Friday, November 18, 2011

90 விழுக்காடு பொழுது போக்கு ஊடகம் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு


அம்சங்கள் (சுயகட்டுப்பாடு என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு அமைப்பும் பொதுமக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள் ளவையே. பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு அளித்திருந்த  விளக்கத்தைத் தொகுத்து தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தனது 16.11.2011 இதழில் வெயியிட்டுள்ளது. அதன் தமி ழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.)

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த எனது பல நேர்காணல்களிலும், சில செய்திப் பத்திரிகைகளில்  நான் எழுதியிருந்த பல கட்டுரைகளிலும் ஊடகங்கள் பற்றிய எனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தேன்.

என்றாலும், நான் எழுப்பிய சில பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், விரிவுபடுத்திக் கூற வேண்டும் என்றும் ஊடகத்துறையினர் உள்ளிட்ட மக்கள் பலர் விரும்பினர். நான் கூறியவற்றுக்கு மாறுபட்ட கருத்துகள் சில எழுப்பப்பட்ட தாகத் தோன்றுவதால், அதற்கு நான் ஒரு விளக்கம் அளிப்பது சரியானதாகவே இருக்கும்.

வரலாற்று மாற்றம்

இந்தியா இன்று,  பழைமையான நில பிரபுத்துவ விவசாய சமூகம் என்ற நிலையிலிருந்து நவீன தொழில் சமூக மாக மாற்றம் பெறும்,  ஒரு வரலாற்று மாற்றக் காலத்தைக் கடந்து கொண்டி ருக்கிறது. வரலாற்றிலேயே  துன்பமும் வேதனையும் மிக்க காலமாக இருப்ப தாகும்  இது. பழைய நிலபிரபுத்துவ சமூகம் வேருடன் பெயர்த்து எடுக்கப் பட்டு சிதைக்கப்பட்டுவிட்டது. ஆனால் நவீன தொழில் சமூகம் முழுமையாகவும், உறுதியாகவும் இன்னமும் நிலை நிறுத்தப்படவில்லை.

பழைய மதிப்பீடுகள் நொறுங்கிப் போன நிலையில், அவற்றின் இடத்தில் புதிய நவீன மதிப்பீடுகள் இடம் பெறவில்லை. ஒவ்வொன்றும் குழப்ப மாகவும், கொந்தளிப்பாகவுமே உள்ளது. மேக்பத் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் கூறியது போல, நியாயமே தவறாகவும், தவறே நியாயமாகவும் இருக்கின்றது.

16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு காலம் வரை அய்ரோப்பிய வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், இவ்வாறு பழமையான நிலபிரபுத்துவ சமூகநிலையிலிருந்து நவீன தொழில் சமூகமாக மாற்றம் பெற்றபோது, இந்த மாற்றக் காலம் பெரும் கொந்தளிப்பும், பதற்றமும், போர்களும், புரட்சிகளும், சமூகக் கலவ ரங்களும், அறிவுப் புரட்சிகளும் மிகுந்த காலமாக இருந்ததை உணரமுடியும். இத்தகைய ஒரு பெரும் சோதனைத் தீயில் சிக்கிச் சீரழிந்த பிறகுதான் அய்ரோப்பாவில் நவீன சமுதாயம் உருப் பெற்றது. இந்தியாவும் தற்போது அந்தத் தீயைப் போன்ற சோதனையை தான் கடந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டின் வரலாற்றிலேயே துன்பம் நிறைந்த ஒரு காலகட்டத்தை நாம் இப்போது கடந்து கொண்டிருக்கிறோம். இது இன்னமும் ஒரு 15 அல்லது 20 ஆண்டுகள் தொடரும் என்று கருது கிறேன். இந்த மாற்றக் காலம் துன்பம் ஏதுமின்றி, விரைவாக கடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் வரலாறு அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.

இந்தக் கால மாற்றத்தில், கருத்து களின், அதாவது ஊடகங்களின் கருத்து களின் பங்கு மிகவும் முக்கியமானதாக ஆகிவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வரலாற்று சந்திப்பில், இக் கருத்துக்களே செயலாற்றல்களாக மாற்றம் பெற்று விடுகின்றன. எடுத்துக் காட்டாக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச் சார்பின்மை என்ற கருத்துக்கள் அய்ரோப்பாவின் விழிப்புணர்வு காலத் தில், குறிப்பாக அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளின்போது,  ஆற்றல் மிகுந்த சக்திகளாக வடிவெடுத்ததைக் குறிப்பிட லாம். அய்ரோப்பாவில்  பழமையான நிலபிரபுத்துவ சமூக நிலையிலிருந்து நவீன தொழில் சமூகமாக மாற்றம் பெற்ற மாற்ற காலத்தில், அப்போது இருந்த ஒரே ஊடகமான செய்தித் தாள்கள் வரலாற் றுச் சிறப்பு மிக்க பெரும் பங்காற்றின.

அய்ரோப்பிய ஊடகங்களும் இந்திய ஊடகங்களும்

அய்ரோப்பிய நாளிதழ் ஊடகங்கள் அக்கால மாற்றத்தின்போது அளித்த பங்களிப்பினைப் போன்று இந்திய ஊடகங்களும் இப்போதைய மாற்ற காலத்தில் ஆற்ற வேண்டுமென்பதே எனது கருத்து. ஜாதிய அமைப்பு முறை, மதவெறி, மூடநம்பிக்கைகள், பெண்ண டிமைத் தனம், போன்ற பிற்போக்குத்தன மான, பழமையான கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் தாக்குவதன் மூலமும், நவீன, பகுத்தறிவு கொண்ட, அறிவியல் கருத்துகளையும், மதச் சார் பின்மையையும், சகிப்புத் தன்மையையும்  பிரச்சாரம் செய்வதன் மூலமும்,  தங் களின் பங்களிப்பை அவை ஆற்றலாம். ஒரு காலத்தில் நமது ஊடகங்களின் ஒரு பகுதியினர் ஒரு மாபெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

முன்னேற்றக் கருத்துகள் கொண்ட, சமூகப் பொறுப்புடன் கூடிய பங்கினை ஆற்றத் தவறியதற்காக, இந்திய ஊடகங்களை, குறிப்பாக ஒளி,ஒலி பரப்பு ஊடகங்களை, நான் குறை கூறி விமர் சித்தபோது, எனது கருத்துகளுக்காக கடுங்கோபம் கொண்ட ஊடகத்தின் ஒரு பிரிவினரால் நான் மிகக் கடுமையாகத் தாக்கப் பட்டேன். சிலர் என் மீது தனிப் பட்ட தாக்குதல்களையும் மேற்கொண் டனர்; அரசின் ஏஜெண்ட் என்று நான் வர்ணிக்கப்பட்டேன். ஊடகங்கள் செயல் படும் முறைகள் பற்றி தீவிரமான பிரச்சினைகளை எழுப்பும்போது, அந்தப் பிரச்சினைகள் கவனத்துடன் தீர்க்கப்பட வேண்டுமேன்றே எதிர்பார்க்கப்படுகிறது.

என் விருப்பம்

ஊடகத்தினை நான் விமர்சிக்கும் போது, தங்களின் செயல்படு வழியை அவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களைத் தூண்டவேண்டுமென்றே நான் விரும்பி னேனே அன்றி,  அவர்களை அழிக்க வேண்டு மென்று நான் விரும்பவில்லை. இந்த வரலாற்று மாற்றக் காலத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பங்கினை ஆற்றவேண்டிய நிலையில் ஊடகத்துறை உள்ளது. நாட்டிற்கு ஆற்ற வேண்டிய அவர்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமையினை ஊடகத்தினருக்கு நினைவுபடுத்தவே நான் விரும்பினேன். எனது விமர்சனத்தைச் சரியான கண்ணோட்டத்தில், உணர்வில் எடுத்துக் கொள்வதற்கு மாறாக, ஊடகத்தின் ஒரு பகுதியினரால் என் மீது பொழியப்பட்ட உண்மையான வசைமாரி  எனக்கு ஏதோ ஒரு சர்வாதிகார அரக்கனைப் போன்ற தோற்றத்தை அளித்தது. ஊடகத்தினர் என்னை அவர்களது நலம் விரும்பி என்றுதான் கருதவேண்டும். தங்களின் பல தவறுகளை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், அய்ரோப்பிய ஊடகத்தினர் மக்களிடம் பெற்றிருக்கும் மரியாதையைப்போன்ற இந்திய மக்களின் மரியாதையை அவர்களும் பெறவேண்டும் என்றும் நான் விரும்பியதால் தான், அவர்களை நான் விமர்சித்தேன்.

நமது நாட்டின் 80 விழுக்காடு மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருள்களின் விலை வானளாவ உயர்ந் திருப்பது, கல்வி, மருத்துவ வசதிகள் இன்மை போன்றவை ஒரு புறமிருக்க,  கவுரவக் கொலை, வரதட்சணைக் கொலை, ஜாதி ஒடுக்குமுறை, மதவெறி போன்ற காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்கள் மற்றொருபுறம் நிலவு கிறது.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பது பற்றி கவலை கொண்டு சிந்தித்து செயலாற்றுவதை விட்டுவிட்டு, நமது ஊடகங்கள் 90 விழுக்காடு அளவுக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள், செய்தி களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, சினிமா நட்சத்திரங் களின் வாழ்க்கை முறை,  ஆடை அலங்கார அணிவகுப்புகள், பாப் இசை, டிஸ்கோ நடனம், கிரிக்கெட் போன்ற நிகழ்ச்சி களுக்கும், ஜாதகம், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றன.

சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு ஊடகங்கள் அளிக்க வேண் டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 90 விழுக்காடு நிகழ்ச்சிகள் பொழுது போக்குக்கு ஒதுக்கிவிட்டு, மற்ற எல்லா சமூகப் பொருளாதார நிகழ்ச்சிகளுக்கு, செய்திகளுக்கு 10 விழுக்காடு நேரம் மட்டுமே  ஒதுக்கப்பட்டால், எந்த நிகழ்ச்சி களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பற்றிய ஊடகங்களின் உணர்வு தறிகெட்டு ஓடுகிறது என்றுதான் கருதவேண்டும்.

மக்களின் முன் உள்ள உண்மையான பிரச்சினைகள் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளே; ஆனால் பிரச்சினைகளே இல்லாத சினிமா நட்சத்திரங்கள், ஆடை அலங்கார அணிவகுப்புக் காட்சிகள், டிஸ்கோ, பாப், கிரிக்கெட் போன்றவை களின் பக்கம்   மக்களின் கவனத்தை ஊடகங்கள் திருப்பி விடுகின்றன. இவ்வாறு எதற்கு முன்னுரிமை அளிப்பது என்ற உணர்வு இல்லாமல் இருப்பது, மூடநம்பிக்கைகள் கொண்ட நிகழ்ச்சிகள், செய்திகளைக் காட்டுவது போன்ற வற்றையே நான் விமர்சித்தேன்.

விமர்சனத்துக்கு அஞ்சேல்!

விமர்சனத்தைக் கண்டு எவர் ஒருவரும் அஞ்சவும்  கூடாது; கோபம் கொள்ளவும் கூடாது. என்னை எவர் வேண்டுமானா லும், அவர்கள் விரும்பியபடியெல்லாம் விமர்சிக்கலாம். அதற்காக நான் கோபப் பட மாட்டேன்.  அதனால் எனக்கு பயனும் கிடைக்கக்கூடும். அது போலவே நான் விமர்சிப்பதற்கும் ஊடகங்கள் கவலைப் படக்கூடாது. அவர்களை மேலும் சிறந்த ஊடகங்களாக ஆக்குவதுதான் என் நோக்கம்.

என்றாலும் விமர்சிக்கும்போது அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.  எதிரி என்ன சொன்னார் என்ற சரியான சொற் களை அப்படியே, அவற்றை மாற்றாமல், திரிக்காமல் தெரிவிக்க வேண்டும். அந்த வழியைத்தான் நமது தத்துவஞானிகள் பயன்படுத்தினர். எதிர் அணியினரின் கருத்தை முதலில் அவர்கள் கூறுவார்கள். அறிவு நாணயத்துடன் அது மிகச் சரியாக இருக்கும். அதைக் கூறியவர் எதிரில் இருந்து அதைக் கேட்டால்,  தன்னைவிட இவர் நன்றாகவே அதனை எடுத்துக் கூறுகிறார் என்று கருதுவார். அதன்பிறகு அதனை மறுப்பது ஏன் என்று அவர் கூறுவார். இந்த பழக்கத்தை நமது ஊடகங்கள் பின்பற்றுவதில்லை என்பது இழப்புக் கேடே.
(தொடரும்)
நன்றி: தி ஹிந்து 16.11.2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...