குஜராத் மாநில ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் படப்பிடிப்பு!
சென்னை, டிச.3-சமுதாய நலனுக்காக வாதாடக்கூடிய ஒரே தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி என்று நீதியரசர் பி.ஆர்.கோலகுலகிருஷ்ணன் கூறினார்.
சென்னை பெரியார் திடலில் நேற்று (2.12.2011) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்
இவ்விழாவில் பங்கேற்ற குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ் ணன் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:
ஆசிரியர் வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாள்விழாவில் கலந்துகொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். வீரமணி அவர்களை நான் நன்கு அறிந்தவன். சென்னையில் மணவழகர் மன்றம் நடத்தும் விழாவில் வீரமணி அவர்கள் பங்கேற்று அவருடைய பேச்சு இடம் பெறாத ஆண்டே கிடையாது.
வீரமணி அவர்கள் சமுதாயத்திற்காக என்றைக்கும் உழைத்துக்கொண்டிருக் கின்ற மாபெரும் தலைவர். தந்தை பெரியார் கொள்கைகளை ஆசிரியர் வீரமணி அவர்கள் எப்படி எல்லாம் பரப்பி வருகிறார் என்பதை கலைஞர் அவர்களே சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலில் எழுதி யுள்ளார்.
வீரமணி அவர்கள் வழக்குரைஞர் தொழிலை விடுக்க கோட்டை கழற் றினார் என்று பேராசிரியர் சுப.வீரபாண் டியன் சொன்னார். சமுதாயத்திற்காக வாதாடக்கூடிய ஒரே தலைவர் வீரமணி அவர்கள்தான்.
சமுதாயத்தில் நடைபெறும் அநீதி களை சுட்டிக்கேட்பவர். இவருடைய பேச்சு உலகில் உள்ள தமிழர்களை எல்லாம் ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகளில் எல்லாம் பெரியார் கொள்கையைப் பரப்பி வருகின்றார்.
பெரியாரின் கொள்கையைப் பரப்ப திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அற்புதமான தூதுவர் வீரமணி அவர்கள். நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தபொழுது மாணவச் செயலாளர் என்ற முறையில் பெரியாரை அழைத்துப் பேச வைத்தவர்கள்.
அன்றைக்கு ஆட்சிக்கு வருவோம். இப்படி எல்லாம் ஆவோம் என்று நாங்கள் நினைத்ததில்லை. மாநிலக் கல்லூரியில் அண்ணாவை பேச அழைத்தோம். கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றீர் களா? என்று அண்ணா கேட்டார். இல்லை என்று சொன்னோம். அனுமதி பெற்று வாருங்கள் என்று சொன்னார்.
முதல்வரிடம் சென்று சொன்னோம். அண்ணாவின் கருத்துகளை பரப்ப நீங்கள் பயன்படுவதா? உருப்படவே மாட்டீர்கள் என்று சொன்னார். அச்சம் என்று தலைப்பில் அண்ணா வந்து உரை யாற்றினார்.
ஆண்டவனை உருவாக்கியதே அச்சம்தானே, இடிகளையும் மின்னல் களையும் தடுத்தி நிறுத்திட ஆற்றல் இல்லாதவன்தான் ஆண்டவன் என்று பேசினார் அண்ணா. விசுவநாத அய்யர் அண்ணா அவர்களுடைய பேச்சை பிறகு வியந்து கூறினார். இது இன்றைய பேச்சு அண்ணா அவர்களுடைய பேச்சு இன்னும் எத்தனையோ என்று கூறினேன்.
திராவிடர் இயக்க உணர்வுகளை யாராலும் அழிக்க முடியாது. வீரமணி அவர்களின் பேச்சு, நூல்களை நான் நிறைய படித்தவன். வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனையில் கூறு கிறார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆணவம் கூடாது என்று கூறுகிறார். அரசியல்வாதிகள் ஓட்டுகளை வாங்கி பதவி பட்டங்களை பெற்று விடுகிறீர்கள். உங்களிடம் அதிகாரம் கிடைத்தவுடன் அடக்கமாக நடப்பதைவிட்டு விட்டு அதிகாரத்துடன் நடந்துக்கொள்ளக் கூடாது.
நீங்கள் அதிகாரத்துடன் நடந்து கொண்டால் அது சிறையில் போடப் பட்ட தாழ்ப்பாள். அவ்வளவு சுலபமாக நீங்கள் வெளியே வரமுடியாது என்று சொல்லுகின்றார்.
இன்னொரு இடத்தில் வீரமணி அவர்கள் தனது வாழ்வியல் சிந்தனையில் கூறுகிறார். டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் அவர்களும், வீரமணி அவர்களும் ஒரே வகுப்பு நண்பர்கள். ஒரே பெஞ்சில் அமர்ந்து பாடம் கேட்டவர்கள். அவரோ ஆன்மீகத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார். வீரமணி அவர்களோ பகுத் தறிவை பரப்பும் பணியில் ஈடுபட்டார். இருந்தபோதிலும் இரண்டு பேருக்கு மிடையே என்றைக்கும் அன்பு இருந்தது.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
மக்களுக்கு இளைஞர்களுக்கு வீரமணி அறிவுரை கூறுகிறார். நீங்கள் எப்பொழு தும் டி.வி. முன்பாகவே உட்கார்ந்து கொண்டு பொழுதை கழிக்காதீர். உங்கள் வாழ்க்கையில் பெரும் காலத்தை இழப் பீர்கள் என்று அறிவுரை சொல்லுகிறார்.
சமுதாய நலனுக்காக எப்பொழுதும் எந்த நிலையிலும் தனது கருத்தை துணிந்து பரப்பி வருகின்றார். தம் இருதயத்தைவிட சமுதாயம்தான் பெரிது என்று மக்களுக் காக பாடுபட்டு வருகின்றவர் வீரமணி.
-இவ்வாறு பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் தமது உரையில் கூறினார்.

No comments:
Post a Comment