(25.9.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கல்வியை மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வரக் கோரும் மாநாட்டில் ஆற்றப்பட்ட தொடக்கவுரை)
ஒரு சமூகத்தில் மொழியையும், கலாச்சாரத்தையும், ஒரு தலை முறை யினரிடமிருந்து அடுத்த தலைமுறை யினருக்குச் செலுத்தும் காரணத்தால், கல்வி என்பது சமூகத்தின் மிக முக் கியமான கருவியாகக் கருதப்பட்டு வருகிறது. தங்களைப் பற்றி தாங்களே அறிந்து கொள்வதற்கும், பாரம்பரியத் தின் மூலம் தாங்கள் பெற்றுள்ள கலாச்சாரத்தைப்பற்றி தெரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் வரும் ஓரிடமே கல்வி நிறுவனம் என்ற காட்சியை அது மனக்கண்முன் கொண்டு வருகிறது. மனிதனின் வாழ்க்கையிலும், சமூகத் திலும் அதன் செயல்பாடு இருவகைப்பட்டது. ஒன்று பயன்பாடு; மற்றது கலாச்சாரம். கல்வி என்பது மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்திருப்பதாகும். வாழ்க்கைக் குத் தயார்ப்படுத்துவது அல்ல அது; வாழ்க்கையேஅதுதான். மொழி என்பது ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம் மட்டுமல்ல; கலாச்சாரம் என்பது பிரிக்க முடியாத மொழியின் ஒரு பகுதியாக விளங்குவதாகும்.
பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா
பல மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், இனங்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் கொண்ட நாடு இந்தியா. ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவை ஒரே ஒரு நாடாக ஆக் கினர். பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவுக்கு உண்மையான ஒரு கூட்டமைப்பு அரசு முறையே பொருத்தமானது என்ற உறுதியான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந் தனர். அதனால் தான், எதிர்காலத் தில் ஒவ்வொரு மாகாணமும் இயன்றவரை தனது சொந்த வீட்டின் எஜமானனாக இருக்க வேண்டும். இவ்வாறு மாகாணங்களுக்கான சுதந்திரமான வாழ்க்கை அளிக்கப் பட்டு, புதிய கூட்டமைப்பு கட்ட மைப்பைக் கொண்ட ஒரு தொகுப்பாக அது தங்களைத் தாங்களே வடிவ மைத்துக் கொள்ளும் என்ற முடி வுக்கு சைமன் கமிஷன் வந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது, இந்திய நாட்டு நிருவாகத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க ஆங்கிலேய அரசு விரும்பியதால், 1935 இந்திய அரசு சட்டத்தில் மாகாணங்களுக்கான முழு சுயஅதிகாரத்தை அது அளிக்கவில்லை.
அனைத்து கூட்டமைப்பு நாடுகளிலும், சட்டமியற்றும் அதிகாரங்கள் மத்திய மற்றும் மாகாண, மாநில அரசுகளுக் கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, அந்நியச் செலாவணி, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் மட்டும் தான் மத்திய அரசுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதர சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களும் மாகாண, மாநில அரசுகளுக்கே வழங் கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதன் காரணம், அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டால், அது சர்வாதிகாரத் திற்கு வழி வகுக்கும் என்பதுதான். யதேச்சாதிகாரம் என்பது பேரரசுக் கொள் கையின் கூட்டாளியாகும் என்பதால், சுதந்திரத்துடன் அது சேர்ந்து இருக்க முடியாது என்று 1936 இல் ஜவஹர்லால் நேரு கூறினார். கல்வி போன்ற துறைகள் உள்ளூர் மக்களுக்கு மிகவும் நெருக்க மானவையாக இருந்து , அவற்றின் மீது அவர்கள் மிகுந்த பற்றுடையவர்களாக இருப்பதாலும், அவர்களின் மொழி, கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந் தவையாக இருப்பதாலும், அவை மாகாண, மாநில அரசுகளுக்கே ஒதுக்கப்பட்டன. மக்களை எளிதாகச் சென்றடைந்து, அவர்களின் தேவைகளை பயன் நிறைந்த வகையில் விரைவில் நிறைவு செய்ய மாகாண, மாநில அரசுகளால் மட்டுமே இயலும். உலகம் முழுமையிலும், கூட் டமைப்பு நாடுகள் அனைத்திலும் பின்பற்றப் படும் அதிகாரப் பங்கீட்டு நடைமுறை இதுதான்.
