ஊழலை ஒழிப்பவர்களா இவர்கள்? பாபநாசம் பார்ப்பன ரவி என்ற ரவிசங்கரின் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றி வாழும் கலை!
தெகல்கா தரும் தகவல்
கருநாடக மாநிலத்தில் ரூ 50 கோடி மதிப்புள்ள அய்ந்து ஏக்கருக்கும் மேற் பட்ட அரசு நிலத்தை ஆக்ரமித்த குற் றத்தை வாழும் கலை போதிக்கும் குரு ரவிசங்கர் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நிலமற்ற ஏழைகளுக்கு வினியோகிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிர மித்து, தனது வாழும் கலை யோகா மய் யத்தின் கட்டடத்தை ரவிசங்கர் கட்டி யுள்ளார்.
மைசூரு நகர மேம்பாட்டுக் கழகம் ரவிசங்கருக்கு அபராதம் விதித்து, அவர் கட்டிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று கேட்டபோது, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலையிட்டு வாழும் கலை அமைப்பின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் இருந்து அதைக் காப்பாற்றிவிட்டார்.
தெகல்காவிடம் கிடைத்துள்ள ஆவ ணங்களின்படி, மைசூருவுக்கு அருகே உள்ள ஆலனஹள்ளி கிராமத்தில் 1985, 1992 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில், 1.5 லட்சம் நிலமற்ற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர நூறு ஏக்கர் நிலத்தை மைசூர் நகர மேம்பாட்டுக் கழகம் கையகப்படுத் தியது. இவ்வாறு கையகப்படுத்தி அறி விக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தில் 70 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட்டது. எஞ்சிய நிலங்கள் மறுபடியும் அறிவிப்பு வெளி யிடப்பட்டு அதன் முந்தைய உரிமையாளர் களுக்கே திருப்பித் தரப்பட்டது.
ரவிசங்கர் ஆக்கிரமித்துள்ள நிலம், மைசூரு நகர மேம்பாட்டுக் கழகத்தால் குடி யிருப்புகள் கட்டுவதற்காக மேம்படுத்தப் படாமல் விடப்பட்டிருந்த, நீரோடை அமைந்திருந்த இடமாகும். சாமுண்டி மலையிலிருந்து ஆலனஹள்ளி ஏரிக்கு தண்ணீர் தாராளமாக வரும் பாதையாக இருந்ததால், அந்த இடம் குடியிருப்புகள் கட்ட மேம்படுத்தப்படாமல் இருந்தது. அந்த இடத்தில் ஒரு தாவரவியல் பூங் காவை உருவாக்குவது என்ற திட்டம் இருந்தது என்று அக்கறை கொண்ட, விழிப்புணர்வு பெற்ற மைசூரு மக்கள் சங்கத்தைச் சேர்ந்த எம். லட்சுமணா என்பவர் தெரிவிக்கிறார்.
என்றாலும், 2002 ஆம் ஆண்டில் ஆர். ரகு என்ற ஒரு பினாமியின் பெயரால் இந்த நிலம், மைசூரு நகர மேம்பாட்டுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, வாழும் கலை அமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டது. யோகா வகுப்பு களும், தியான வகுப்புகளும் நடத்து வற்கான ஒரு கட்டடம் அந்த இடத்தில் கட்டப்பட்டது.
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட மைசூரு உதவி ஆணையர் ஹர்ஷ் குப்தா, வாழும் கலை அமைப்பின் பயன்பாட்டில் உள்ள அரசு நிலத்தைத் திரும்பப் பெறக் கேட்டு மைசூரு நகர மேம்பாட்டுக் கழகத்துக்கு 20.12.2010 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதன் மீது ஏழு நாட்களில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆணையைத் தொடர்ந்து, வாழும் கலை அமைப்புக்கு ஒரு தாக்கீது அனுப்புமாறு வட்டாட்சி யருக்கு மைசூர் நகர மேம்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியது. ஆலனஹள்ளியில் வாழும் கலை அமைப்பு கட்டடம் சட் டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், அதனால் 1964 கருநாடக நிலவருவாய் சட்டத்தின்படி அந்த அமைப்புக்கு ரூ 1000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 4 ஆம் தேதியன்று வாழும் கலை அமைப்புக்கு ஒரு தாக்கீது அனுப்பப்பட்டது.
இந்த அபராதம் விதிக்கப்பட்டது மட்டுமன்றி, கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வாழும் கலை அமைப்புக்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்கப் பட்டது. தவறினால் வருவாய்த்துறையே அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், கூடுதலாக நாளொன்று ரூ 25 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதிகாரிகள் நடவடிக்கை
மைசூரு உதவி ஆணையர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு, இப்போது சர்வ சிக்ஷ அபியான் உதவி இயக்கு நராக இருக்கும் குப்தா, நான் மைசூரு உதவி ஆணையராக இருந்த காலத்தில் அரசுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலத்தின் நில அளவை நடத்தப்பட்டது. எங்கெங்கு தவறுகள் இருந்தனவோ, ஆக்கிரமிப்புகள் இருந்தனவோ, அந்த வழக்குகளில் எல்லாம் தாக்கீதுகள் அனுப்பப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன. இந்த நில அளவை ஆய்வின் போது, வாழும் கலை அமைப்பு அரசின் அய்ந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித் திருப்பது தெரிய வந்தது என்று கூறுகிறார்.
குப்தாவின் ஆணைகள் நடைமுறைப் படுத்தப்படவில்லை. முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் அய்.எஸ்.என். பிரசாத் அன்றைய தினமே கையெழுத் திட்டு அனுப்பிய கடிதம், மைசூர் உதவி ஆணையரும், வருவாய்த்துறை தாலுக்கா நிருவாகமும் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்து நிறுத்தி விட்டது.
முதலமைச்சர் தடுத்து விட்டார்
ஆலனஹள்ளி சர்வே எண். 41/F block (P6) இல் உள்ள வாழும் கலை அமைப்பின் கட்டடத்தை இடிக்க வேண்டாம் என்று மாவட்ட, தாலுகா நிருவாகத்தினருக்கு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. முதல் அமைச்சர் இதுபற்றி ஒரு முடி வெடுப்பார் என்று அக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. என்றாலும் அது பற்றி எந்த ஒரு முடிவும் எடுப்பது பற்றி முத லமைச்சர் எடியூரப்பா சற்றும் கவலைப் படவும் இல்லை. அந்த நிலத்தில் தங்களின் கட்டுமானப் பணிகளை வாழும் கலை அமைப்பு தொடர்ந்து நடத்திக் கொண்டு சென்றது.
நெருக்கடியானதொரு நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவே அவ்வாறு கடிதம் எழுதப் பட்டதாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் பிரசாத் கூறுகிறார். வாழும் கலை அமைப்பின் தூதுக் குழுவினர் முதல்வரை சந்தித்தபோது, ஒரு இறுதி முடிவு எடுக்கும் முன்னர் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று மாவட்ட நிருவாகத்தை அப்போது முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பல்வேறுபட்ட காரணங்களால் இந்த விவகாரத்தில் முதல்வரால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய முதலமைச்சர் அனைத்து உள்ளாட்சி அதிகாரிகளையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்துவார் என்று பிரசாத் கூறினார்.
ஆனால், இந்த நிலத்தை கையகப் படுத்தி அரசு தவறாக வெளியிட்ட அறிவிப்பை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தோம் என்று வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர் பாளர் கார்த்திக் கிருஷ்ணா கூறுகிறார். அதே நேரத்தில், வாழும் கலை அமைப்பு எந்த நிலத்தையும் ஆக்கிர மிக்கவில்லை. இந்த அய்ந்து ஏக்கர் நிலம் 25.11.2002 அன்று கங்கு பெல்லி பெல்லியப்பா என்பவரிடமிருந்து ஆர். ரகுவினால் விலைக்கு வாங்கப்பட்டது. அப்போதிருந்து அவரது அனுமதியின் பேரில், யோகா, தியான வகுப்புகள் நடத்த இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கார்த்திக் கிருஷ்ணா கூறுகிறார்.
கிருஷ்ணா கூறுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அரசு இந்த நிலத்தைக் கையகப்படுத்தி தவறாக ஆணை பிறப்பித்துவிட்டது என்று கூறும் அதே நேரத்தில், இந்த நிலத்தை ரகு என்பவர் பெல்லியப்பா என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கினார் என்றும் அவர் கூறுகிறார்.
70 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
வாழும் கலை அமைப்பின் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு கூறப்படுவது இது ஒன்றும் புதியதல்ல. இந்த அமைப்பு 70 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித் துள்ளது பற்றிய 2006 ஆம் ஆண்டு அறிக்கையில், வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆசிரம நிலத்திலும் ஆக்கிர மிப்பு உள்ளது. மைசூரில் இந்த அய்ந்து ஏக்கர் நிலம் மட்டுமன்றி, சாமுண்டி மலைக்கு அருகில் உள்ள ரூ 70 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் அரசு நிலத்தையும் இந்த வாழும் கலை அமைப்பு ஆக்கிர மித்துள்ளது என்று மாண்டியா மாவட் டத்தைச் சேர்ந்த லட்சுமணா கூறுகிறார்.
பெங்களூரில் 6.35 ஏக்கர் ஆக்கிரமிப்பு
பெங்களூரு கெங்கேரி அகர கிரா மத்தில் 6.35 ஏக்கர் அரசு நிலத்தை இந்த அமைப்பு ஆக்கிரமித்து உள்ளது என்று ஏ.டி.ராமசாமி கமிட்டி தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என்று லேண்ட் டாஸ்க் போர்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் வி.பாலசுப்பிரமணியம் கூறு கிறார்.
ரவி சங்கர் மீதும், எடியூரப்பா மீதும் ஒரு குற்றவில் புகாரை லட்சுமணா பதிவு செய்துள்ளார். மாநில மனித உரிமை ஆணையத்திடமும் நான் ஒரு புகார் பதிவு செய்துள்ளேன். நிலமற்ற ஏழைகள் கடந்த 30 ஆண்டு காலமாக தங்களுக்கு வீடு கிடைக்கும் என்று காத்திருக்கும்போது, வாழும் கலை போன்ற வசதி மிக்க ஒரு அமைப்பு எவ்வாறு அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முடியும் என்று தனது புகாரில் கேட்டுள்ளதாக லட்சுமணா கூறுகிறார்.

No comments:
Post a Comment