தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
பிரபஞ்சத்தின் நிறம் என்ன?
அ) வெள்ளிப் புள்ளிகள் கலந்த கருப்பு (Black with Silvery bits)
ஆ) கருப்புப் புள்ளிகள் கலந்து வெள்ளி நிறம் (Silver with Black bits)
இ) இளம் பச்சை (Pale green)
ஈ) வெளிர் பழுப்பு நிறம் (Beige)
பிரபஞ்சம் வெளிர் பழுப்பு நிறம் கொண்டதுதான் என்று அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பால்வெளி வீதி ரெட்ஷிப்ட் ஆய்வின் மூலம் 200,000 பால்வெளி வீதிகளில் இருந்து தொகுக்கப்பட்ட ஒளியை பகுத்தாய்வு செய்த பிறகு 2002 இல் பிரபஞ்சம் இளம் பச்சை நிறம் கொண்டது என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க அறிவியலாளர்கள் முடிவு செய்தனர்.
காட்சிக்குத் தோன்றுவதைப் போன்று வெள்ளிப் புள்ளிகள் கலந்த கருப்பு நிறமல்ல அது. டூலக்ஸ் பெயிண்ட் நிறங்களை அளவுகோலாக எடுத்துக் கொண்டால், மெக்சிகன் மின்ட் (Medican Minit), ஜேட் கிளஸ்டர் (Jade Cluster) மற்றும் ஷங்கிரிலா சில்க்கு (Shangri La Silk) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிறமாகும்.
அமெரிக்க வானவியல் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில வாரங்கள் கழித்து, தங்கள் கணிப்புகளில் தாங்கள் ஒரு தவறு செய்துவிட்டதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. பிரபஞ்சம் உண்மையிலேயே ஒரு வகையான டாபே வண்ணத்தின் சாயலைக் கொண்டதாகும். (a sort of dreary shade of taupe)
இரவில் வானம் ஏன் கருப்பாக இருக்கிறது என்பது பற்றி ஏழம் நூற்றாண்டு முதலே ஆர்வ மனங் கொண்ட மபெரும் மனிதரில் சிலர் மிகுந்த வியப்படைந்தவர்களாக இருந்தனர். பிரபஞ்சம் எல்லையற்றதாகவும், ஒன்று போலவே பகிர்ந்தளிக்கப்பட்ட வின்மீன்களை (Stars) கணக்கின்றி கொண்டிருப்பதாகவும் இருந்தால், நாம் காணும் இடங்களில் எல்லாம் ஒரு வின்மீன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இரவு நேரத்தில் வானம் பகலைப் போல் ஒளி மிகுந்ததாக இருக்கும்.
ஜெர்மானிய வானியலாளர் ஹெயின்ரிச் ஓல்பர்ஸ் விவரித்ததற்குப் ( இவ்வாறு விவரிப்பது முதல் முறை அல்ல) பிறகு, இது ஓல்பர்சின் முரண்பாடு கொண்டது போல் தோன்றும் உண்மை (Paradox) என்று அழைக்கப்படுகிறது.
உண்மையிலேயே இதுவரை எவர் ஒருவரும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல விடைகண்டு பிடித்துத் தரவில்லை. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட விண்மீன்கள் இருக்கவும் கூடும்; நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள விண்மீனிலிருந்து புறப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்தடையாமல் இருக்கவும் கூடும். இது பற்றி ஓல்பர்சின் தீர்வு என்னவென்றால்,
கடந்த காலத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில், சில விண்மீன்கள் அனைத்துமே ஒளிர்ந்து கொண்டிருக்கவில்லை என்பதும், ஏதோ ஒன்று அவற்றை ஒளிரச் செய்திருக்கிறது என்பதும்தான். மிகவும் நீண்ட தொலைவில் இருக்கும் விண்மீனின் ஒளி இன்னமும் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தை முதன் முதலாகக் கூறியவர் எட்கர் ஆலன் போ என்பவர்தான். அவர் தனது கவிதை நூலான யுரேகாவில் அவ்வாறு கூறியுள்ளார். ஹப்பில் வானவியல் தொலைநோக்கியின் மிக நுண்ணிய ஒளிப்படக் கருவி வானத்தை நோக்கி இயக்கப்பட்ட போது, 2003 ஆம் ஆண்டில் பன்னிரண்டு நாட்களில் (10 லட்சம் வினாடிகளில்) இரவு வானம் வெறுமையாகக் காணப்பட்டதைக் காட்டியதாம். இதன் விளைவாகக் கிடைத்த ஒளிப்படம் இதுவரை அறிந்திராத ஆயிரக்கணக்கான பால்வெளி வீதிகளைக் காட்டியதாம். அவை ஒவ்வொன்றிலும் நூற்றுகோடிக் கணக்கான வின்மீன்கள் காணப்பட்டனவாம். அவை பிரபஞ்சத்தின் இறுதி எல்லை வரை வியாபித்திருந்தனவாம்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment