2012ஆம் ஆண்டுக்கான கழக வேலைத் திட்டங்கள்
சமூகநீதியின் அடுத்த கட்ட உரிமைகளுக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்! முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகம் பொதுக் குழுவில் நிறைவேறின
திராவிடர் கழக பொதுக்குழுவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் (சென்னை, 24.12.2011)
இப்பொதுக்சென்னை, டிச. 24- 2012ஆம் ஆண்டுக்கான திராவிடர் கழக வேலைத் திட்டங்கள் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக உரிமைகள், தமிழக மீனவர்கள் உரிமை, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான வழக்கினை விரைவு படுத்தி விசாரணை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
24.12.2011 சனிக்கிழமை காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில், திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் எண்: 1
இரங்கல் தீர்மானம்
பெரியார் பெருந்தொண்டர் சீரிய கழகத் தோழர் அடையாறு கோ. அரங்கநாதன் (வயது 82 - மறைவு 1.10.2011) கழக வீராங்கனை மதுரை அன்னத்தாயம் மாள் (வயது 82 - மறைவு 3.10.2011) தருமபுரி மாவட்டம் கதிரம்பட்டி பெரியார் பெருந்தொண்டர் தீ. பொன்னு சாமி (7.10.2011) அரியலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் க. மாரியப்பன் (7.10.2011) பெரியார் பெருந் தொண்டர் அம்பகாத்தூர் காத்தமுத்து (15.10.2011) நீடாமங்கலம் சுயமரியாதை வீரர் எம். சாரங்கபாணி (வயது 88 - மறைவு 19.10.2011) வலங்கை ஒன்றியம் கீழ விடையல் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் - சட்டஎரிப்பு வீரர் சிலுவை முத்து (31.10.2011) திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் கி. இராம மூர்த்தி (வயது 65 மறைவு 9.11.2011) திருச்சி வரகனேரி பெரியார் பெருந்தொண்டர் குஞ்சையா (வயது 85 - மறைவு 22.11.2011); திண்டிவனம் - ஒலக்கூர் ஒன்றிய திராவிர் கழகச் செயலாளர் அ. மோகன் (18.11.2011) கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் அ. குழந்தைவேலு (வயது 70 - மறைவு 2.12.2011) திருவாரூர் மாவட்டம் கண் கொடுத்த வணிதம் பெரியார் பெருந்தொண்டர் எம். தங்கையன் (4.12.2011), முதுபெரும் சுயமரியாதை வீரர் மயிலாடு துறை தியாகி பூட்டுக்கடை தங்கராசு (வயது 96 - மறைவு - 15.9.2011) லால்குடி வட்டம், திராணிப் பாளையம் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் அழகிரிசாமி (வயது 92 - மறைவு 20.9.2011) கும்ப கோணம் வட்டம் சோழநாதபுரம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாகசுந்தரம் (வயது 80 - மறைவு 25.9.2011) திருநெல்வேலி - மேலப்பாளையம் - கழக வீராங்கணை - இரத்தினசாமி அவர்களின் இணையர் தவமணி (வயது 66 - மறைவு 24.9.2011) தஞ்சாவூர் நகர பெரியார் இலக்கிய அணியின் தலைவர் சுந்தர சாம்பசிவம் (வயது 52 - மறைவு 24.9.2011) சென்னை - பெரம்பலூர் கழக வீராங்கனை இந்திராணி - சபாபதி (வயது 83 - மறைவு 17.12.2011).
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அறிவொளி அவர்களின் அன்னையார் மு.அம்மாக் கண்ணு (வயது 81 மறைவு 13.10.2011) திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இராயபுரம் கோபால் அவர்களின் தந்தையார் வி. இராமசாமி (வயது 96 - மறைவு 4.11.2011) தேனி மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் முருகன் அவர்களின் அன்னையார் (மருத்துவமனைக்கு உடற்கொடை அளிக்கப்பட்டுள்ளது) சா. இரகுபதி (வயது 82 - மறைவு 27.10.2011) கல்லக்குறிச்சி மாவட்டம் க.அலம்பளம், பெரியார் பெருந்தொண்டர் மு. அந்தலா ளன் (வயது 79 மறைவு - 19.12.2011), பொத்தனூர் ப.சுப்பிரமணியம் என்கிற கோபால் ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் - இவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர்களுக்கும் தோழர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இளமைக் கால நண்பர் திருவாரூர் தென்னன் (வயது 90 - மறைவு -15.12.2011) முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், சிறந்த எழுத்தாளருமான க. சுப்பு (29.10.2011) ஈழத் தமிழர்களின் முன்னோடி ஆ. கந்தையா (வயது 83 - மறைவு 4.10.2011) ஆகியோரின் மறைவிற்கும் இப்பொதுக் குழு இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2 (அ)
(அறிவொளி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர்)
(அறிவொளி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர்)
2012ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள்!
