கண்டித்தார்.
மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அள வுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப் படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப் படையிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனுதாபம் காட்டப்படக் கூடாது என்று அவர் கூறினார்.
மத உணர்வுகள்
எனக்கு எவர் மீது குறை இருந் தாலும், அதற்காக அவரை நான் எதுவும் செய்துவிடமுடியாது.  ஆனால், தனது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட் டன என்ற ஒரு காரணத்துக்காகவே, யாருக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டிராத வகையில் சிலர் செயல்படுவது எவ்வாறோ ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
முதன்முதலாக சல்மான் ருஷ்டியின் மீது மரணதண்டனை விதித்து மதத் தீர்ப்பு (பாட்வா) அளிக்கப்பட்டதற்குப் பிறகு எழுதப்பட்ட தனது அறிக்கையை டாக்கின்ஸ் மாற்றி எழுதி இந்த திருவிழா வில் படித்தார். 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் இருந்த கத் தோலிக்கர் சிலர் வாடிகனில் இருந்த சில மூத்த மதத் தலைவர்களுக்கு, முதலாம் எலிசபெத் ராணியைக் கொலை செய்வது வாடிகனுக்கு ஏற்புடையதா என்று கேட்டனர்.
கத்தோலிக்க மதத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களை விரட்டியவர் என்பதால் ராணியைக் கொலை செய்வது பாராட்டத்தக்க செயல்தான் என்று வாடிகனில் இருந்து கூறப்பட்டது என்பதை டாக்கின்ஸ் சுட்டிக்காட்டினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...