உலகின் அனைத்து கூட்டாட்சி நாடுகளிலும் கல்வி, மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே உள்ளது
அமெரிக்க அய்க்கிய நாடுகளில், கல்வி பற்றி சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. அந்த அதி காரத்தை மாநில அரசுகள் தங்களிடமே வைத்துள்ளன. கனடா நாட்டிலும், கல்வி பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டும்தான் உண்டு. ஆஸ்திரேலியாவிலும் கூட, காமன்வெல்த் அரசுக்கு கல்வி பற்றிய சட்டமியற்றும் நேரடி அதிகாரம் கிடையாது. மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் விடப் பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கல்வி பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரம் கன் டோன்கள் எனும் உள்ளாட்சி அமைப்பு களிடமே உள்ளன. இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சி நடந்தபோதும் கூட, 1919 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளின் இந்திய அரசு சட்டங்களில் கல்வி பற்றிய சட்டங் களை இயற்றும் அதிகாரம் மாகாண அரசு களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்ட மன்றத்தில், நோக் கங்கள் பற்றிய தீர்மானத்தை பண்டிதர் ஜவஹர்லால் நேரு அறிமுகப்படுத்திய போது, கல்வித் துறை மாகாணப் பட்டிய லில்தான் சேர்க்கப்பட்டிருந்தது. மாகாண அரசமைப்புச் சட்டக் குழு தயாரித்த மாகாணங்களின் சட்டயமிற்றும் அதிகாரம் பெற்ற துறைகளைப் பற்றிய பட்டியலில் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி இரண்டாம் (மாகாணப்) பட்டியலில் 18 ஆம் எண் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்திய மக்களின் விருப்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்பதுதானே அல்லாமல், ஒன்றுபோலவே (ரவையசல) இருக்க வேண்டும் என்பது அல்ல. நாட்டில் உள்ள இனங்கள், சமூகக் குழுக்களுக்கு கூட்டாட்சி அமைப்பு மட்டும்தான் பொருத்த மானதாக இருக்கும் என்ற கருத்தையே அரசமைப்புச் சட்ட மன்றமும் கொண்டி ருந்தது. எனவே, ஒரு கூட்டாட்சி அமைப்பு அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான நோக்கங்கள் பற்றிய தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதனால், நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தின்படி முதன்மை அரசமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் அவர்களால் இந்திய அரசமைப்புச் சட்டம் வனையப்பட்டது. அது ஒரு உண் மையான கூட்டாட்சி அரசமைப்புச் சட்டமாகும்.
மாநிலங்களை பலவீனப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு 1949-லேயே எழுந்தது
ஆனால், இழப்புக் கேடாக, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு நோக்கங்கள் பற்றிய தீர்மானத்திற்கு எதிரான மாற்றங்கள் பலவற்றைச் செய்தது. அரசமைப்புச் சட்டமன்ற உறுப்பினர் மவுலானா ஹசரத் மொஹானி என்பவர், இப்போது வனையப் பட்டுள்ளது அனைத்துப் பகுதிகளும் ஒன்று போன்ற இந்திய சாம்ராஜ்யத்துக்கான அரசமைப்புச் சட்டம்தான் என்று கூறியதைச் சுட்டிக் காட்டலாம். 1949 செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறிய தாவது:- மத்திய அரசின் அதிகாரங் களை அதிகப்படுத்தவும், மாகாண அரசாங்கங்களை பலவீனப் படுத்தவும் டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதாக நமது நண்பர் நசிருதீன் கூறியதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதற்கும் மேலே ஒரு படி சென்று, இன்று இங்கே என்ன நடக்கிறதோ, அது அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படையையே மாற்றி விடும் என்று என்னால் கூறமுடியும். நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தின் படிதான் இந்த அரசமைப்புச் சட்டம், ஒரு ஜனநாயகக் கூட்டாட்சி மற்றும் சமத்துவ மக்களாட்சி வழியில் தயாரிக்கப்படுகிறது என்று நானும் முதலில் நினைத்துக் கொண்டி ருந்தேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் சமத்துவத்தை அதிலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது, அனைத்து மாகாணங்களையும் ஒன் றாக இணைத்து, பழைய ஆங்கிலே யரின் ஒன்றுபட்ட இந்திய சாம்ராஜ்யம் போன்ற ரவைல இந்திய சாம்ராஜ் யத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன் றுகிறது. அதைத் தவிர, அதில் வேறு எந்த நோக்கத்தையும் நான் காண வில்லை. இனியும் இந்த அரசமைப்புச் சட்டம் ஜனநாயக, சமத்துவ அல்லது கூட்டாட்சித் தத்துவப் பண்பினைப் பெற்றிருக்கவில்லை என்ற கருத்தை நான் மட்டுமே கொண்டி ருக்கவில்லை என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அது முழுமையான இந்திய சாம்ராஜ்யமாகவே ஆகிவிடும்; அதில் மாகாணங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இதுவே எனது கருத்து. அதனைத்தான் நான் முழுமையாக எதிர்க்கிறேன்.
மாகாணங்களுக்கு சுயஅதிகாரம் அளிக்கத் தவறியது என்பதற்காகத் தான், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கருப்புச் சட்டம் என்றும், சதிகாரச் சட்டம் என்றும் அழைக்கப் பட்டது. ஆனால், நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு சில விலக்குகளைத் தவிர மற்ற அனைத்து வகைகளிலும், அந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட் டதைப் போன்றே அரசமைப்புச் சட்டம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment