Thursday, October 6, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:

நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தவர்கள் யார்?


(அ) ஜேம்ஸ் வாட்   (ஆ) ஜார்ஜ் ஸ்டீபன்சன்
(இ) ரிச்சர்ட் டிரெவிதிக் (ஈ) தாமஸ் நியூகோமன்
(உ) எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹெரான் 1711 இல் நியூகோமன் நீராவி இன்ஜினைக் கண்டுபிடிப்பதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னமேயே ஹெரான் (சில நேரங்களில் கதாநாயகன் என்று அழைக்கப்படுபவர்) நீராவி என்ஜினைக் கண்டு பிடித்தற்கான பரிசைத் தட்டிச் செல்கிறார். கணித இயலாளர் மற்றும்  வடிவியலாளர்  என்று நன்கு அறியப்பட்ட  ஹெரான் கி.பி. 62 இல் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்து வந்தார்.  

அவர் தொலை நோக்குப் பார்வை கொண்ட கண்டுபிடிப்பாளரும் கூட. அவர்  கண்டுபிடித்த காற்றுப் பந்து என்பதுதான் முதன் முதலாக செயல்பட்ட நீராவி என்ஜினாகும். நீராவி ஒரு உருளையை உந்தித் தள்ளுவது என்ற கொள்கையின்அடிப்படையில் நீராவியினால் இயக்கப்படும் ஒரு வட்ட உலோகத் தகடு நிமிடத்திற்கு 1500 முறை சுழலும். அந்த என்ஜின் செயல்படுவதை எவரும் பார்க்காமல் போனது ஹெரானின்  நல்வாய்ப்பின்மையே. அதனால் வியப்பளிக்கும் ஒரு புதுமை என்பதற்கும் மேலாக அவரது கண்டுபிடிப்பு கருதப்பட வில்லை.

கோரிந்த் அரக்கன் என்று அழைக்கப்படும் பெரியாண்டரால் அதற்கும் 700 ஆண்டுகளுக்கு முன்னமேயே ரயில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதை ஹெரான் அறிந்திருக்க முடியாது. டையோல்கோஸ் அல்லது ஸ்லிப்வே என்றழைக்கப்படும் அது 6 கி.மீ. ( 4 மைல்) கிரேக்க நாட்டின் கோரிந்த் - இஸ்துமல் இடையே ஓடியது. சுண்ணாம்புக் கல் படிவங்களால் அமைக்கப்பட்ட ஒரு பாதையில் 5 அடி இடைவெளியில் நீண்ட பள்ளம் வெட்டப் பட்டது. இந்தப் பாதையில் டிராலிகள் ஓடின. அதன் மீது கப்பல்கள் ஏற்றப்பட்டன. நிலத்தில் கால்வாய் போன்று அமைக்கப்பட்ட இதில், அடிமைக் குழுக்களால் இந்த டிராலிகள் தள்ளப்பட்டன. அகியேன் மற்றும் அயோனியன்  கடலுக்கு இடையேயான ஒரு குறுக்கு வழியாக அது பயன்பட்டது. இந்த டையோல்கோஸ் 1,500 ஆண்டுகாலம் பயன் பாட்டில் இருந்தது. கி.பி. 900 ஆண்டு வாக்கில் அது பழுது பட்டுப் போனது. அதனை அடுத்து, 500 ஆண்டு காலம் வரையிலும், 14 ஆம் நூற்றாண்டில் சுரங்கங்களில் மக்கள் இந்தக் கருத்தைப் பயன்படுத்தும் வரை, ரயில்வே என்னும் கருத்து  மக்களிடையே முற்றிலுமாக மறைந்து போயிருந்தது.

அர்னால்ட் டாயின்பி என்னும் வரலாற்றாசிரியர் இரண்டு கண்டுபிடிப்புகளை, வேகமான ஒரு ரயில் பாதை, அதேனியன் மக்களாட்சி மற்றும் ஒரு புத்தமதம் போன்று  பித்தகோரஸ் போதனைகளின் அடிப்படையில் உருவான  மதம் ஆகியவற்றை இணைத்து ஒரு உலகளாவிய கிரேக்க சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டால் என்ன நேரும் என்று ஊகித்து, ஒரு அறிவார்ந்த கட்டுரையை எழுதினார். நாசரத் நகரின் ரெயில்வே கட்டிங் எண். 4 இல்லத்தில் வாழ்ந்த வெற்றி பெறாத ஒரு தத்துவ ஞானி பற்றி சுருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெரோன் ஒரு விற்பனை இயந்திரத்தையும் கண்டு பிடித்தார். 4 டிரச்மாஸ் நாணயத்தை அதில் போட்டால்,   கொஞ்சம் புனித நீர் உங்களுக்குக்  கிடைக்கும். பாட்டில் விருந்து ஒன்றுக்கு நீங்கள் கொண்டு செல்லும் பானத்தை வேறு யாரும் குடித்துவிடாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ளும்படி  மடக்கி எடுத்துச் செல்லும் ஒரு கருவியையும் அவர் கண்டுபிடித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...