Thursday, October 6, 2011

திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல்


நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல்



நெய்வேலியில் திராவிடர் கழகம் நடத்திய பேரணி? (4)
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


அதையெல்லாம் மீறித் தி.க.வின் மாபெரும் பேரணியைச் சாலையின் இரு மருங்கிலும் கூடி நெய்வேலி வாழ் மக்கள் வாழ்த்தி அனுப்பியதும், பேரணித் தலைவர் - தமிழர் தலைவர் அவர்களுக்குப்  பேரளவில் துண்டு களும் நிதியும் அளித்து வாழ்த்திய வாழ்த்தொலிகள், உற்சாகப் பூங் கொத்துகள் என்றும் மணப்பவை.


பேரணி நிறைவுற்ற மதியம் 1-15 மணிக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர் கள், துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழக இளைஞரணிச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாநிலத் தொழிலாளர் அணிச் செயலாளர் இரா. கனகசபா பதி, மாவட்ட தி.தொ.க. செயலாளரும், நெய்வேலி திராவிடர் கழகத் தலைவருமான வி.செயராமன், நாடாளு மன்ற முன்னாள்  உறுப்பினர் வெ.குழந்தைவேலு, ச.இராமதாசு, இளைஞரணித் தலைவர் வி.ஞான சேகரன் ஆகியோர் அலுவலகக் கட்டடத்தை அடைந்தனர்.


என்.எல்.சி. தலைவர் திரு மகிப்சிங் நிறுவன அதிகாரிகள், தமிழர் தலை வரை வாயிலிலேயே நின்று வரவேற்ற பெருமைமிகு செயல் நடைபெற்றது. அது மட்டுமா? மகிப்சிங் தமிழர் தலைவரைப் பார்த்து, 


“First let me congratulate you sir, you are the first person to generate the public opinion against this issue and  convey me to the appropriate authorities”


என்று கூறியதை மறந்துவிடாமல் இன்றும் நினைவு கூர்கிறார் நெய் வேலி செயராமன். உங்களை முதலில் நான் பாராட்டி மகிழ்கிறேன். தமிழ கத்தில் நீங்கள் மட்டுமே மக்களின் எண்ணத்தையும், இந்தப் பிரச் னையையும் பேரணி ஒன்றின் வாயி லாகவும், உங்களுடைய கோரிக்கை மனுவின் வாயிலாகவும் என்வாயி லாகவும், மய்ய அரசுக்கு அனுப்பு கிறீர்கள் என்று குறிப்பிட்டது எவ் வளவு யதார்த்தமான, உண்மையான வார்த்தைகள். கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் அனைத்தையும், தான் உணருவதாகக் குறிப்பிட்டார்.

கழகத் தலைவர் அளித்த மனு



நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தலைவர் திரு.மகிப் சிங்கிடம் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலை வரால் மனு ஒன்று தரப்பட்டது.


மத்திய அரசில் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் விசைத் துறை அமைச்சராயிருந்த வசந்த் சாத்தே விற்கு முகவரியிடப்பட்ட மனுவில் குறிப்பிட் டிருந்தவை இவை. (கடந்த வாரம் வசந்த் சாத்தே மறைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.)


பொதுத்துறையில் லாபகரமாக இயங்கும் பத்து நிறுவனங்களில் ஒன் றாகத் திகழ்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இந்த நிறுவனம் ஆறாவது சுரங்கம் வெட்டவிருக்கிறது; அனல் மின்னகத்தையும் நிறுவ உள்ளது. இந்தச் செயல்பாடுகளுக்கு எமது பாராட்டுகள்.


இந்தச் சூழலில் தமிழர்களின் நலன் கருதியும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன முன்னேற்றத்தில் தடங்கலைத் தவிர்க்கக் கருதியும் சில குறிப்புகளைத் தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.


1. அசாம் மாநிலம் பெறுவது போல், தமிழ்நாடு அரசும் நெய்வேலி நிலக் கரிக்காக ராயல்டி மூலம் உரிய பங்குத் தொகையைப் பெறவேண்டும்; நீண்ட காலமாகத் தமிழர்கள் விடுத்துவரும் கோரிக்கை இது?


2. ராஜஸ்தான் மாநிலத் திட்டம் ஒன்றிற்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஏறத்தாழ ரூ. 700 கோடிகளை ஒதுக்கீடு செய்து அதில் ஏற்கனவே ரூ. 11 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும் அறிகிறோம். இது விந்தையாக இருக் கிறது. ஏனெனில், நெய்வேலியில் மூன்றாம் அனல் மின்னகம், மற்றும் சுரங்கச் செயல் பாடுகளின் திட்ட மதிப்பீடு ஆறாயிரம் கோடி ரூபாய்கள். ஆனால்  இவற்றிற்காக இது வரை நிறுவனம் ஒதுக்கியிருக்கும் தொகையோ வெறும் 11 கோடி ரூபாய்கள் தான். இந்த நடவடிக்கைகள், தாம் வஞ் சிக்கப்படும் எண்ணத்தை தமிழாகள் மனதில் ஊன்றியுள்ளது.


ராஜஸ்தானில் துவக்கவுள்ள நெய்வேலி நிறுவனத் திட்டம் லாபகரமானதோ, நீடித்து நிலைக்கக் கூடியதோ அல்ல என்றும் நாங்கள் அறிகிறோம். நாங்கள் அறிந்த வரை இந்த ராஜஸ்தான் திட்டத்தால் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் நட்டமேற்படும் என்பதுதான்! அங்குத் தயாரிக்கத் திட்ட மிடப்படும் மின் உற்பத்திக்கான செலவும் அதிகம்.


இன்றைய சூழலில் இவைதீர ஆராயப்பட வேண்டியவை. இத்தகையதோர் விரிவாக் கத்தால் உற்பத்தி எவ்வாறு பெருகும் என எமக்குப் புரியவில்லை.


இவ்வாறு ராஜஸ்தான் திட்டத்திற்குப் பணத்தைப் பாழடிப்பதற்குப் பதில் இதே பணத்தை நெய்வேலியிலிருந்து 40 கிலோ மீட்டர்  தொலைவு கூட இல்லாத ஜெயங் கொண்ட சோழபுரம், புதுவை மாநிலத்தில் உள்ள பாகூர் ஆகிய இடங்களில் புதைந்து கிடக்கும் நிலக்கரிப் படிவங்களை அகழ்வ தற்குப் பயன்படுத்தலாம். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் வளமடையும். இந்த இரு ஊர்களில் நிலக்கரி அகழ்ந் தெடுக்கப் பட்டால் ராஜஸ்தான் திட்டத்தைக் காட்டிலும் அதிக லாபமும் கிடைக்கும்.


எனவே அவசரக் கோலமான ராஜஸ் தான் திட்டச் செயல்பாட்டை அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


தென் ஆர்க்காடு மாவட்டத்தில் 28-9-1989 அன்று நடந்த தொழில் துறை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல் வர் மாண்புமிகு கலைஞர் பேசுகையில், காவிரிப் படுகையில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்ற மாநிலத் திட்டங் களுக்காகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சமும், சில வதந்திகளும் எழுந்துள்ளன. இவை வதந்திகளாகவே இருக்குமாறு மத்திய அரசினர் நடந்து கொள்ள வேண் டும். வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது. இந்த விவகாரத்திலும் தி.மு.கழக அரசு தமிழர்கள் உரிமைக்காக டில்லியிடம் உரிமைக் குரல் கொடுக்கும் என்றார்.

(இண்டியன் எக்ஸ்பிரஸ் 29-9-1989)



3. தற்போதைய நிலக்கரி நிறுவனத் தலைவர் அவர்கள் நிலக்கரி நிறுவன விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கி யோரின்வேலை இல்லாத் திண் டாட்டத்தைத் தீர்த்து வைத்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்; நன்றி தெரிவிக்கிறோம்.


அரசுக்கு அளித்த பட்டா நிலத்த வர்கள் பயனடையவும் உதவ வேண்டு கிறோம். இதற்கான சட்டப்படியான உரிமையும் அவர்களுக்குண்டு. இத் தகைய சிக்கல்களால் மக்கள் கொதித் துக் கிடக்கிறார்கள். தங்கள் ஆற்றலின் மூலம் இந்தச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கக் கோருகிறோம்.அதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்ப வர்கள் மேற்பட வாய்ப்பு உண்டு. நன்றி.


(இன்னும் வளரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...