கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் கூட்ட தீர்மானம்: ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. அரசு அதிகாரிகளையும், தன் கட்சி நிர்வாகிகளையும் மாறுதல் செய்து, நிர்வாகத்தை சீரமைத்து வருவதை பாராட்டி வரவேற்கிறோம்.
டவுட் தனபாலு:
என்னப்பா இது....அதிசயமான தீர்மானமா இருக்கு..... ராமதாஸ் தலைமையிலான பா.ம.கா, வா...வேல்முருகன் தலைமையிலான பா.ம.க.,வா.....யாரு இப்படி கி.வீரமணிக்கு போட்டியா கிளம்பியிருக்காங்கன்னு புரியலையே.....!
(தினமலர் 29.12.2011)
அதிமுக ஆட்சியில் தப்பித் தவறி நல்லது நடந்து விட்டால் அதைக்கூட திராவிடர் கழகத் தலைவர் வரவேற்றுவிடக் கூடாதாம்!
முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது தினமலருக்கு என்ன கோபமோ? மனஸ் தாபமோ? ஏதாவது சிபாரிசு எடுபட வில்லையோ!
No comments:
Post a Comment