ஒட்டகங்கள் வடஅமெரிக்காவில் இருந்து வந்தவை. ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளின் பாலைவனங்களின் அடையாள மாக விளங்கும் ஒட்டகங்கள் உண்மையில் முதலில் அமெரிக்காவில் தோன்றியவை யாகும்.
குதிரைகள், நாய்கள் போலவே ஒட்டகங்களும் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் புல்வெளிகளில் தோன்றி வளர்ந்தவையாகும்.
நாம் இப்போது அறிந்து, நேசிக்கும் விலங்கினைப் போல் அன்றி, அந்நாட்களில் ஒட்டகங்கள் வரிக்குதிரைகள் போலவே இருந்துள்ளன. 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் அவை பெர்ரிங் நிலப் பாலத்தைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைந்தன.
இறுதி பனிக்கட்டிக் காலத்தில் ஒட்டகங்கள் வடஅமெரிக்காவில் இருந்து காணாமல் போயின. குதிரைகளும், நாய்களும் திரும்பவும் தோற்றம் பெற்றதைப் போன்று ஒட்டகங்கள் மீண்டும் அமெரிக்காவில் தோற்றம் பெறவில்லை.
வடஅமெரிக்காவில் இருந்த ஒட்டக இனங்கள் ஏன் அழிந்து போயின என்பது தெளிவாகத் தெரியவில்லை. தட்பவெப்ப நிலை மாற்றமே இதன் காரணமாக இருந்திருக்கக்கூடும். புல்லில் இருக்கும் மணற்சத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றமும் இதற்கான குறிப்பிட்ட காரணமாக இருந்திருக்கலாம். வடஅமெரிக்காவின் தட்பவெப்ப நிலை பனியும், வறட்சியும் நிறைந்ததாக மாறியதால், புல்லின் இருந்த மணற்சத்தின் அளவு மும்மடங்காகியது. நீண்ட பற்கள் கொண்ட புல்மேயும் விலங்குகளின் பற்களையும் கூட இந்த கடினமான புதிய புல் விழச் செய்துவிட்டது. குதிரைகளும், ஒட்டகங்களும் புல்லைச் சுவைக்க முடியாமல் போனதால், பட்டினி கிடந்து இறந்து போயின. தப்பிச் செல்வதற்கு ஒரு வழியாக இருந்த பெர்ரிங் தரைப் பாலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதால், ஏற்கனவே பலவீனமடைந்து போயிருந்த இந்த விலங்குகளின் இனமே நாளடைவில் மனிதவேட்டைக் காரர்களால் அழிந்து போனது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment