முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அமைச்சர்கள் ஆர்காடு வீரசாமி, பொன்முடி மீது குற்றச்சாட்டு மறுப்பு தெரிவிக்க தி.மு.க.வினருக்கு மறுப்பு
சென்னை, செப். 5- சட்டமன்றத்தில் இன்று தி.மு.க. தலைவர், முன்னாள் அமைச்சர்கள் ஆர்காடு வீரசாமி, பொன்முடி ஆகியோர் மீது குற்றச் சாட்டுகளை கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவிக்க முன்னாள் அமைச் சர் முயன்ற போது பேரவைத் தலை வர் அனுமதிக்கவில்லை. இதைக் கண் டித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று (5.9.2011) சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அதன்மீது பேசும் போது முன்னாள் முதலமைச்சர் கலை ஞர், முன்னாள் அமைச்சர்கள் ஆர்க் காடு வீராசாமி, பொன்முடி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கவும் தி.மு.க. சட்ட மன்ற கட்சி துணைத் தலைவர் துரை முருகன் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முற்பட்டபோது பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வில்லை. இதைக் கண்டித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
சட்டமன்றத்திற்கு வெளியே
முன்னாள் அமைச்சர் பேட்டி
சட்டப்பேரவை நிகழ்ச்சியிலிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டு சட்ட மன்ற பேரவை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. சட்டமன்ற கட்சித் துணை தலைவர் துரைமுருகன் பேட்டியளித் ததாவது:
திராவிட முன்னேற்ற கழக உறுப் பினர்கள் இந்த சபையில் தொடர்ந்து பணியாற்றக் கூடாது என்பதற்கு ஏற்றவகையில் எங்களுக்கு அநீதியை சட்டமன்றத்தில் இழைத்தாலும், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இடம் ஒரே இடத்தில் ஒதுக் காவிட்டாலும் சும்மா உட்கார்ந்து இருக்கும்போதும் கூட, வீண்பழி சுமத்தினாலும் கூட, மீண்டும் ஜன நாயகப் பணியை ஆற்ற வேண்டும் என்ற எங்களது தலைவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றைக்கு சட்ட மன்றத்திற்கு வந்தோம். எங்கள் உறுப் பினர்கள் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டார்கள். இன்றைக்கு நடக் கின்ற மான்யத்திலும் பேசுவதற்கு தயா ராக வந்தோம். ஆனால் திட்டமிட்டே தி.மு.க.வின் மீதும், தி.மு.க. தலைவர் மீதும், மற்றும் இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண்பழியை சுமத்திக்கொண்டிருக்கும் காரியத்தை இன்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி யும், சபாநாயகர் அவர்களும் நிறை வேற்றியிருக்கிறார்கள்.
கவன ஈர்ப்பு தீர்மானம் என்ற பெயரில் முன்னாள் காங்கிரஸ் கட்சி யிலிருந்து இப்பொழுது அ.தி.மு.க. விலே சேர்ந்திருக்கும் ஒரு உறுப்பினர் தவறான செய்திகளை திருத்தி சபை யிலே சொல்லி எங்கள் தலைவர் நிலத்தை அபகரித்திருக்கிறார். ஆக்கிர மிப்பு செய்திருக்கிறார் என்றும் எங்கள் அறிவாலயத்திலும் அங்கே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் கள் என்றும் மற்றும் பொன்முடி மீதும் மற்றவர்கள் மீதும் சராமாரி யான குற்றச்சாட்டுகளை தொகுத்து சொன்னார்.
நான் எழுந்து எங்கள் தலைவர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை அறிவால யம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை யும் மறுப்பதற்காக இருமுறை எழுந்த போது பேசி முடிக்கட்டும். உங்களை அணுமதிக்கிறேன் அணுமதிக்கிறேன் என்று சபாநாயகர் அவர்கள் சொன் னார்கள். சபாநாயகரை நம்பி நானும் அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்து உட்கார்ந்திருந்தேன். ஆனால் பேசுகிற உறுப்பினர் வரம்புமீறி வகைமீறி சொல்லக்கூடாத வார்த்தைகளால் திமுகவை அர்ச்சித்து தி.மு.கழகமே ஒரு கொள்ளைக்கூட்டம், கொள்ளை அடிக்கின்ற கும்பல், கூட்டு களவாணி கும்பல் என்ற வகையில் சரமாரியாக சொன்னார்.
நான் அப்பொழுது எழுந்து கேட்டேன். தனிப்பட்டவரின் மீது குற்றச்சாட்டைச் சொல்கின்றீர்கள். அதற்கு பதில் சொல்வதற்கு முடிந்த அளவிற்கு எங்களால் சொல்கிறோம். அல்லது அடுத்து சொல்கிறோம். ஆனால் தி.மு.கழகமே ஒரு கொள்ளை கூட்டம் என்று சொல்வதை, ஒரு உறுப்பினர் சொல்வதை நாங்கள் எப்படிக் கேட்டுக் கொண்டிருக்க முடியும்.