2012ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்ட திட்டங்களை வகுத்துச் செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
1) தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மண்டல மாநாடுகள்.
2) விடுதலை உள்ளிட்ட கழக வெளியீடுகளுக்குச் சந்தா சேர்ப்பினைத் தொடர்ந்து இயக்கமாக நடத்துதல்.
3) நாடெங்கும் ஒன்றியம் தோறும் புத்தகச் சந்தைகள் நடத்துதல்.
4) தனிப் பேருந்து மூலம் அறிவியல் கண்காட்சி நடத்துதல்.
5) குடும்பக் கலந்துரையாடல்கள் - (விருந்துடன் கூடியது).
6) பெரியாரியல் பயிற்சி முகாம்கள்.
7) குழந்தைகள் முகாம்.
8) களப்பணி முகாம்.
9) இளைஞர்களுக்கு இணையதளப் பயிற்சி முகாம்.
10) விடுதலை வாசகர் வட்டங்கள் அமைத்தல்.
11) ஒலி - ஒளி முறைகளைப் பயன்படுத்திப் பிரச்சாரத் தில் புதிய யுக்திகளைக் கையாளுதல்.
12) இணையதளத்தை முழு வீச்சில் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்தல்.
தீர்மானம் எண்: 2 (ஆ)
(ஆ.கருணாகரன், நீலமலை மாவட்ட தலைவர்)
(ஆ.கருணாகரன், நீலமலை மாவட்ட தலைவர்)
மண்டல மாநாடுகள்
திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டல மாநாடுகளைத் தொடர்ச்சியாக தமிழ் நாட்டின் பல மாவட்டங் களிலும் தொடர்ந்து நடத்துவது என்று தீர்மானிக்கப்படு கிறது. நாகர்கோவில், திருச்செந்தூர், துறையூர், சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 3
(இரா.ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட தலைவர்)
(இரா.ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட தலைவர்)
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய மாநாடுகள்
திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டு மய்யம், பகுத்தறிவாளர் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இரண்டு நாள்கள் உலகளாவிய மனிதநேய மாநாடுகளை தமிழர்கள் அதிகம் வாழும் கீழ்க்கண்ட நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டு மய்யம், பகுத்தறிவாளர் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இரண்டு நாள்கள் உலகளாவிய மனிதநேய மாநாடுகளை தமிழர்கள் அதிகம் வாழும் கீழ்க்கண்ட நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மியான்மா, லண்டன், பாரிசு, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்துவது என்றும், பெரியாரியல் பற்றிய கருத்தரங்கம், பகுத்தறிவு, மனிதநேயம், அறிவியல் மனப்பான்மை, சமூகநீதி, பாலியல் நீதி முதலியவற்றை உள்ளடக்கும் நிகழ்ச்சிகள் அம்மாநாடுகளில் முக்கிய இடம் பெறும் என்றும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 4 (அ)
(க.குருசாமி, கும்பகோணம் மாவட்ட தலைவர்)
(க.குருசாமி, கும்பகோணம் மாவட்ட தலைவர்)
சமூகநீதியில் அடுத்த கட்டங்கள்
1) மக்கள் தொகைக் கணக்கு அடிப்படையில் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் சதவிகிதத்தினை அதிகப்படுத்தச் செய்தல்.
2) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு.
3) கிரீமிலேயரை அடியோடு அகற்றுதல்.
4) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம். 5) அனைத்துத் துறைகளிலும் நுழைவுத் தேர்வினை அடியோடு ரத்து செய்தல்.
6) மருத்துவக் கல்விக்கு அகில மருத்துவ இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பதை ரத்து செய்தல்.
7) மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கான இடங்களைக் குறிப்பிட்ட சதவிகிதம் மத்திய அரசுத் தொகுப்புக்கு எடுத்துச் செல்வதை ரத்து செய்தல்.
8) குறிப்பிட்ட சில துறைகளை இடஒதுக்கீட்டுக்கு விதி விலக்கு அளித்திருப்பதைரத்து செய்தல்.
9) பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவிகித இடஒதுக்கீடு என்பதை மூன்றாண்டுக்குள் அய்ந்தாண்டுக்குள் என்று சொல்லி கால நீட்டிப்பை ரத்து செய்து, உடனடியாக 27 சதவிகித இடஒதுக்கீட்டை செயல்படுத்தக் கோருதல்.
10) தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடுக்காக சட்டம்.
11) கல்வியை மத்தியப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரச் செய்தல்.
12) சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய 33 சதவிகித சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோருதல்.
13) சமூகநீதி உரிமைகளைக் காப்பாற்றிட தாழ்த்தப் பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மை மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவ தற்கான திட்டங்களை வகுத்தல்.
சமூக நீதியில் மேற்கண்டவை நிலுவையில் இருப்பதால், இவற்றைச் செயல்படுத்த வைக்க அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரை இணைத்துச் செயல்படுவது என்றும், மண்டல் குழுப் பரிந்துரைகளை செயலுக்குக் கொண்டு வர அகில இந்திய அளவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அயராது பாடுபட்டது போல ஒட்டு மொத்தமான மேற்கண்ட உரிமைகளை ஈட்டுவதற்குத் திட்டம் ஒன்றை வகுப்பது என்று இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 4 (ஆ)
(ஆர்.சீனிவாசன், திருத்துறைப்பூண்டி மாவட்ட தலைவர்)
(ஆர்.சீனிவாசன், திருத்துறைப்பூண்டி மாவட்ட தலைவர்)
பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு - பாராட்டும் நன்றியும்
நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் சுமார் 60 கோடிக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் நலன் காக்க, உரிமைகளைப் பாதுகாக்க, நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்டரி கமிட்டியை நியமிக்க நாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.
நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் சுமார் 60 கோடிக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் நலன் காக்க, உரிமைகளைப் பாதுகாக்க, நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்டரி கமிட்டியை நியமிக்க நாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.
சமூகநீதியில் நம்பிக்கை உள்ள பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - எம்.பி.க்கள் தொடர்ந்து வற்புறுத்தியும் வந்தனர்.
மத்திய அமைச்சர் திரு. நாராயணசாமி, மாநிலங்கள் அவை உறுப்பினர் அனுமந்தராவ் போன்றவர்களின் அயராத முயற்சி, ஒத்துழைப்புகள் காரணமாக, அதற்குரிய மசோதா நாடாளுமன்ற பார்லிமென்ட் விவகார அமைச்சர் பல்சால் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு, அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் (ரு.ஞ.ஹ.) தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன்சிங் முதலியவர்களுக்கு இப்பொதுக் குழு தனது பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 5
(வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர்)
(வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர்)
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தேவை! தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை, உரிமை களை உள்ளடக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கட்டு நீர்மட்டத்தை உயர்த்தும் பிரச்சினை, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினையொட்டிய நிரந்தரத் தீர்வு, பல ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் செலவிட்டு முடிவடையாமல் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் பிரச்சினை - இவைபற்றி அவ்வப் போது சீசன் மாதிரி கிளர்ச்சிகள், வழக்குகள், ஏற்படு வதை விட, ஒட்டு மொத்தமான அத்துணைக் கட்சிகளும், அமைப்புகளும் - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபட்டு, மத்திய அரசு தெளிவான தீர்வுகளை இப்பிரச்சினைகளுக்குத் தர ஒரே அணியாக நின்று குரல் கொடுப்பது அவசியம் - அவசரமாகும்.
அதற்காக தமிழக முதல் அமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தீர்வுக்கு வழிவகைகள் காண யோசிப்பது மிகமிக அவசியம் என்று தமிழக அரசினை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்: 6
(பழ.வெங்கடாசலம், வேலூர் மண்டல செயலாளர்)
(பழ.வெங்கடாசலம், வேலூர் மண்டல செயலாளர்)
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் கூடாது
இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் நுழைவு ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் நுழைய விடுவதற்குச் சமமாகும். இந்தப் பல்கலைக் கழகங்கள் வியாபார நோக்கத்தோடுதான் இந்தியாவில் நுழைய பார்க்கின்றன. இத்தகு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் நுழைவு இந்தியாவில் வளர்ந்து வரும் பல்கலைக் கழகங்களின் கழுத்தை நெரித்துக் கொல்லுவதாகும்.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது என்பது வேறு. வியாபார நோக்கத்தோடு உள்ளே நுழையும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் என்ற முடிவை கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மாநில அரசுகளும் இந்த வகையில் வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 7
(மோகனவேலு, காஞ்சிபுரம் மண்டல செயலாளர்)
(மோகனவேலு, காஞ்சிபுரம் மண்டல செயலாளர்)
பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் மீதான தீர்ப்பு மேலும் தாமதமாகக் கூடாது
1992 டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப் பட்டதனால் ஏற்பட்ட கொலைகளும், ஓடிய ரத்தமும், நாட்டின் அமைதிக்குப் பெருங்கேடு விளைவிக்கவும், மதத்தீவிரவாதம் அதன் மூலம் உலகெங்கும் - அதன் எதிரொலியாக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாது, ஆங்காங்கு குண்டு வெடிப்புகளும், உயிர்ச் சேதங்களும் விட்டுவிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடித்த குற்றவாளிகள் மீது போடப்பட்டு நடக்கும் வழக்கு சுமார் 20 ஆண்டுகளாகியும், ரேபரேலி நீதிமன்றம், அலகாபாத், இவைகளில் நிலுவையில் அல்லது கிடப்பில் போடப் பட்டுள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கொடுமையான நிலை இது.
1992 டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப் பட்டதனால் ஏற்பட்ட கொலைகளும், ஓடிய ரத்தமும், நாட்டின் அமைதிக்குப் பெருங்கேடு விளைவிக்கவும், மதத்தீவிரவாதம் அதன் மூலம் உலகெங்கும் - அதன் எதிரொலியாக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாது, ஆங்காங்கு குண்டு வெடிப்புகளும், உயிர்ச் சேதங்களும் விட்டுவிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடித்த குற்றவாளிகள் மீது போடப்பட்டு நடக்கும் வழக்கு சுமார் 20 ஆண்டுகளாகியும், ரேபரேலி நீதிமன்றம், அலகாபாத், இவைகளில் நிலுவையில் அல்லது கிடப்பில் போடப் பட்டுள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கொடுமையான நிலை இது.
மற்ற அனுமான இழப்புக்கு அன்றாடம் விசாரணைகள் நடக்கும்போது இந்த அபாயகரமான வழக்கு ஏனோ இருபது ஆண்டுகளானாலும் கிடப்பில் உள்ளது. சட்டப்படி குற்றவாளிகள் - பலர் ஒப்புதல் வாக்குமூலம் போல் பேசிய, எழுதிய வீடியோ சாட்சியங்களாகவே இருந் தும் கூட, விசாரணை செய்யப்படாமல் இருக்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து, வழக்கு விசாரணையை விரிவு படுத்த உடனே நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தை இப்பொதுக் குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்: 8
(மு.சேகர், திருச்சி மாவட்ட தலைவர்)
(மு.சேகர், திருச்சி மாவட்ட தலைவர்)
கோவில் திருவிழா என்ற பெயரால் எச்சிலைமீது புரளும் காட்டுமிராண்டித்தனத்தைத் தடைசெய்க!
கருநாடக மாநிலத்தில் தட்சண கானடா என்ற மாவட்டத்தில் உள்ள குகி சுப்ரமணியர் என்ற ஒரு கோவிலில் ஒரு விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது - ஓர் திருவிழா போல் - அங்கே பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டுத் தூக்கி எறிந்த எச்சில் இலைகளை வரிசையாக அடுக்கி வைத்து, அதன் மீது உருண்டு - அங்கப் பிரதட்சணம் செய்தால் அவர்களது பிறவிப் பாவம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்தக் கொடுமையான பழக்கம் - முன்பு தடை செய்யப்பட்டிருந்தது - மீண்டும் எடியூரப்பா அரசினால் (பி.ஜே.பி.) புதுப்பிக்கப்பட்டு நடைபெறுகிறதாம்.
இதனைத் தடை செய்யக் கூறி, கருநாடகத்தில் உள்ள மனித உரிமையாளர், பகுத்தறிவாளர் முயற்சி எடுக்கவும், அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்றும் இந்தக் காட்டுமிராண்டித்தன செயலைத் தடை செய்ய கருநாடக அரசு முன்வரவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 9
(பா.அசோகன், திருவாரூர் மண்டல செயலாளர்)
(பா.அசோகன், திருவாரூர் மண்டல செயலாளர்)
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இல்லாத நிலையிலும், ஈழத்தில் பன்னாட்டுப் படைகளின் உதவியோடு ஈழத் தமிழர்களையும், புலிகள் அமைப்பையும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அமைப்பைத் தடை செய்து கொண்டே இருப்பது தேவையற்ற வேலை என்று இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளுக்குச் சுட்டிக்காட்டுகிறது. இதனை விலக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டதால், தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கக் கூடாது என்பதும், தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கப்பற்படை தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டுள்ளது என்பதும், தமிழ்நாட்டின், இந்தியாவின் சுயமரியாதைக்கு இழிவாகும். கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இவற்றை மீட்டெடுக்க ஆவன செய்யவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 10
(விடுதலை நீலமேகம், அரியலூர் மாவட்ட தலைவர்)
(விடுதலை நீலமேகம், அரியலூர் மாவட்ட தலைவர்)
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மீண்டும் கொண்டு வருக! தமிழர்களின் - தமிழ் அறிஞர்களின் நீண்ட கால கோரிக்கையும் திராவிடர் கழகத்தின் தொடர் வற்புறுத் தலுமான தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் கொண்டு வந்து கடந்த தி.மு.க. ஆட்சியில் நிலை நிறுத்தப்பட்டதானது - தமிழின வரலாற்றுத் திசையில் மிகவும் பெரிய பண்பாட்டு மீட்பாகும்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் முதல் அமைச்சர் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர் பண்பாட்டு நிலைப் பாட்டைப் புறக்கணித்து, வேறொரு சட்டத்தின் மூலம் ரத்து செய்ததானது அதிர்ச்சி அளிக்கக் கூடியதும், தமி ழினத்திற்கு எதிரானதும் தமிழின உணர்வைக் கொச் சைப்படுத்துவதுமாகும்.
பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடிவுறும் - புராண ஆபாசத்தை அடிப்படையாகக் கொண்டதும், அறுபது வருடங்களில் ஒரு வருடத்தின் சொல் கூட தமிழில் இல்லாததுமான அந்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆக்கம் தருவது அண்ணா பெயரையும், திராவிட என்ற இனச்சுட்டுப் பெயரையும் கட்சியில் தாங்கியுள்ள அண்ணா தி.மு.க.விற்கு அழகானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் ஆகாது என்பதையும் இப்பொதுக் குழு அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறது.
எனவே மீண்டும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு எனும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமாய் தமிழக முதல் அமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 11
(கூத்தன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்)
(கூத்தன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்)
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது
அண்ணா அவர்களின் நூற்றாண்டை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் நிறுவப்பட்ட உலக தரம் வாய்ந்த நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பது அரசியல் நோக்கம் கொண்டதும், அண்ணா அவர்களைச் சிறுமைப்படுத்துவதும் ஆகும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. அந்த முயற்சியையும் கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை குழு வலியுறுத்துகிறது.
அண்ணா அவர்களின் நூற்றாண்டை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் நிறுவப்பட்ட உலக தரம் வாய்ந்த நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பது அரசியல் நோக்கம் கொண்டதும், அண்ணா அவர்களைச் சிறுமைப்படுத்துவதும் ஆகும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. அந்த முயற்சியையும் கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை குழு வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment