எலியும் தவளையும்!!!!!
இன்றைய தமிழக அரசியல், எலியும் தவளையுமாகத்தான் உள்ளது!
அரசியல் என்பதே ஏமாற்றும், பொய் சொல்ல வேண்டிய, மன சாட்சியை ஒதுக்கி வைத்து விட்டு நடக்க வேண்டிய நிலை தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து. இது உலகெங்கும் நடக்கும் நிகழ்ச்சி தான். மிகவும் ஆதரவுடன் வெற்றி பெற்ற அமெரிக்கத் தலைவர் ஒபாமா அடுத்த தேர்தலுக்காகச் செலவு செய்யப் போவது ஆம்! ஒரு பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். அதாவது சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள்.
உலகெங்கும் பல ஆட்சிகள் குடியரசு ஆட்சிகள் தான் என்றாலும் மன சாட்சியை விடப் பணசாட்சி தான் ஆள்கின்றது என்பது தானே உண்மை!
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது இன்றைய அரசிய லில் மிகவும் உண்மை. உலக அரங்கில் பல கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் நடந்து கொண்டுள்ளது. பல நாடு களில் எதிரும் புதிருமான கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்து நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இங் கிலாந்து, கனடா, சில அய்ரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அண்மையில் நடந்த தேர்தலில் தமிழின உணர்வுள்ள பல கட்சிகள் " கலைஞர்" என்ற தனி மனிதர் எதிர்ப்பு என்ற உணர்ச்சியுடன் ஒரு கூட்டணி யில் சேர்ந்தனர். பல அவமானங்கள் பட்ட போதும் துடைத்து விட்டுப் பதவிக்காக எதுவும் செய்யத் தயார் என்ற மானமிழந்த நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஏதோ தேர்தலிலும் வென்று பதவிகளையும் பெற்றார்கள்.
ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? இவர்களது உழைப்பை உறிஞ்சி தூக்கியெறியப் பட்ட சக்கைகள் ஆகிவிட்டனர். தமிழின உணர்வு என்பது ஒழிக்கப்பட்டு "ராமா" என்று புலிக்குட்டிக்கே பெயரி டும் அளவிற்கு மாறி வந்துள்ளது! இனியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் தமிழர்கள் எதையும் பொறுத்துக் கொண்டு பதவியில் அமர்ந்தால் போதும் என்று அலைவது வெட்கமும், வேதனையும் அளிக்கின்றன.
இனியாவது, பதவிக்குப் பல்லிளிக் கும் பரிதாபத் தமிழர்களும், திடீர்??? தலைவர்களும் சிந்திப்பார்களா? இல்லை, இதுவும் ஒரு போகிறபோக்கு தானா?
- தமிழன்
No comments:
Post a Comment