Monday, December 19, 2011

பார்ப்பனரல்லாத பல்துறைத் தமிழர்களே!


பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது என்று நீலிக் கண்ணீர் விடும் தோழர்களே!
தலைவர்களையும், பாடுபட்டவர் களையும் குறை கூறும் தோழர்களே!
நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்?
ஆங்கிலம் கற்று, உத்தியோகத்திலிருக்கும் பார்ப்பனரல்லாதாரும், வக்கீல் பார்ப்பனரல்லாதாரும், அக் கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் ஜஸ்டிஸ் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆகி, அதைப் படித்திருப்பீர்களா?
அல்லது வெட்கப்படும் தமிழ் மக் களாவது ஒவ்வொருவரும் குடிஅரசு  விடுதலை வாங்கிப் படித்திருப்பீர்களா?
அப்படியானால்  ஜஸ்டிஸ் பத்திரிகைக்கும், குடிஅரசுக்கும் முறையே 1 மாதம், 2,500, 1,000, 250 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்?
பார்ப்பனர்களைப் பாருங்கள். அவர் கள் முயற்சியைப் பாருங்கள். அவர்கள் பத்திரிகைகளை அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் பாருங்கள். ஆகவே கட்சி ஏன் ஜெயிக்கவில்லை? யாரால்? என்பதை இப்போ தாவது உணருங்கள். ஆத்திரப்படுவதில் பயனில்லை.
- இப்படிக்கு
கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன்
(விடுதலை 14.3.1937)
இன்றைக்கு 74 ஆண்டுகளுக்குப் பின் மேலே கண்டவற்றைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கலாமே!
எது எது இன்றைக்கும் பொருந்துகிறதோ, அவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
நடந்து முடிந்த தேர்தலில் பார்ப்பனர் அல்லாதார் கட்சி தோற்றுப் போகவில்லையா?
1937 விடுதலையில் எழுதப்பட்டது இதற்கும் பொருந்தவில்லையா?
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் ஏட்டுக்குச் சந்தாதாரராக ஆவது அடிப்படைக் கடமை அல்லவா?
கட்சி உறுப்பினர் என்றால் அதன் பொருள் என்ன? உறுப்பினர் அட்டையோடு சேர்ந்தது தான் இயக்க ஏட்டின் சந்தாவும். இரண்டையும் ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதே - கூடாதே! இவை இரண்டும் இரட்டைக் குழந்தைகள் - ஒரு கொடியில் பூத்த இரட்டை மலர்கள். கழகத் தோழர்கள் உறுப்பினர்கள் சந்தா சேர்ந்தாலே அக்கணமே தீர்ந்தது நமது இலக்கு!
பார்ப்பனர்களைப் பாருங்கள் என்று அன்று விடுதலை சொன்னதே!
தினமலர், தினமணி வாங்காத பார்ப்பனர் கள் உண்டா? கல்கி, ஆனந்தவிகடன் வாங் காத கடைசிக் கிறுக்கன் கூட அக்கிரகாரத்தில் கிடையாதே! விடுதலையால் விடுதலை பெற்ற தமிழர்களே, உங்கள் கடமை என்ன? சமூக நீதி பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களே சந்தா சேர்ந்துவிட்டீர்களா விடுதலைக்கு?
விடுதலையின் சீரிய பணியால் மிகுதியும் பலனடைந்த பெண்குலமே, உம் கையில் இருக்க வேண்டியது விடுதலை என்னும் போர்வாள் அல்லவா?
பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்களே, மருத்துவர்களே, உங்கள் வாழ்வுக்கு அடித் தளமிட்டது விடுதலை என்னும் வீர மறவன் அல்லவா? தமிழ்நாடு அரசுப் பணியாளர்களே, உங்களை அங்குலம் அங்குலமாகப் பொத்திப் பொத்தி வளர்த்தது விடுதலை என்னும் தாய்ப்பால் அல்லவா? இரகசியக் குறிப்பேடு என்னும் சூழ்ச்சியைச் சுக்கல் சுக்கலாக்கி கிழித் தெறிந்தது விடு தலையாகிய இராவணன் அல்லவா? இடையில் இருப்பது இன்னும் 5 நாட்களே! 50 ஆயிரம் சந்தாக்கள் என்னும் இலக்கை முடிக்க இன்றே, இப்பொழுதே, இக்கணமே களத்தில் இறங்குங்கள், எஞ்சிய பணிகளை எடுத்து முடிப்பீர்!  முடிப்பீர்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...