Saturday, September 3, 2011

வடமொழி வேதங்களில் தமிழ்ச் சொற்கள்


இன்னும் பல தமிழ்ப் பண்பாட்டுச் சொற்களை வேதகால வடமொழி கடன் வாங்கியுள்ளது.
சதபதப் பிராமணத்து கவச என்ற சொல் வந்துள்ளது. இது கவசம் என்ற தமிழ்ச் சொல்லே. கிருஹ்யசூத்திரத்தில் ஜடா என்ற சொல் வந்துள்ளது. இது சடை என்ற தமிழ்ச் சொல்லேயாகும். அதே நூலில் மாலா, என்ற சொல்லும் உள்ளது. இது தமிழ் மாலையே(தமிழ்ப் பூமாலையைக் கடன் வாங்கி அணிந்து கொண்டு வட மொழியணங்கு அழகு பார்த்துக் கொண்டாள்) ச்ரௌத சூத்திரத்தில் எட என்ற சொல் ஆட்டைக் குறிக்கிறது. இடையன் என்ற சொல்லிலிருந்தே எடவந்தது என லாம். மற்றொரு வடமொழி வினைச்சொல் சூட்டயதி- நசுக்குகிறான் என்பது. இது தமிழ்க் குட்டு----_குடி, குற்று: (அல்லது) கொட்டு-_அடி, உதை என்ற சொற்களிலிருந்து கடன் பெற்றதேயாகும் என்று பிளாக், பர்ரோ, டர்னர். ஆகிய அறிஞர்கள் ஏற்றுக் கொண் டுள்ளனர்.
வடமொழியில் கேதக, கேதகி என்பவை தாழையைக் குறிக்கும். இவை தமிழில் வழங்கும் கைதல், கைதை என்பவற்றின் திரிபேயாகும். கன்னடம் கேதகெ என்றும், துளு கேதை என்றும் இச்சொல்லை வழங்குகிறது. தமிழில் உள்ள மணப் பொருளான ஏலம் என்ற சொல்லை மகரம் நீக்கி ஏல என்று ஏற்றுக் கொண்டு வடமொழி மணம் பெற்றுள்ளது.
சகுனம் கூறும் பல்லியைக் கடன் வாங்கிய வடமொழி அதைப் பல்லீ, பல்லிகா என்று திரித்துக் கொண்டது. தமிழில் உள்ள புற்று_ மண்புற்று, எறும்புப் புற்று என்ற சொல்லைப் புட்டிகா என்று வடமொழி மாற்றிக் கொண்டது. தமிழில் புற்று என்ற சொல்லுடன் புற்றம் என்ற சொல்லும் உள்ளது. கன்னடம் புத்து, புத்த என்று வழங்கும் . கோலாமி, நாய்கி போன்ற திராவிட மொழிகள் புட்ட என்று புகலும்.
தமிழ் நீரைக் கடன் வாங்கிய வடமொழி அதை நீர (நீர், சாறு, மது) என்றும், நீவார (நீர், சேறு) என்றும் மாற்றிக் கொண்டது--.
- மு.ச.சிவம் (வளரும் தமிழ்15.12.96)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...