தோஷம் கழிக்கவாம்! சனீஸ்வரன் கோவிலில் அமைச்சர் ப.சிதம்பரம்
கம்பம், அக். 4-மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குடும்பத் தினருடன் ஓய்வெடுப்ப தற்காக, கேரள மாநிலம் தேக்கடிக்கு சனிக் கிழமை வந்து 3 நாள்கள் தங்கிய பின்னர், திங் கள்கிழமை மாலை குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய் தனராம். கம்பம் வழி யாகதேக்கடிக்கு அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் சனிக்கிழமை வந்தார். தேக்கடியில் உள்ள கேரள சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ஆர்னியா நிவாஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். சனிக் கிழமை மாலையில் தேக்கடி பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் கேரள வனத் துறைக்குச் சொந்தமான படகில் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் படகு சவாரி செய்தனர்.
ஞாயிற்றுக் கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ப. சிதம்பரம் காந்தி சிலைக்கு மாலை அணி விப்பார் என்று பேச பட்ட நிலையில், அவர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்ல வில்லை. மகன், மரு மகள், பேத்தி ஆகியோர் மட்டும் அட்டைபள் ளம் என்ற இடத்தில் யானை சவாரி மேற் கொண்டனர். திங்கள்கிழமை காலையிலும் ஹோட் டல் அறையை விட்டு வெளியே வராத அமைச் சர், நண்பகலில் ஹோட் டல் வளாகப் பகுதியில் காணப்பட்டார். அதன் பின்னர், தேக்கடி வீதி களில் சென்று நறுமணப் பொருள்களை வாங் கினார்.இதனைத் தொடர்ந்து, 3 நாள்கள் ஓய்வை முடித்துக் கொண்டு கேரளத்தை விட்டுப் புறப்பட்டார். மாலையில், தேனி மாவட்டம், சின்ன மனூர் அருகே உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு ப.சிதம் பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோர் வந்தனர். கோவில் நிர்வாகத் தினர் அமைச்சர், குடும் பத்தினரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
சுரபி நதியில் அமைச்சர், குடும்பத்தினர் கை, கால் கழுவினர். பின்னர், காக்கைவாகனச் சிலையை குடும்பத்தினர் அனைவரும் தலையில் வைத்து தங்களின் தோஷத்தைக் கழித்தன ராம்.அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் ராசி, நட்சத்திரத்தைக் குறிப் பிட்டு கோயில் தலைமை பூசாரி ஜெயபாலமுத்து சிறப்பு பூஜை நடத் தினார். அதற்குமுன் அனை வருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர், அவர்கள் காரில் மது ரைக்குப் புறப்பட்டனர். பத்திரிகையாளர்கள் அமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும், எந்தவிதப் பதிலும் அளிக்காமல், அமைதியாகச் சென்றார். பாதுகாப்பு அதிகாரி களும் அவரைச் சந்திக்க விடவில்லை.
No comments:
Post a Comment