கேள்வி: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநிலங்கள் மீது மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று கி.வீரமணி கூறியுள்ளாரே?
பதில்: இட ஒதுக்கீடு விஷயத்தில் நீதிமன்ற உத் தரவை மீறிய மாநிலங்களுக்கும் இதே நியாயம்தானா? - (துக்ளக் 18-1-2012)
இட ஒதுக்கீடு என்பதில் அவாள் எவ்வளவு கொந்தளிப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் பதிலே சாட்சியம். மனதில் குமைந்து கொண்டு இருப்பதுதானே பொங்கி வெளிவரும்?
அது சரி, எந்த மாநிலம் இட ஒதுக்கீட்டில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மீறியிருக்கிறது? அறிவு நாணயத் தோடு சுட்டிக் காட்டியிருக்க வேண்டாமா?
தமிழ்நாட்டில் 50 சதவிகிதத்திற்கு மேல் 69 சதவிகிதம் அளிக்கப்பட்டு இருப்பதை மனதிற் கொண்டு சொல்லியிருக்கக்கூடும்.
இது ' சோ' ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல் என்பதற்கு அடையாளமாகும்.
திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கருத்துரு கொடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சட்டம் (31-C) இந்திய அரச மைப்புச் சட்டம் 76 ஆவது திருத்தம் பெற்று, ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டு விட்டது என்பதோடு அல்லாமல், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு சட்டம் செல்லும்; 69 சதவிகிதம் தொடரலாம் என்று தீர்ப்புக் கூறியதே (13-7-2010). எந்த உலகத்தில் இருக்கிறது இந்தக் கிணற்றுத் தவளை?
No comments:
Post a Comment