மூன்று விநாடி நினைவாற்றல் என்பது என்ன?
தங்கமீனின் நினைவாற்றல் ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடிப்பதல்ல. தங்கமீன் குறைந்தது மூன்று மாத காலத்துக்கும் மேற்பட்ட நினைவாற்றலைப் பெற்றிருப்பவை என்றும், பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள், ஒலிகளை வேறுபடுத்திக் காண இயன்றவை அவை என்றும், ப்ளைமவுத் பல்கலைக் கழகத்தின் மனோதத்துவப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அய்யத்திற்கு சற்றும் இடமின்றி மெய்ப்பித்துள்ளது.
ஒரு தடுப்பைத் (நெம்புகோல்) தள்ளினால், உணவு கிடைக்கும் என்ற வழியில் அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே அந்த நெம்புகோல் வேலை செய்யும்படி அது பொருத்தப்பட்டிருந்தாலும், அதனை சரியான நேரத்தில் செயல்படுத்த வைக்க அவை விரைவில் கற்றுக் கொள்கின்றன.
பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில், கண்ணுக்குத் தெரியும் ஒரு சமிக்ஞை கிடைத்தவுடன் உணவு உட்கொள்ள எளிதாகப் பயிற்சி அளிக்க முடியும் என்பதையும் ஆய்வுகள் காட்டியுள்ளன.
இந்தத் தங்கமீன்கள் தொட்டியின் பக்கங்கள் வரை நீந்திச் செல்வதில்லை. அவற்றால் அதைப் பார்க்கமுடியும் என்பதல்ல அதன் காரணம். ஆனால், தனது பக்கவாட்டில் உள்ள அழுத்தத்தை உணர்ந்து அதற்கேற்ப நீந்தும் முறையை அவை பயன்படுத்துவதே இதன் காரணம். சில வகையான குருட்டுக் குகை மீன்கள், ஒளியற்ற சூழ்நிலையிலும் தங்களின் பக்கவாட்டு அழுத்தத்தை உணரும் முறையைப் பயன்படுத்தி சரியாக நீந்திச் செல்ல இயன்றவையாக உள்ளன.
தங்க மீன்கள் கருவுறுகின்றன என்பது ஒரு கட்டுக் கதையே. அவை ஒரு போதும் கருவுறுவதில்லை, கருவுறவும் முடியாது. ஆனால் அவை முட்டையிடு கின்றன; அம் முட்டைகளை ஆண் மீன்கள் நீரில் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.

No comments:
Post a Comment