Monday, December 5, 2011

மூட நம்பிக்கைகளை மாய்த்து மனிதத் தன்மையை வளர்க்கவும்


பெரியார் அவர்கள் பேசுகையில், இது பகுத்தறிவு காலம்; புரட்சியுகமாகும்; மூட நம்பிக்கைகள் சரிந்து பகுத்தறிவுக் கொள்கைகள் மலை போல வளரும் காலம் இது என்று குறிப்பிட்டு அதற்குப் பல உதாரணங்களையும் எடுத்துச் சொன்னார்கள். அவதார புருஷர் வாக்கு, ரிஷிகள் வாக்கு, ராமன் வாக்கு என்பதெல்லாம் காற்றில் பறக்கின்றன. பிரபு வந்து சொன்னாலும் கோவிலை இனி எவனும் கட்டமாட்டான். இருக்கிற கோவில் போதும்; பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி கட்டு என்றுதான் சொல்வான் எனப் பெரியார் விளக்கமாக உரைத்தார்கள். இது புரட்சி யுகம் என்பதற்கு சக்கரவர்த்திகள், சமஸ்தானாதிபதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய புரட்சிக் காலத்தில் நம்மை அதற்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம். நாம் காட்டு மிராண்டிக் கொள்கைகளைக் கட்டி அழுது கொண்டிருத்தலாகாது என வலியுறுத்தினார். தென்னாப்பிரிக்கா, இலங்கை, மலாயா முதலிய நாடுகளுக்கு எல்லாம் தமிழர்கள் சென்றது ஏன்? பிறந்த நாட்டில் அவர்கள் சூத்திரர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டது தானே காரணம்? அந்தச் சூத்திரப் பட்டம் ஒழிந்து நம்மவர்களை மனிதராக்கத் தான் பாடுபடுகிறோம் என்று குறிப்பிட்டார்கள். திருக்குறளின் சிறப்புப் பற்றிப் பேசுகையில், ஆயிரம் தடவை இராமாயணம் படிப்பதும் சரி. இராமாயணத்தில் 100 பாடல் படிப்பதும் சரி. குறளில் ஒரு பாட்டு படிப்பதும் சரி; இராமாயணத்தினால் அறிவு மழுங்கும்; குறள் படிப்பதால் அறிவு பெருகும் என்றார்.

மக்களுடைய ஒழுக்க நெறியை வகுத்து மேன்மைபடுத்துவது குறள் என்றார். மேலும் கூறுகையில், என்னைப் பணக்காரன் என்று சிலர் நினைக்கிறார்கள்; எனக்கு ஒன்றுமில்லை. இருக்கிற பணம் எல்லாம் இயக்கத்திற்குத் தான். எனக்கு ஒரு காசு கூட கிடையாது என்று பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(27.12.1954 அன்று சிரம்பான் (மலாயா) பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் உரை - விடுதலை 2.1.1955

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...