நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்: மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். அறிவியலில்கூட, ஒரு கால கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம், மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபால்: அறிவியல் கண்டுபிடிப்புகள் தவறாகியிருக்குன்னு நீங்க தான் சொல்றீங்க... இப்படி, எப்போ மாறும்னே தெரியாத விஞ்ஞானத்தை நம்புறதா, ஆயிரமாயிரம் வருஷங்களா மாறாத மெய் ஞானத்தை நம்புறதான்னு நீங்களே சொல்லுங்க..! - (தினமலர் 31.12.2011)
அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறுவதன் பொருள் - அறிவியல் என்பது வளர்ச்சி அடையக் கூடியது - மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கூறுகிறார் - இதில் என்ன குற்றம்?
மாற்றமே கூடாது மனிதன் குரங்காகவே இருக்க வேண்டும் என்று ஹனுமான் பக்தர்களான தினமலர் கூட்டம் கருதுகிறது போலும்.
ஆயிரமாயிரம் வருஷங்களாக மாறாத மெய் ஞானம் என்றால் - அதற்குப் பெயர் காட்டுமிராண்டித்தனம் என்பதுதானே! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டுமா? மாற்றம் என்பதே மாறாதது என்பதுகூட தெரியவில்லையே - ஹி... ஹி...
No comments:
Post a Comment