பெண்ணை, பெண்மையை படைப்பு சக்தியாக, தாய்த் தெய்வமாகப் போற்றி வணங்கிவரும் மரபு நம் மண்ணுக்குரியது. வேதங்களுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் தொட்டு இம்மரபு இங்கே வேரூன்றி யிருக்கிறது. திராவிடத் தாய்த் தெய்வ வழிபாட்டின் எடுத்துக்காட்டாகத் தான்.
ஏறக்குறைய அனைத்துக் கிராமங்களிலும் மையக் கடவுளராக அம்மன்கள் செல்வாக்குப் பெற்றுள் ளனர். லௌகீகப் பயன்களை முன்னி லைப்படுத்தி பசுவை காமதேனுவாக வழிபட்ட பிரிவினரும், பெண் என்பதை முதன்மைக் கடவுளாகக் கொள்ளவில்லை. பின்னர் அவர்களும் கூட இத்தாய்த் தெய்வங்களை, தங் களால் உருவாக்கப்பட்ட ஆண் கடவுளுக்கு துணையாகவோ, இணை யாகவோ மாற்றங்களைச் செய்து ஏற்க நேர்ந்தது.
இவ்வாறு பெண்மையை, தாய் மையை தெய்வீகமாகப் போற்றும் மரபு கொண்ட இம்மண்ணில்தான் சபரி மலை சாஸ்தாவுக்கு 10க்கு மேல் 50க்குக்கீழ் வயது கொண்ட மகளிரைக் கண்டால் அலர்ஜி என்று கதைக் கப்படுகிறது.
1987இல் பெண் ஒருவர் எப்படியோ சாஸ்தா சன்னதிக்குச் சென்று, அவரது (சிலையின்) காலைத் தொட்டுவிட்டதால், பகவானின் புனிதத்திற்குப் பங்கம் ஏற்பட்டு, தீட்டு ஏற்பட்டு, அதனால் அவர் கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் என்று 19 ஆண்டுகள் கழித்து சோழி ஜோதிடக்காரர் பிரஸ்னத்தில் கண்டுபிடித்துள்ளார்(?)
பிரஸ்னம், குறிபார்த்தல், பரிகார கர்மங்கள், ஹோமங்கள், யாகங்கள் போன்றவையெல்லாம் மூடநம்பிக் கையை வியாபாரம் செய்து பிழைப் பவர்களுக்கு வருமானத்திற்கான வழிகள்: வருவாயைப் பல மடங்கு பெருக்கிப் பங்கு போட்டுக் கொள்ள அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் தேவப் பிரஸ்னங்களும் பரிகார கர்மங்களும் தேவைப்படுகின்றன.
அத்தகைய தேவைகளை உருவாக்கிக் கொள்ளவும், நியாயப்படுத்தவும் அவர்களுக்கு இத்தகைய தீட்டுச் சம்பவங்கள் ஞானப் பார்வையிலும்? சோழிப் பார்வையிலும் தென்படு கின்றன.
வருமானமில்லாத ஏழைக் கோவில் சாமிகளுக்கு தீட்டு ஏற்படுவ தில்லை. தென்னிந்தியாவில் வருமான மிக்க கோவில்களில் ஒன்றல்லவா சபரிமலை சாஸ்தா கோவில்.....! அந்த வருமானத்தை பக்தி மோசடி வியாபாரிகள் கொள்ளையடித்துச் செல்ல பிரஸ்னங்களும், பரிகாரங்களும் அற்புதமான மார்க்கங்களல்லவா?
ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதது ஓர்
தாணுவாய் நின்ற சக்தி ஆம் சுடர்
என்று தாயுமானவர் கண்ட பரம் பொருள்தான் நாராயண குருவானவர் ஆத்மோபதேச சதகத்திலும், தரிசன மாலையிலும் விளக்கியுள்ள அத்வைத ஞானம், எந்த நம்பிக்கையும் ஞானத் திற்கும் அறிவிற்கும் இசைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத போது அது மூட நம்பிக்கையாகிவிடும். வசதிக்காகவும் ஞான முதிர்ச்சிக் குறை வினாலும் மனிதனால் உருவாக்கப்படும் பக்தி கடவுளரும் கோவில்களும், ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கு முரண்படாமலேயே இருக்க வேண்டும்.
படைப்பில் சரிபாதியான தாய்க் குலத்தைத் தீண்டாமைக்குள்ளாக்கும் எந்த ஐதீகமும், எந்தத் தீட்டும், எந்த மரபும் ஆணாதிக்கக் காட்டுமிராண் டித்தனம் தான். என் தாய்- என் தமக்கை, தங்கை, -என் மனைவி, என் மகள் இவர்களை ஒதுக்கி நிறுத்திச் சிறுமைப்படுத்தும் எந்த மரபையும் ஏற்க முடியாது என்று பொதுநீதியில் அக்கறையுள்ளவர்கள், கடவுளை பேதங்களற்ற கருணைக் கடலாகக் காண்பவர்கள், எவ்வுயிரும் தன்னுயிர் போல் நினைப்பவர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
எங்கெங்கு காணினும் சக்தியடா... என்று வியந்து நின்றால் மட்டும் போதாது. தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று விரைந்து செயல்பட்டாக வேண்டும். அவர்ணருக்கு ஆலயப் பிரவேசம் தராத மரபை மாற்றியமைக்க அருவிப்புர பிரதிஷ்டையின் மூலம் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட நாராயணகுரு இன்றிருந்தால் மகளிரை விலக்கி நிறுத்தும் மடமைக்கு எதிராகவும் புதிய எழுச்சியை உருவாக்கியிருப்பார். உடலும் உயிருமாக குரு இன்று இல்லாவிடினும் அவரது உணர்வுகளும், நினைவுகளும் குருதர்ம ஆர்வலர்களை சமூக பொருளாதார அரசியல் துறை களில் மட்டுமின்றி சமயத்துறையிலும் சக்தி வடிவான சகோதர்களின் சம உரிமைக்காகக் குரலெழுப்பவும், செயல் படவும் வைக்கு மென்று நம்புகிறோம்.
மதங்கள் மனிதனுடைய படைப் பல்லவா? கடவுள் என்பவரே ஒரு மதத்தைச் சார்ந்தவராக முடியுமா? இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ பௌத்த சமண யூத ஜொராஸ்டிரிய மக்களை யெல்லாம் தனித்தனி கடவுள்தான் படைத்தாரா? அனைவரையும் படைத் தது இறைவன், என்று ஒப்புக் கொள் கிறவர்கள். அந்த ஒரே இறைவன். எங்கும் எல்லாமான பரம்பொருள் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவ ரென்றும் அறிய வேண்டுமல்லவா? இந்த உண்மையைத்தானே
ஒரு சாதி, ஒரு மதம் _- ஒரு தெய்வம் மனிதருக்கு என்று குருவானவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இஸ்லாமிய மசூதியிலும் தர்கா வலும், பிற மதத்தவர்நுழைந்தால் தீட்டுப் படுவதில்லை. கிறிஸ்தவ ஆலயங்களில், பௌத்த சைத்தியங்களில், சீக்கிய குருத்துவாராக்களில், ஜைன பஸ்திகளில் ஏனைய மதத்தவர் நுழைந் தால் பரிசுத்தம் பாழாகிவிடுவதில்லை.
இந்து கோவில்களில் மட்டும் நுழைந்தால் பகவானுக்கும், பகவதிக்கும் பாதிப்பு ஏற்படுகின்றதா? இந்து கடவுளர் அவ்வளவு பலவீனமான வர்களா?
கடவுளை மதவாதியாக்கும், வகுப்பு வாதியாக்கும் இந்த விலக்குகளை இனியும் எவ்வளவு நாள்கள்தான் பொறுத்துக் கொள்வது? கோவில்களை மூடநம்பிக்கைகளினின்றும், மோசடிக்காரர்களிடமிருந்தும் மீட்பது இன்றைய உடனடித் தேவை.
கோயில்கள் மோட்சத்திற்கான இடங்களல்ல. சாமான்ய மக்களின் ஆறுதலுக்கான இடம் நம்பிக்கையை உறுதி செய்யும் இடம் நற்சிந்தனைகளை பரவச் செய்யும் இடம், துவேஷங்களைத் துறந்து ஒருமைப்பாட்டை வளரச் செய்யும் இடம்.
ஆனால் ஆதிக்க சக்திகள் கோவில்களைத் தங்கள் சுயநலங்களுக்காகவும் சுரண்டல் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி வந்ததால்தான்.
கோவில் _ கோவில் வருமானம் கோவில் சொத்து என்ற அனைத்தும் உழைக்காமல் இருப்பவர்களே அனுபவிப்பவைகளாக மாறின.
தேவதாசிகளை உருவாக்கி அனுமதித்த அனுப வித்த மரபுகள் மகளிரை கோவிலிலிருந்து விலக்கி வைத்தன. நீண்ட பருந்தினையும் நெடிய குரங்கி னையும் கடவுளர்களாக ஏற்ற மரபு. பஞ்சமர் களையும், சண்டாளர்களையும், சூத்திரர்களையும் ஆலயங்களிலிருந்து மட்டுமல்ல. ஆலயங்களிலிருந்த தெருக்களிலிருந்தே கூட விரட்டியடித்தன. குடிநீர்க் குளங்களைக் கூட மறுத்தன.
மலம் தின்னும் பன்றியை மாலின் அவதாரமாகக் கொண்ட மரபுகள் பசுவின் சாணம், சிறுநீர் ஆகிய மலங்களை பஞ்ச கவுமியத்தில் கலந்து சுத்திப் பொருளாகச் சுவைத்துக் கொள்ளும் மரபுகள், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த, ரத்தம் வியர்வையாகக் கொட்ட, உணவையும் ஏனைய நாகரிகத் தேவைப் பொருட்களையும் உற்பத்தி செய்பவர்களை, அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொண்டே,
சூத்திரனென்றும், பஞ்சமனென்றும், பாவ யோனிப் பெண்களென்றும் சிறுமைப்படுத்தி, விலக்கி வைத்து, உரிமை மறுத்து கொடுமைப் படுத்துகின்றன.
இத்தகைய புரோகித, பௌராணிக, சோதிடக் கூட்டங்கள்தான் சுவாமி விவேகானந்தரையே கொடுங்கல்லூர் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தன.
நாராயண குருவிற்கும் தமிழகத்தில் இப்படிப் பட்ட அனுபவம் ஏற்பட்டதுண்டு.
இன்றைய அளவில் பாடகர் யேசுதாஸுவிற்கும், அரசியல் தலைவர் வயலார் ரவிக்கும் இன்று நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் ஏற்பட்டுள்ள அனுபவங்கள், அவமதிப்புகள், நாகரிகமான நாணயமான சமய மரபுகள் அல்ல.
மனிதத் தன்மையற்ற வக்கிரமான காட்டு மிராண்டித்தனமான மரபுகள், கேரளக் கோவில்கள் இனிமேலும் பைத்தியக்காரர்களின் புகலிடமாக இருக்க வேண்டுமா?
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
அங்கும் இங்கும் ஆயிரண்டு தேவரே யிருப்பரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்க வாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே
என்ற சிவவாக்கிய சொல்லையும்
எவ்வுயிரும் பராபரன் சந்நிதியாகும்
இலங்குமுயிர் உடலனைத்தும் ஈசன் கோவில்....
என்ற திருமந்திரம்தான் நாராயண குருவின் தர்மத்திலும் அடங்கி இருக்கிறது.
வழிபாட்டுத் தலங்களை அனைவருக்குமாகத் திறந்துவிடவும் அவற்றை மூடநம்பிக்கை மரபுகளினின்றும், மோசடிக்காரர்களின் சுரண்டலிலிருந்தும் மீட்கவும் குருதர்ம ஆர்வலர்கள் அமைப்புகள் அதற்கு இசைவான பிற அமைப்புகள் ஒருங்கிணைந்து குரலெழுப்புவோம், செயல்படுவோம் என்ற சூளுரையை எடுத்துக் கொள்வோம்.

(நன்றி: குருதேவ தர்மம் டிசம்பர் 2011)
No comments:
Post a Comment