Saturday, September 3, 2011

வெள்ளைக் கரு செய்யும் விந்தை!


கோழி முட்டையின் வெள்ளைக் கரு மிகப் பெரிய ஊட்டச்சத்து வயது முதிர்ந்தவர்களுக்கு. பொதுவாக முட்டை (மஞ்சள் கருவும் சேர்ந்தே) இளைஞர்களுக்கு, மகளிருக்கு எல்லா தரப்பினருக்கும் ஒரு நல்ல ஊட்ட உணவு என்கிறபோதிலும், வயதாகும் நிலையில் மனிதர்களுக்கு ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்து சேர்ந்து கொண்டு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் வயதானவர்கள் - எடை கூடுதலாக ஆகாமல் பார்த்துக் கொள்ள விரும்புவோர் மஞ்சள் கரு பகுதியை விலக்கி விடுகிறார்கள்!
வெள்ளைக் கரு ஓர் அருமையான சத்து உணவு ஆகும்! இப்படித்தான் நம்மில் பலரும் அறிந்துள்ளோம்.
ஆனால் இன்று லண்டனில் உள்ள டாக்டர் மாதவிவெள்ளையன் அவர் கள் இணையத்தின் மூலம் அரிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்!
முட்டையின் வெள்ளைக்கருவினை தீப்புண்பட்ட இடத்தில் உடைத்து ஊற்றி அல்லது தடவினால் அது தோல்களைப் பாதிக்காது காக்கும் எதிர்ப்புப் படையாக இருக்கும் என் பதை லண்டனில் ஒரு குடும்பத்தினர் அறிந்து, அத்தகவலை மற்றவர் களுக்கும் அனுப்பியுள்ளார்கள்.
ஒரு டிரக்கில் நின்று கொண்டே இளைஞர் ஒருவர், புல் தரைகளிலும், அங்கே அருகில் உள்ள புதர்களிலும் கிருமி நாசினியைத் தெளித்துக் கொண்டிருந் தார்; திடீரென்று அவர், அந்த பீப்பாயைத் திறந்து அதில் எவ்வளவு அளவு உள்ளது என்று அறிவ தற்காக, ஒரு லைட்டரையும் கொளுத்தி வைத்துக் கொண்டு அதன் துணையுடன் பார்ப்பதற்காக முயன்ற போது, தீப்பிடித்துக் கொண்டு அவரை முழுமையாகச் சூழ்ந்து கொண்டது!
உடனே இவர் தனது வாகனத்தி லிருந்து, டிரக்கிலிருந்து வெளியே குதித் தார்; கத்தினார். பக்கத்து வீட்டு நண்பர் கள், சப்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர்.
பக்கத்து வீட்டு அம்மா ஒருவர் தன்னுடன் ஒரு டஜன் (12) முட்டைகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்து அவைகளை உடனே உடைத்து அவற்றில் உள்ள வெள்ளைக் கரு பகுதிகளை தீப்பட்ட இடங்களின்மீது ஊற்றி தடவினார்.
இன்னும் கொஞ்சம் முட்டைகள் இருந்தால் உடனே எடுத்து வாருங்கள் என்றும் அக்கம் பக்கத்தினருக்குக் கூச்சல் போட்டுச் சொன்னார்.
அந்தப் பெண்மணி உடனே தீப்பட்ட முகத்தில் அதை உடனடியாகத் தடவி விட்டார்! - எந்தவித தாமதமும், இடை வெளியும் இல்லாது உடனடியாகச் செய்தார்! அடுத்து அவசர மருத்துவ உதவி (EMT)க்கு வந்தது - ஆம்புலன்ஸ். வேனிலிருந்து இறங்கியவுடன் அந்த தீப்புண்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சையைத் துவக்கினார் - அங்கேயே.
அப்போது இவரது முகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளைக் கரு தடவப் பட்டதைப் பார்த்து, மிகவும் வியப்படைந்து, உடனே இவர்மீது வெள்ளைக் கருவை உடைத்து ஊற்றி தடவியவர் யார்? என்று கேட்டவுடன், பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து, இவர்தான் அதைச் செய்தவர் என்று கூறி அறிமுகப்படுத்தினார்கள்.
ஆம்புலன்ஸில் வந்தவர்கள் - டாக்டர்கள், உதவியாளர்கள் உள்பட பலரும் வெகுவாக அவரைப் பாராட்டினார்கள்!
இந்த தீப்புண் சிகிச்சை முறையை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளத் தவறாதீர். பச்சைத் தண்ணீரை தீப்புண் பட்ட இடத்தில் ஊற்றினால் அல்லது நனைப்பது முதலுதவிதான் என்றாலும், இந்த வெள்ளைக் கரு! தீப்புண்ணை ஆற்றி விடும் முறையைச் சொல்லிக் கொடுக் கிறார் - தீப்புண் முதலுதவியில் (Fireman) படிக்கின்றனர் பாலபாடமாக இதை.
கொதிக்கும் வெந்நீரை கையில்மீது ஊற்றிக் கொண்டு ஒரு பெண் உடனே ஓடி வந்து வெள்ளைக் கருவை உடைத்து விட்டு அதில் கையை நனைத்து விட் டார். பிறகு தீப்பட்ட இடமேகூட அடை யாளம் தெரியாமல் மாற்றப்பட்டு விட்டது!
இது ஒரு புதுத் தகவல் அல்லவா, நண்பர்களே! வீட்டின் சமையல் அறை களில் எப்போதும் ஒரு டஜன் முட்டை களை வாங்கி வைத்து உபயோகப் படுத்துங்கள்.
காய்கறி உணவுக்காரர்களாக இருந்தால்கூட, முட்டை சாப்பிட மறுப் போராயினும்கூட தீப்புண் பாதுகாப்புக்கு அதை தயார் நிலையில் வாங்கி வைத்திருப்பது அவசியமில்லையா?
சிலர் முட்டைகளை - வெள்ளைக் கருவை தலையிலும், தோலிலும் தடவிக் கொண்டு மேனி பளபளப்புக்காக அதை ஒரு முறையாக நடத்தி வருகிறார்கள் என்று நினைத்தபோது அந்த அழகு ராஜா, அழகு ராணிகளைப் பற்றி விசித் திரமானவர்கள் என்று நினத்ததுண்டு.
ஆனால் இத்தகவலுக்குப்பிறகு அவர் முறை சிறந்தமுறை தான் என்பதும் புரிய வருகிறது.
சமையற்கூடத்தில் கேஸ் ஸ்டவ் அடுப்பு வைத்து சமைக்கும் நம் தாய் மார்களுக்கு முதலுதவி அவசரச் சிகிச் சைபோல - பாதுகாப்பாக ஒரு டஜன் முட்டைகள் தயார் நிலையில் இருப்பது நல்லதல்லவா? உடனே செய்யுங்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...