Wednesday, October 5, 2011

அரசியல் (இ) எப்படி இருக்கு?


அரசியல் (இ) எப்படி இருக்கு?

தமிழக முதல்வரின் ராசி எண் ஏழு... திருப்பூர் மாநகராட்சியில் மேயர் வேட்பாளர் ஒருவர்; 60 கவுன் சிலர்கள் எனக் கூட்டுத் தொகை ஏழாக வருகிறது. அம்மா ராசிப்படி திருப்பூர் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு (அ.இ.அ.தி.மு.க.)

ரொம்ப சரி... வெற்றி உறுதிதானே? பின் எதற்காக தேர்தல் பிரச்சாரம்? அம்மா ராசிப்படி ஏழு கூட்டுத் தொகை வருமாறு நாடெங்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்த வேண்டியதுதானே?

****

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளில் அஷ்டமி, நவமி நாட்களாகப் பார்த்து அறிவிக்கப் பட்டுள்ளன.
- மருத்துவர் ராமதாசு

ஒரு பக்கம் பெரியாரைப்பற்றிப் புகழ்ந்து பேசுவது, இன்னொரு பக்கம் பெரியார் கொள்கையைக் கொச்சைப்படுத்தலாமா?

நல்ல நாளில் தேர்தல் நடந்தாலும் சரி, கெட்ட நாளில் தேர்தல் நடந்தாலும் சரி வெற்றி பெறப் போவது ஒருவர்தானே?

****

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி: உள் ளாட்சித் தேர்தலில் அரசியல்  தேவையில்லை என்று திராவிடர் கழகம் கருதினாலும், நடைமுறையில் அதற்கு மாறான சூழ்நிலையே நிலவுகிறது. இருந் தாலும், நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பொது மக்களுக்கு வழிகாட்டவேண்டிய கடமை தி.க.வுக்கு இருக்கிறது.

டவுட் தனபாலு: என்னங்க இது... சிரிப்பு சிரிப்பா பேசுறீங்க... உங்க கருத்து நடைமுறைக்கு ஒத்து வரலைன்னு நீங்களே சொல்றீங்க... அப்புறம் நீங் களேதான் பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை இருக்குன்னும் சொல்றீங்க... நடைமுறைக்கு ஒத்துவராத வழியைக் காட்டுறதுதான் உங்க கடமையா?
- தினமலர், 5.10.2011

நடைமுறைக்கு ஒத்துவரலைன்னு சொல்லாத தைச் சொல்லும் பித்தலாட்டம் ஏன்?

நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்லிவிட்டு, திராவிடர் கழகம் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கலாமா என்று கேட்பதுபோல் அல்லவா இருக்கிறது?

ராஜாஜிதான் இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது என்று சொன்னாரே, தின மலர் கூட்டமும், சங்கராச்சாரி வகையறாக்களும் நாட்டைவிட்டு வெளியேறாமல் ஏன் இன்னும் இங்கு இருக்கிறார்கள் என்று கேட்கத் தெரியாதா தி.க.வுக்கு?

உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் தேவையில்லை என்பதுதான் தி.க.வின் நிலைப்பாடு; அதேநேரத்தில், அந்த நிலை ஏற்படும்வரை, ராமன் ஆண்டால் என்ன? என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

எதற்கொடுத்தாலும் தி.க. பயம் (ஞாடியை) இருப்ப தால்தான் தினமலருக்கு இந்த உதறல் - உளறல்! ஹி... ஹி....

****

திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுஜாதா - என்னைக் கேட்காமல் என் பெயரை எப்படி அறிவிக்கலாம்? மேயர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நல்ல கட்சியப்பா காங்கிரஸ்? கேட்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. கேட்காதவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்கிறது... இல்லை, இல்லை திணிக்கிறது.

காங்கிரஸ் என்றாலே, கூட்டம்தானே! கட்டுப்பாடு எங்கிருந்து குதிக்கப் போகிறது?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...