Wednesday, October 5, 2011

நவராத்திரியில் நடப்பது என்ன?



நவராத்திரி விழாவின்போது ஆயிரக்கணக்கான இளமையான ஆண்களும் பெண்களும் நள்ளிரவு வரை ஆடல் பாடலில் ஈடுபடுவது வழக்கம். ஒன்பது இரவுகள் இவ்வாறு கொண்டாடப்படுகின்றன.

 நவராத்திரிக் கொண்டாட்டத்துடன், எய்ட்ஸ், எச்.அய்.வி., மற்ற பிற பாலியல் நோய்கள் பரவுவதைப் பற்றியும், விரும்பத் தகாத கருத்தரித்தல் பற்றியும் அச்சம் நிலவுகிறது.

ஜாஸ்லோக் மற்றும் லீலாத்வதி மருத்துவமனைகளில் ஆலோசகராக இருக்கும் பிள்ளைப்பேறு மருத்துவர், டாக்டர் திருமதி ரேஷ்மா பாய் இதைப் பற்றிக் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நவராத்திரிக்குப் பின்பு கருவைக் கலைக்கக் கோரி மருத்துவமனைகளுக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்றார்.

வேண்டாத கருவைக் கலைக்க வருவோர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொதுவாக இவர்கள் பழைய சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோர். ஆனால் நவராத்திரியின்பொழுது கட்டுப்பாடுகள் இல்லை. ஆதலால் இளசுகள் எல்லை மீறுகிறார்கள், என அவர் மேலும் கூறினார்.

ஆனால் டாக்டர் ஜெய்தீப் டேங்க் என்ற பிள்ளைப் பேறு மருத்துவர், இவ்வாறான ஒரு போக்கு இருப்பதை மெய்ப்பிக்கப் புள்ளி விவரங்கள் இல்லை என்கிறார். பொதுவாக, நவராத்திரியின் பொழுது கருவுறுதல் அதிகரிக்கிறது, கருக்கலைப்புகள் மிகுந்து வருகின்றன என்று மருத்துவர்களிடையே பேசப்படுவது வழக்கம் என்றார். என்னுடைய மருத்துவமனைகளில் உள்ள அனுபவத்தைக் கொண்டு அப்படிச் சொல்லுவதற்கு இல்லை என்றும், கருத்தடைச் சாதனங்கள் தாராளமாகக் கடைகளில் கிடைக்கின்றன என்றும் சொன்னார்.

நவராத்திரி மண்டல்களுக்கு (மன்றங்களுக்கு) அருகில் அரசு சாராத அமைப்புகள், எச்.அய்.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மய்யங்களைத் திறந்துள்ளன. கருக் கலைப்பில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை சொல்லுகின்றன. வீதி நாடகங்கள், கண்காட்சிகள் முதலிய வற்றின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அந்த அமைப்புகளில் சில கருத்தடை உறைகளையும் விநியோகிக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற மராத்திய நடிகர் ஆதேஷ் பந்தேகர் பெயரில் உள்ள நவராத்திரி மன்றம், மற்றும் போரிவலியில் உள்ள நாயுடு நவராத்திரி மன்றம் ஆகியவற்றிற்கு அருகில் விழிப்புணர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று மும்பை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தைச் சேர்ந்த ஷீடல் மாத்ரி கூறினார்.

கடந்த 4-5 ஆண்டுகளாக, அவர்ட் சங்கம் எனும் அமைப்பு நவராத்திரி மற்றும் கணேஷ் மன்றங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அந்தச் சங்கம் கருத்தடைச் சாதனங்களை இலவசமாக விநியோகிக்கிறது. அதிக மானவர்கள் அவற்றை இந்தக் கொண்டாட்டங்களின்போது பெற்றுச் செல்லுகிறார்கள் என, அவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கள மூர் கூறினார்.

(இது கடந்த (2010) நவராத்திரியையொட்டி ஏடுகளில் வெளிவந்த செய்தி - தகவல்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...