இதைச் சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். ஏனென்றால் பொத் தாம் பொதுவாக என்றால் தி.மு.க.வில் உள்ள லட்சக்கணக்கான பேரும் கொள்ளைக் கூட்டம் என்றால், இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. இதை எப்படி ஒரு கழகம் ஏற்றுக் கொள் ளும். எப்படி நாங்கள் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியும் என்று சொன்னால் உனக்கு பேசுவ தற்கு அனுமதி கிடையாது என்றார். நீ நோட்டீஸ் கொடுத்திருக்கிறாயா என்று சபாநாயகர் கேட்கிறார்.
ஒரு உறுப்பினர் எந்த நேரத்திலும் சபை ஒழுங்கு தவறி போகிறது என்றால் பேசுகிறவர்கள் ஒழுங்கு தவறி பேசி னால் சபாநாயகருடைய கவனத்தை ஈர்க்க பாய்ண்ட் ஆஃப் ஆர்டர்ஸ் எழுப்புவது வழக்கம். ஒழுங்கு பிரச்சினை நான் அந்த பாய்ண்ட் ஆஃப் ஆர்டர்ஸை கிளப்பிதான் பேசினேன். ஆனால் முடியாது என்று ஒத்த கூச்சல் போட்டு சபாநாயகர் உள்பட எங்களை வெளியேற்றுவதில் முற்பட்டார்கள்.
ஆக எங்களுக்கு அவர்கள் சொல்வ திலே பதில் சொல்வதற்கு கஷ்டமல்ல. காரணம் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் இந்த சபையில் சொல்லி விளக்கப்பட்டிருக்கிறது. கலைஞரு டைய வீட்டிற்கு பின்னால் ஒரு ஓடை இருந்ததாம். அந்த ஓடையை கலைஞர் அபகரித்துள்ளாராம். இது சொல் கின்ற குற்றச்சாட்டு அங்கே ஒரு காலத் தில் இருந்த ஓடை இப்போதெல்லாம் வற்றிப்போய் பக்கத்தில் இருப்பவர் கள் வீடு கட்டி பக்கத்தில் வாழுகின்ற வர்களும் மற்றவர்களும் போகின்ற வழியாகிவிட்டது.
அந்த இடத்தை கலைஞர் அவர் கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஆக் கிரமிக்கவில்லை. அந்த இடத்தில் அவருக்கு பாதுகாப்புக்காக இருக் கின்ற போலீஸ்காரர்கள் அங்கே நிழ லிலே தங்கி கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த இடத்தை கலைஞர் அவர் கள் ஆக்கிரமித்து ஏதோ குடித்தனம் நடத்தவில்லை. அதேபோன்று அண்ணா அறிவாலயத்திற்கு முன்னால் இருக் கின்ற காலியாக இருக்கின்ற இடத்தை விடவேண்டியதை விட்டு பூங்காவாக மாற்றி அரசினு டைய ஆணையைப் பெற்று வைத் திருக்கிறோம்.
அதிலும் எந்தவிதமான ஆக்கிரமிப் பும் கிடையாது. பொன்முடி மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டும் இதே சட்டமன்றத்தில் பலமுறை பேசப் பட்டு பதிலளிக்கப்பட்டிருக்கிறது. மற்றதெல்லாம் வழக்கு மன்றத்தில் இருக்கிறது. வழக்கு மன்றத்தில் இருப்பதை பேசக்கூடாது என்று விதி உண்டு. ஆனால் வழக்கு மன்றத்திலே இருப்பதையும் கொண்டு வந்து ஒரு குற்றச் சாட்டாக பேசுகின்ற போது அதற்கு பதில் சொல்லக் கூடாது, பதில் சொல்ல விடமாட்டேன் என்றால் அதற்கு என்ன பொருள்.
நாங்கள் என்ன அரசாங்கத்தின் நிலத்தையா ஆக்கிரமிப்பு செய்துள்ளோம். சாலை களையா அபகரித்துள்ளோம். இல் லையே. திருப்பி கேட்பதற்கு நேர மில்லை. ஆனால் அதை விடமாட் டேன் என்று சபாநாயகர் தடுத்த கார ணத்தினால் இன்றைக்கு வெளிநடப்பு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
ஆனால் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும், உரையாற்றவேண்டும், சபையிலே கலந்து கொண்டும், மக்களுடைய பிரச்சினைகளை பேசவேண்டும் என்று வருகிறோம். ஆனால் நாங்கள் இருப்பதே அவர் களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு சட்ட மன்றம் என்றால் எதிர்க்கருத்தும் சொல் வதுதான் சட்டமன்றம். ஒரே கருத்தை சொல்லக்கூடாது. ஜனநாயகம் என் பது இருவேறு கருத்துகளுக்கு பரி மாற்றம் இருக்கவேண்டும். ஆனால் சர்வாதிகாரத்தில் தான் ஒரே குரலில் வாழ்க என்று இருக்கும். ஆக சட்ட மன்றம் ஒரு சர்வாதிகார பாணியி லேயே நடக்கிறதே தவிர ஜனநயாக பாணியிலேயே நடக்கவில்லை.
இவ்வாறு சட்டமன்றத்திற்கு வெளியே தி.மு.க. சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
No comments:
Post a Comment