Friday, December 9, 2011

பெனிசிலின் மருத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?


பெனிசிலின் மருந்தை அலெக்சாண்டர் பிளம்மிங் தான் கண்டுபிடித்தார் என்று பலரும் எண்ணியுள்ளனர். ஆனால் இது தவறு.  கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் அவர் மிகவும் அடியில் இருக்கிறார்.
ஒராயிரம் ஆண்டுகளாக கழுதைகளின் சேணம் செய்யும் மோல்டிலிருந்து ((mould)  நோயைக் குணப் படுத்தும் ஒரு பூச்சு மருந்தை வட ஆப்பிரிக்க பெடோயின் பழங்குடி மக்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். சேணங்களால் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரமான சேணங்களின் மோல்டை அராபிய குதிரை லாயச் சிறுவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கவனித்த எர்னஸ்ட் டச்சஸ்னி (Ernest Duchesne)  என்ற பிரஞ்சு ராணுவ இளம் மருத்துவர் பழங் குடியினர் பயன்படுத்திய அந்த மருந்தை மறுபடியும் 1897 இல் கண்டுபிடித்தார்.
அந்த மோல்டில் இருந்ததுதான் பென்சிலியம் கிளாகும் (Penicillium glaucum) என்பதை, டைபாய்ட் காய்ச்சலுக்காக கினியா பன்றிகள் மீது முழுமையாக சோதனை  செய்து, இ.கோலி (E.coli)  நோய்க்கிருமிகளை அது அழிக்கிறது என் பதை  அவர் கண்டறிந்தார். பென்சிலின் என்று அழைக்கப்படும் மருந்தை  சோதனை சாலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
முனைவர் பட்டம் பெறுவதற்கான தனது ஆய்வுக் கட்டுரையாக இதனை அனுப்பிய அவர், மேலும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Institute pasteur) அந்தக் கட்டுரை கிடைத்ததைக் கூட அங்கீகரிக்கவில்லை. அவருக்கு அப்போது 23 வயதுதான் ஆகியிருந்தது என்பதும், முற்றிலும் அறிந்திரப்படாத ஒரு மாணவராக அவர் இருந்தார் என்பதும் இதற்குக் காரணமாக இருந்தி ருக்கலாம்.
இடையில் அவருக்கு ராணுவக் கடமைகளை வந்து சேர்ந்தன. 1912 இல் காசநோய் காரணமாக அவர் யார் என்பதை உலகம் அறிந்து கொள்ளாத நிலையிலேயே இறந்து போனார். அவரது கண்டுபிடிப்பே பிற்காலத்தில் அவருக்கு வந்திருந்த காசநோயைக் குணப்படுத்தும் மருந்தாக ஆனது என்பதுதான் வியப்பளிக்கும் செய்தியாகும்.  பெனிசிலின் மருந்தின் நோய்கொல்லி ஆற்றலை கண்டுபிடித்ததற்காக அலெக்சாண்டர் பிளமிங்குக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு அய்ந்து ஆண்டுகள் கழிந்த  பிறகு, 1949 இல்  இந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் எர்னஸ்ட் டச்சஸ்னிக்குக் கிடைத்தது.
பிளமிங் பெனிசிலின் என்ற சொல்லை 1929 இல் புதியதாக உருவாக்கினார். ஒரு சேணத்தின் மோல்டில் இருந்த நோய்கிருமி  எதிர்ப்பு மருந்தைத் தற்செயலாகக் கண்ட பிளமிங் அதனை பெனிசிலின் ரப்ரம் (Penicillium rubrum) என்று கண்டுரைத்தார். ஆனால், உண்மையில் அந்த நோயெதிர்ப்பு உயிரி இனத்தை அவர் தவறாகவே கண்டறிந்தார். பல ஆண்டு காலத்திற்குப் பிறகு அது மிகச் சரியாக பெனிசிலியம் நோட்டேடம் (ஞநஉடைடரைஅ டிவயவரஅ) என்று சார்லஸ் தாம் என்பவரால் அடையாளம் காணப்பட்டது.
அந்த மோல்டுக்கு முதன் முதலாக அளிக்கப்பட்ட பெயரே பெனிசிலியம் (Penicillium notatum)என்பதாகும். உருப் பெருக்கியில் அவை பார்க்கப்பட்ட போது, அவற்றில் இருந்த பூஞ்சை போன்ற கரங்கள் (Spore-bearing arms) சிறு பெயின்ட் பிரஷ் போல் தோற்றமளித்ததே இதன் காரணமாகும். லத்தின் மொழியில் ஒரு எழுத்தாளரின் பெயின்ட் பிரஷ்க்கு Penicillium என்று பெயர். இந்த சொல்லில் இருந்துதான் பென்சில் Penicil என்ற சொல்லும் வந்தது. உண்மையில் Penicillium notatum எனப்படும் உயிரணுக்கள் மனித எலும்புக் கூட்டின் கைஎலும்பு போல் தோற்றமளித்தது. அதன் படம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...