Wednesday, December 7, 2011

ருசியாவில் மீண்டும் வருமா கம்யூனிஸ்டு ஆட்சி?


முதல் பொதுவுடைமை நாடு என்று பூரிப்புடனும், பெருமை யுடனும் போற்றப்பட்ட ருசியா - சிதறுண்டு போனது முற்போக் குச் சிந்தனையாளர்களுக்குப் பேரிடி. வரும் மார்ச் 4ஆம் தேதி ருசியாவில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் கம்யூனிஸ்டுக் கட்சி களம் இறங்குகிறது 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. தற்போது, 13 ஆயிரத்து 726 கட்சிக் கிளைகள், 2 ஆயிரத்து 278 உள்ளூர்க் குழுக்கள் மற்றும் 81 பிராந்தியக் குழுக் கள் உள்ளன. 2011 ஜனவரி 1 அன்று உள்ள கணக்கின்படி 1 லட்சத்து 54 ஆயிரத்து 244 பேர் கட்சியின் உறுப் பினர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ரஷ்யாவின் மக்களவையான டுமாவில் 54 பேர் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தற்போது உள்ளனர். 81 பிராந்திய அவைகளில், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் 78 அவைகளில் இருக்கிறார்கள். வெளிநாடு களில் உள்ள இடதுசாரி மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளுடன் கட்சி நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ளது. மூன்றாவது கட்சிக் காங்கிரசில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் திட்டமே ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழி காட்டி வருகிறது.

மக்களவையான டுமா தேர்தலில் பங்கேற்க கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், அதற்கான தேர்தல் திட் டமான, பெரும்பான்மையினருக்கான கொள்கை : வெற்றிக்கான பாதை என்பதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மூன்று முக்கியமான நடவடிக்கைகளை இந்தத் திட்டம் அடையாளம் காணுகிறது.

1. தேசியப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்துவது.
2. பொருளாதார சரிவிலிருந்து, வளர்ச்சியை அதிகப்படுத்தும் மாற்றம்.
3. வறுமை மற்றும் சமூக சீரழிவு ஆகியவற்றிலிருந்து மீண்டு வருதல்.
மேற்கூறியவற்றை செய்வதற்கு ஏழு அம்சத்திட்டத்தையும் கட்சி முன் வைக்கிறது.
1. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொருளாதாரக் கொள்கை.
2. நாட்டின் புதிய தொழில்மயம்.
3. விவசாயத்திற்கு சிறப்பு அக்கறை.
4. மக்களின் நம்பிக்கை பெற்ற அரசின் புதிய நிதிக்கொள்கை.
5. வரி அமைப்பைத் திருத்துவது.
6. அறிவியல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கிடையில் வலுவான தொடர்பு.
7. விண்வெளியை வெற்றிகொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றால் சமூக ரீதியான பிரச்சினை களைத் தீர்க்க அய்ந்து அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1. புதிய சமூக மசோதா.
2. குழந்தைகள் மற்றும் இளைஞர் களுக்கு ஆதரவு.
3. அனைவருக்கும் தரமான கல்வி என்ற முழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல்.
4. சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை.
5. புதிய கலாச்சார எழுச்சி.

இத்தகைய திட்டங்களை நடை முறைப்படுத்த பொருத்தமான குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவம் தருகிறது. கட்சியின் பட்டியலில் 81 பிராந்தியங்களைச் சேர்ந்த 595 பேர் இடம் பெற்றிருக் கிறார்கள். அதில் தொழிலாளர்கள், விவசாயிகள், முக்கியமான அரசியல் வாதிகள், அனுபவம் வாய்ந்த பொருளா தார மேலாளர்கள், அறிவியல் மற்றும் அறிவு ஜீவிகளின் பிரதிநிதிகள், ஆசிரி யர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பிராந்திய மற்றும் உள்ளூர் அமைப்பு களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பட்டியல் பத்து பேர் தலைமை யில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் கட்சியில் இல் லாதவர்கள் ஆகியோருக்கிடையிலான ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்தப்பட்டியல் உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த கட்சித்தலைவர்கள், கட்சித்தலைமையில் உள்ள இளம் உறுப்பினர்கள் ஆகியோரும் இந்தப்பட் டியலில் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் கடுமையான சோதனை களைக் கடந்து வந்தவர்களாவர். பல்வேறு கட்சி, பொருளாதார மற்றும் நாடாளுமன்றப் பொறுப்புகளில் பணியாற்றி பெரும் அனுபவம் கொண்டவர்களாவர்.

பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முக்கியமான தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். கட்சி மத்தியக் குழுவின் தலைவரும், டுமாவில் கட்சியின் தலைவருமான கென்னடி யுகானோவ், டுமாவில் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் விளாதிமீர் கோமோயெடோவ் மற்றும் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், ரஷ்ய இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் தலைவருமான யூரி அஃபோனின் ஆகி யோர்தான் முதல் மூன்று நபர்களாக பட்டியலில் உள்ளனர்.

மத்தியக்குழு உறுப்பினர்கள் - 93
மாற்று மத்தியக்குழு உறுப்பினர்கள் - 56
மத்திய தணிக்கை ஆணையம் - 13
முதல் செயலாளர்கள் - 66
பிராந்தியக்குழு செயலாளர்கள் - 86
உள்ளூர்க் குழுக்களின் முதல் செயலாளர்கள் - 98
கட்சியின் முக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள் - 23
மத்தியக்குழு ஊழியர்கள் - 17
கட்சி சாராத வேட்பாளர்கள் - 52
595 வேட்பாளர்களில் 116 பேர் பெண்களாவர். டுமாவிற்கான கட்சி வேட்பாளர்களின் சராசரி வயது 49 ஆகும். மொத்த வேட்பாளர்களில் 69 பேர் 30 வயதிற்கும் கீழானவர்கள்.
(தீக்கதிர் 26.11.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...