Thursday, December 29, 2011

ஜெயலலிதா மீது தினமலருக்கு என்ன கோபமோ?


கடலூர் வடக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் கூட்ட தீர்மானம்: ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. அரசு அதிகாரிகளையும், தன் கட்சி நிர்வாகிகளையும் மாறுதல் செய்து, நிர்வாகத்தை சீரமைத்து வருவதை பாராட்டி வரவேற்கிறோம்.
டவுட் தனபாலு:
என்னப்பா இது....அதிசயமான தீர்மானமா இருக்கு..... ராமதாஸ் தலைமையிலான பா.ம.கா, வா...வேல்முருகன் தலைமையிலான பா.ம.க.,வா.....யாரு இப்படி கி.வீரமணிக்கு போட்டியா கிளம்பியிருக்காங்கன்னு புரியலையே.....!
(தினமலர் 29.12.2011)
அதிமுக ஆட்சியில் தப்பித் தவறி நல்லது நடந்து விட்டால் அதைக்கூட திராவிடர் கழகத் தலைவர் வரவேற்றுவிடக் கூடாதாம்!
முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது தினமலருக்கு என்ன கோபமோ? மனஸ் தாபமோ? ஏதாவது சிபாரிசு எடுபட வில்லையோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...