பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகள் மரியாதை
தந்தை பெரியார் 38-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அய்யா நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை
இன்று தந்தை பெரியார் அவர்களு டைய நினைவு நாளை ஒட்டியும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடு தலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்று 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, 50 ஆயிரம் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சியை ஒட்டியும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பெரியார் திடலில் திரண்டனர். இன்று காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலுக்கு அருகில் உள்ள எழும்பூர் பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்குத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது.
பெரியார் சிலைக்கு மாலை
அடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தோழர், தோழியர்கள் புடைசூழ அங்கிருந்து நடந்து சென்னை பெரியார் திடலுக்கு வந்தனர்.
பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்.
பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை
இதனைத் தொடர்ந்து வேப்பேரி தந்தை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினை விடத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கூடியிருந்த தோழர்களிடையே தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், பெரியார் கொள்கை உலகமெல்லாம் பரவ ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம் என்று உறுதிமொழி களைக் கூறினார். அதைத் தொடர்ந்து பின்பற்றிக்கூறி தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பல்வேறு நிறுவனங்கள்
பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில், சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவிடத்தில், தமிழர் தலைவர் கி.வீரமணி மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். திராவிடன் நலநிதி சார்பில் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, கழக மகளிர் அணி சார்பில் டெய்சி மணியம்மை, க.பார்வதி, பெரியார் மணியம்மை மருத்துவ மனை சார்பில் டாக்டர் மீனாம்பாள், குசலகுமாரி, சுல் தானா, அசோக் லேலண்ட் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் திருவொற் றியூர் செல்வராஜ் மற்றும் பெரியார் திடலில் இயங்கும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முக்கிய பிரமுகர்கள்
இந்நிகழ்ச்சியில் திருமதி மோகனா வீரமணி, கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, கழக செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு, தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா.குணசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் நல்.ராமச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திருமகள், திருச்சி தங்காத்தாள், பேரா.நம்.சீனி வாசன், எம்.பி.பாலு, தஞ்சை இரா. ஜெயக்குமார், ச.இன்பலாதன், காரைக்குடி சுப்பய்யா, சாமி திராவிடமணி, பி.பட்டாபி ராமன், அ.கோ. கோபால்சாமி,
கே.சி. எழி லரசன், அகிலா, வழக்கறிஞர் அமர்சிங், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு.தங்கமணி, ஜெயாதிராவிடமணி, கமலம்மாள், வீ.குமரேசன், மதுரை வழக்கறிஞர் கி.மகேந்திரன், வழக்கறிஞர் வீரமர்த்தினி தென்றல், ஆ.நாகலிங்கம், திண்டுக்கல் வீரபாண்டி, உடுக்கடி அட்டலிங்கம், ஆ.பாண்டியன், வா.நேரு, வெ.ஞானசே கரன், மயிலை நா.கிருஷ்ணன், சத்யநாரா யணசிங், யூனியன் வங்கி கோ.கருணா நிதி, தமிழக சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் மா.செல்வராஜ், முன்னாள் நீதிபதி பரஞ்சோதி, வழக்கறிஞர் த. வீரசேகரன், பேராசிரியர் ப. சுப்பிர மணியம், ப. சீத்தாராமன், க. சரவணன், கோவை பெரியசாமி, காரமடை சுப்பைய் யன், மதுரை அழகர், கி. இராமலிங்கம் தி.வே.க. திருவள்ளுவன், தங்கமணி, தனலட்சுமி, ஜி. குணசேரன், ஜி. தயாளன், விடுதலை ராதா, நாத்திகம் பாலன் மற்றும் திரளானோர் வந்தி ருந்து மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதிலும் அனைத்துக் கட்சிகள் மரியாதை
தமிழகம் முழுக்க அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செய் திகள் வந்து குவிந்த வண் ணம் உள்ளன.

No comments:
Post a Comment