Friday, September 23, 2011

ஏற்றுமதியாகும் உண்ணாவிரத ஸ்பெஷலிஸ்ட் ஹசாரே!


ஏற்றுமதியாகும் உண்ணாவிரத   ஸ்பெஷலிஸ்ட்  ஹசாரே!

நேற்றுதான் நம் நாடு மிகவும் பெருமைப்படும் செய்தி ஊடகங்களில் வந்துள்ளது! நம் ஞான பூமியில் பரமாத்மாக்கள், ஜீவாத்மாக்கள், மகாத்மாக்கள், அவதாரங்கள் எல்லாம் தோன்றி - சம்பவாமி யுகே யுகே என்று தேவபாஷையில் மந்திராடனம் உச்சரித்து இருந்தனர். 2011 ஆம் ஆண்டு கலி முத்திப் போன நிலையில் ஊழல் ஒழிப்பு அவதாரமான நவீன மகாத்மாவின் உண்ணாவிரத வாரிசு ஹசாரே என்ற ஒரு தியாகிதான் ஹீரோ, மற்ற ஜனநாயகத் தலைவர்கள் எல்லாம் ஜீரோ! டெல்லியில் இவர் இருமினாலும் ஒலிபரப்ப நிறைய இங்கிலீஷ் மற்ற மொழி தொ(ல்)லைக் காட்சிகள் தயார் நிலையில் இடையறாத விளம்பரம் கொடுத்து இந்தியாவின் புது ஊழல் ஒழிப்பு அவதாரம் இவரே, ஹசாரே என்று திரும்பத் திரும்ப டெல்லிக் காட்சிகளை அரங்கேற்றி வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும் இந்தியா ஊழல் மலிந்த பாரத நாடு என்று காட்ட ஹசாரே உண்ணாவிரதத்தினை ஊதி ஊதி பெரிய பலூனாகப் பறக்கவிட்டனர்! மொத்தம் உண்ணாவிரதம் இருந்த 57 பேரில் கடைசிவரை இருந்தவர்கள் 17 பேர்தான் என்கிறார் - இந்தியாவின் ஒரே ஒரு அபூர்வ இலுப்பைப் பூவான அரசியல் விமர்சகர் சோ இராமசாமி. ஆண்களை  விட பெண்களில் அதிகம் பேர் இருந்தனர் எண்ணிக்கையில். அவர்களுக்கு எவ்வித மருத்துவ வசதியோ எதுவும் தரப்படவில்லையே என்று விசனித்து எழுதியுள்ளார்! அவரது உண்ணாவிரதத்திற்கு ஆன பல லட்ச ரூபாய் செலவு எப்படி யாரால் செய்யப்பட்டது? வேடிக்கை பார்க்க வந்த பஜனை பாடி டி.வி.யில் முகங் காட்டியவர்களுக்கு (பல்லாயிரம் பேருக்கு) மூன்று வேளை உணவும் சமாராதனையாக நடந்துள்ளதே, அது எப்படி நடந்தது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இவர்கள் இருந்தனர். அப்போது உணவு, விருந்து கூட மற்றவர்களுக்கெல்லாம் நடந்துள்ளதே!  அந்தக் கணக்கு எதில் வரும்? யார் செலவு செய்தது? அதைக் கேட்டு மற்றொரு உண்ணாவிரதம் ஏற்பாடாகுமா?

ஒரு சாதாரண பேர்வழியை ஊடகக்காரர்கள் நினைத்தால் ஊதி ஊதி நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மேலேயே உட்கார வைத்து உயர்த்திக் காட்ட முடியும் போலும்! இந்த விளம்பரங்கள் நல்ல பலனைத் தந்துள்ளது ஹசாரேவுக்கு.

அவருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுவிட்டது!  பாகிஸ்தானிலிருந்து ஒரு தூதுகோஷ்டி வந்து இவருடன் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, எங்கள் நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்க அவசியம் (பாகிஸ்தானுக்கு) வந்து இயக்கத்தைத் துவக்கி வைக்க வேண்டும் என்று மண்டியிட்டு மகானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்! அவரோ அழைப்பை நிராகரிக்கவில்லை; நேரமிருந்தால் அங்கேயும் வருவதாகச் சொல்லியுள்ளார்! ரகுபதி ராகவ ராஜா ராம் ஈஸ்வர அல்லா தேரே நாம்

என்று உண்ணாவிரதத்தில் அவர் மட்டும் பாடமாட்டார். இவரை அழைக்கும் பாகிஸ்தான் ஊழல் ஒழிப்பு குடி மக்களும் சத்பவன பஜனை பாடிக் கொண்டே உண்ணா விரதத்தின் மூலம் அல்கொய்தாவையும் தீவிர வாதத்தினையும் மனமாற்றி உண்ணாவிரதத்தில் ஈடுபடச் செய்வார் என்கிறார் நம் ஊர் டவுட் தனபாலு அய்யரின் அத்யந்த சிநேகிதர் அவுட்திரி அம்மாஞ்சி அய்யங்கார்! பலே பலே!  ஹசாரே இப்போது எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஆகிவிட்டார்! ஜே!  ஜே!  சலாம்!  சலாம்!  நமஸ்தே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...