கழகத் தோழர்களே! யாரும் சாதிக்க முடியாத ஒரு செயலைச் சாதித்து முடித்து விட்டோம்!
ஒரு ஏட்டுக்கு 50 ஆயிரம் சந்தாவா? உண்மையா? எப்படி முடியும்? என்று பல கட்சிக்காரர்களும் ஆச்சரியக் குறிகளாக நிற்கின்றனர்.
நமது இயக்க வரலாற் றில்கூட இது புதிது - புதிது! சாதனை மகுடத்தில் ஒரு எவரஸ்டே எழுந்து நின்று புன்னகைக்கிறது!
இதன் பொருள் என்ன? இயக்கம் எழுச்சியோடு இருக் கிறது - தொண்டர்கள் தோள் தூக்கி நிற்கின்றனர்.
தமிழர்கள், நம்மிடமி ருந்து நிரம்பவே எதிர் பார்க் கிறார்கள் - கழகத்தின்மீது நம்பிக்கை என்னும் நங்கூரத் தைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.
தந்தை பெரியாருக்குப் பின் வெறிச் சோடிப் போகா மல் தமிழினத்தை, தமிழ் நாட்டைக் கட்டிக் காத்தவர் நமது வீரமணி என்றாரே - மறைந்த தவத்திரு குன்றக் குடி அடிகளார் அந்த உணர்வு தமிழ்நாட்டில் தலைதூக்கி நிற்கிறது என்பதுதான் விடு தலை 50 ஆயிரம் சந்தா திரட்டல் என்னும் பேழையில் உள்ள முத்துக்கள் ஆகும்.
இந்தக் கால கட்டத்தில் கழகத்திற்கு - அதன் போர் வாளான விடுதலைக்கு ஏராள சவால்கள்! சவால்கள்!!
மதச்சார்பின்மையை மண்ணில் புதைத்து இந்துத்துவாவை மனுதர்மத்தை - குடியரசுத் தலைவரின் மாளிகையில் பறக்கவிடலாம் - நாடாளு மன்ற வளாகத்துக்கு ராம ராஜ்ஜியம் என்று பெயர் சூட்டலாம் என்று சூளுரை யோடு நிர்வாண ஆட்டம் போடும் அகில இந்திய அள விலான காவிகளின் கூட்டம் ஒருபுறம், ராமனை எரித்து, இராவண லீலா நடத்திய பெரியாரின் தமிழ் மண்ணில் அந்தப் பருப்பு வேகாது என்று தெரிந்த நிலையில், தேர்தல் கூட்டணி என்ற வலை விரித்து கல்யாண வீட்டில் பிள்ளை வளர்க்கலாம் என்ற நச்சுப் பல் நர்த்தனச் சிரிப்பு இன்னொருபுறம்!
மதச் சார்பின்மைக்கு மாறான விளக்கம்கூறி, மத வாத நச்சுச் செடிக்குத் தண் ணீர் ஊற்றக் கிளம்பியிருக் கும் நீதித்துறை இன்னொரு புறம். திராவிடப் போர்வையில் ஆரியப் பல்லக்குகளை பவனி வரச் செய்யத் துடிக்கும் ஆரி யத்தின் மறைமுகத் திட்டங் கள் மறுபுறம்!
பல்கலைக் கழகங்களில் கூட சோதிடம் போன்ற மூடத் தனப் போதை மாத்திரை களை உருட்டிக் கொடுக்க முயலும் மூர்க்கத்தனம் ஒரு பக்கம்!
பண்பாட்டைச் சீர்குலைக் கும் வகையில் பக்கம் பக்க மாக மூடத்தன ஆபாசங் களையும், பாலியல் வக்கிரங் களையும் போட்டு நிரப்பிப் பணம் பண்ணும் பத்திரி கைகள் - ஒளிபரப்புச் சாத னக் குவியல்கள் இன்னும் ஒரு பக்கம்.
பொது வாழ்வு என்பதே அரசியல்தான் - பதவிதான் - சுகபோகம்தான் என்று நினைக்கும் நிலைகெட்ட நிலைப்பாடு!
நாடு, இனம், மொழி, தன்மானம், சமூகநீதி, ஒழுக்க முறை - இவற்றை எல்லாம் ஒவ்வாமையாகக் கருதி, பல்வேறு போதைச் சக்கரங்களில் சிக்கி எதிர் காலத்தைக் காவு கொடுக்கத் தயாராகி, இளமைக் குணத்தை முதுமைப் படுகுழியில் தன் னைத்தானே தள்ளிக் கொண்டிருக்கும் இளைஞர் களின் தள்ளாட்டம்!
இவற்றையெல்லாம் சந்திக்க வேண்டிய பேரறிவுப் பேராண்மையும், பெரு உழைப் பும் திராவிடர் கழகத்தைச் சார்ந்திருக்கிறது. நமது பிரச்சாரத்தின் தோள்களில் துடிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்! மறக்க வேண்டாம்!!
கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் இயக்கத் தையும் இயக்க ஏடுகளையும் காலத்துக்கேற்ற பக்குவத்தில் வடித்துக் கொடுத்து வரு கிறார். அதன் தாக்கத்தின் தங்கப் பிழிவுதான் 50 ஆயி ரம் விடுதலை சந்தாக்கள் என்ற சாதனை!
2011 டிசம்பர் 24ஆம் தேதியோடு அந்தப் பணி முடிந்துவிடவில்லை தோழர் களே! சந்தா சேர்ப்பு இயக்கத் தின் இன்னொரு பரிணாமத் தின் தொடக்கம்தான் அது!
ஆறு மாத சந்தாக்கள் கண் மூடி கண்திறப்பதற்குள் காணாமற் போய் விடக் கூடும். அந்த நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டு விடாதபடி, அச்சந்தாக்கள் புதுப்பிக்கப் பட புத்தாக்கத்தோடு நாம் செயல்படுவோம்!
ஒரு காலத்தில் குடிஅரசு இதழின் சந்தாதாரர்களே சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்கள் என்று இருந்த நிலை உண்டு. இது தன்மான இயக்கத்தில் மட் டுமே காணப்பட்ட புதுமை யின் நெகிழ்ச்சி.
அந்த உணர்வோடு விடு தலை சந்தாதாரர்களோடு நெருக்கமான தொடர்புகள் என்னும் கயிற்றால் பிணைத் துக் கொண்டு நம்முடைய இயக்க நிகழ்ச்சிகளில் எல் லாம் அவர்களை முதற் கட்டமாகப் பார்வையாளர்கள் இருக்கைகளில் அமர்த்தி, நமது உறவை நெருக்க மாக்குவோம் - நமது விடு தலைக் குடும்பத்தின் குழு மத்தில் பங்குதாரர்களாகப் பதிவு செய்வோம்.
50 ஆயிரம் விடுதலை சந்தாதாரர்கள் என்றால் நமது இயக்கத்தின் வைப்பு நிதி என்ற நிலையை உறுதிப்படுத்துவோம். இந்தத் திசையில் நம் பயணம் முக்கியம்! முக்கியம்!! முக் கியம்!!!
50 ஆயிரம் சந்தா சேர்ப் புப் பணி முடிந்து விட்டது - நம் கடமையும் முடிந்து விட்டது என்று போர்வையை இழுத்துப் போட்டுத் தூங்கக் கூடாது - நாம் தூங்கினால் எதிரி விழித்துக் கொள்வான் என்று பொருள்!
இன்னொரு நினைவூட் டல்! கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளன்று (24.12.2011) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நமது தலைமை நிலைய செயலாளர் மானமிகு வீ. அன்புராஜ் அவர்கள் ஒரு கருத்துருவை முன்வைத்தார்.
அதுதான் விடுதலைக்கு வைப்பு நிதி ரூபாய் ஒரு கோடி என்ற விதைக்கோட்டையாகும்.
அறிவித்து முடிப்பதற்குள் நமது தோழர்கள் தங்களின் தாராளக் கொள்கை உள்ளத் தைத் திறந்து காட்டினர்.
நமது தலைவர் அவர்களிடம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து முன்னூறு ரூபாயை முதல் தவணை யென்று கூறி அளித்தனர். நன்கொடை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட தொகை ரூ.4,78,000.
ஒரு திங்கள் ஓடிவிட்டது. கருஞ்சட்டை தோழர்கள் மறக்கக் கூடியவர்கள் அல் லவே! இருபத்து நான்கு மணி நேரமும் கண் தூங்காது ஓடும் சுவர் கடிகாரம் ஆயிற்றே!
நினைவூட்ட அல்ல- அந்த பணியின் தொடர் ஓட்டத்தில் ஒரு உற்சாக ஊட்டச் சத்து - டானிக் - அவ்வளவுதான்!
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் தலைமையில் நாளை நடக்க இருக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்துத் தோழர்கள் ஆர்வமுடன் முடிவெடுக்க உள்ளனர்.
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் தலைமையில் நாளை நடக்க இருக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்துத் தோழர்கள் ஆர்வமுடன் முடிவெடுக்க உள்ளனர்.
எதிலும் தஞ்சைதானா! நம் மாவட்டம் எதில் குறைந்து போய் விட்டது? என்ற செல்லமான கோபத் தோடு திட்டமிடுங்கள் தோழர்களே!
தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிடர் கழகம் இல்லை என்றால் விடுதலை யின் முழக்கம் இல்லை யென்றால்???
இந்தக் கேள்விகளை ஒவ்வொரு தமிழன் வீட்டுக் கும் கொண்டு செல்லுவோம்.
இந்தக் கேள்விகளை ஒவ்வொரு தமிழன் வீட்டுக் கும் கொண்டு செல்லுவோம்.
கடவுள் மறுப்பை சீர ணிக்க முடியாதவர்கள்கூட நமது உழைப்பு செயல்பாடு காரணமாக பலன் தரும் கனிகளைச் சுவைக்காத ஒரே ஒரு தமிழன் வீடு உண்டா? தமிழன் உண்டா?
இதைவிட பலம் நமக்கு வேறு என்ன வேண்டும்? இந்தப் பலத்தோடு ஒவ் வொரு கதவையும் தட்டுங் கள். எதிரிகளுக்குப் பண பலம் உண்டு, பிரச்சார பலம் உண்டு, அவர்கள் வெட்டி வைத்திருக்கும் கண்ணி வெடிகள்! உண்டு.
எதிரிகளின் பலத்தைக் குறைவாக மதிப்பிட வேண் டாம். ஆனாலும் நாம் ஒன்று திரண்டால் ஊ என்று ஊதி முடித்து விடலாம்.
பம்பரம் என்பார்கள் அது கூட குறிப்பிட்ட நேரத்தில் தன் சுற்றை முடித்து விட்டு தலை ஆடி விடும். பெரியார் தொண்டர்களான இந்தப் பம்பரத்துக்குத் தலைச் சுற்றல் ஏது? தலைத் தூக்கலும், தலை நிமிரலும் தானே நமது இரு விழிகள் - தோள்கள், கால்கள், கரங்கள்! எட்டு கோடி தமிழர்களில், எட்டில் ஒரு பாகம்தான் ஒரு கோடி ரூபாய்!
உரிமையற்ற மக்களாய்த் தெருக்கோடியில் கிடந்த நாம், இன்று தலைநிமிரக் காரணமாக இருந்த விடு தலைக்கு ஒரு கோடியைத் திரட்டுவோம்! வாழ்க பெரியார்!
கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment