சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு முக்கிய அறிவிப்பைக் கொடுத்துள்ளார். முசுலிம் மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித ஒதுக்கீட்டி லிருந்து 8.3 சதவிகிதம் அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது நியாயமே. அதில் இரு கருத்துக்கு இடம் இல்லை.
தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்களின் அக் கறையால் முஸ்லிம் மக்களுக்கு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர்கள் பயனும் அடைந்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்களின் அக் கறையால் முஸ்லிம் மக்களுக்கு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர்கள் பயனும் அடைந்துள்ளனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில் முசுலிம் களுக்கு 8.3 விழுக்காடு என்று சொன்னால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 52 விழுக்காடு அளிக்கப்பட வேண்டுமே.
மண்டல் குழு அறிக்கையின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொகை 52 விழுக்காடு. இந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்போது சிறுபான்மை மக் களுக்கு மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் 8.3 விழுக்காடு இடங்களை அளிக்க முடியும்.
மத்திய சட்ட அமைச்சர் இதனை உள் வாங்கிக் கொண்டு அறிவித்தாரா என்பதில் சந்தேகம் இருக் கிறது. மேலும் இது மத்திய அரசின் முடிவா? தனிப் பட்ட சல்மான் குர்ஷித்தின் முடிவா என்று தெரிய வில்லை.
ஒரு கட்டத்தில் மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சம்பந்தமே இல்லாமல் தாழ்த் தப்பட்ட வர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி, தாழ்த்தப்பட்டவர் களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர்; ரசித்தனர்.
இப்பொழுதோ பிற்படுத்தப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிடும் ஒரு வேலையில் இறங்கி இருப்பது நல்லதல்ல.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் 27 விழுக்காடு அளிப்பதற்கான நடைமுறைகள் சரியான அளவில் செயல்படுத்தப்படவில்லை. கல்வியில் 27 விழுக்காடு எத்தனை ஆண்டுகளில் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஏற்கெனவே 60 ஆண்டு காலமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் இதில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டும் 20 ஆண்டுகள் ஓடி விட்டன.
ஆனால் கல்வியில் இன்னும் முழு வீச்சில் செயல்பாடுகள் இல்லை. அப்படி இட ஒதுக்கீடு அளிப்பதிலும் ஏராளமான விதி விலக்குகள் திணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி, சட்டரீதியாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சட்ட அமைச்சர் குழப்பமான -தெளிவில்லாத - சட்டத்துக்குப் பொருந்தாத அறிவிப்புகளை வெளியிடலாமா?
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் நிலைப்பாடு இதில் என்ன? அமைச்சரவையின் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைக்குத் தலை நாட்டாண்மை என்ற நிலைப்பாடு இருக்கிறது.
அதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையில் எவ் வளவு கவனமும், கவலையும் செலுத்தப்படவேண்டும்.
அதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையில் எவ் வளவு கவனமும், கவலையும் செலுத்தப்படவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் முதன் முதலாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்குள்ளாகவே ஆயிரம் ஆயிரம் முட்டுக் கட்டைகள் - பொருளாதார அளவுகோல்கள்! (Creamy layer).
மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந் தாலும் நாடாளுமன்றத்தில் இவர்களின் உறுப்பினர் தொகை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், போதிய ஒருங்கிணைப்பு இல்லாமையால், மிகச் சாதாரண உரிமைகளை, வாய்ப்புகளைக்கூட பிற்படுத் தப்பட்டவர்களுக்குப் பெற்றுத் தர முடியவில்லை.
நாடாளுமன்ற நிலைக்குழு என்பது மிகச் சாதாரண ஒன்று. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்று எப்பொழுது சட்டம் நிறைவேற்றப் பட்டதோ, அந்தக் கட்டத்திலிருந்தே நாடாளுமன்ற நிலைக்குழு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதைக்கூடப் பெற்றுத் தர முடியாதவர்கள், புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்து பிற்படுத்தப்பட்ட மக்க ளிடத்தில் பிளவுகளை உண்டாக்குவது நியாயம் தானா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கும் உறுப்பினர்கள் கொஞ்சம் சிந்திப்பார்களாக! செயல் படுவார்களாக!!
No comments:
Post a Comment