களங்களில் மட்டுமல்ல - இறுதிப் போரிலும் வெற்றி பெற வேண்டும்
கட்சிக்கு அப்பாற்பட்டு ஒடுக்கப்பட்டோர் ஒன்று சேர்ந்து போராடுக!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமுன்ற நிலைக்குழு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கூடுதல் சட்ட அங்கீகாரம் - இவற்றிற்காக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மக்களவைத் தலைவர் மீராகுமார் அவர்களைச் சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். இதனை வரவேற்றும், அடுத்த கட்ட உரிமைகளைப் பெறுவதற்கும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தினர் அனைவரும் தங்களது உரிமை, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க - சமூக நீதி சமர்க்களத்தில் சதா விழிப்புடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைதான் இந்த 21ஆம் நூற்றாண் டிலும் நீடிக்கிறது.
அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், மக்கள் தொகையில் பெரும் பகுதி சுமார் 60 விழுக் காட்டினர் என்ற போதிலும், அவர்கள் பற்பல ஜாதி களாலும், பிரிவுகளாலும், அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்களாகவே காட்சியளித்து, தங்களது உரிமை பற்றியோ, சுயமரியாதைபற்றியோ சிந்திக்கக் கூடத் தெரியாத மக்களாக உள்ளனர்!
தந்தை பெரியார் சிந்தனைகளை திராவிடர் கழகம், சமூகநீதி அமைப்புகள் ஆகியவை ஒன்று திரண்டு ஊட்டிய உணர்ச்சிகள் இந்தியாவில் பரவியதன் விளைவுதான் மண்டல் கமிஷன் அறிக்கை சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் அதன் பரிந்துரைகளின் ஒரு பகுதியை (வேலை வாய்ப்பில் - 27 சதவிகிதம்) செயல்படுத்த அது உச்சநீதி மன்றத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
முட்டுக்கட்டைகள்
ஆனால் 27 சதவிகித ஒதுக்கீடு மத்தியக் கல்வி நிறுவனங்களில் தடுக்கப்பட்ட கொடுமையும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் - அர்ஜுன் சிங் அவர்களது சீரிய முயற்சியால் சட்டமாகியும் அதனை இன்னமும் செயல்படுத்த உயர்ஜாதியினரான - பார்ப்பன மற்றும் உயர்ஜாதி அதிகார வர்க்கத்தினர் - நிருவாகத் துறை - நீதித்துறையில் அவர்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டே வருகின்றனர்.
சமூகநீதிப் போர், பல களங்களில் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இடையறாத விழிப்புணர்ச்சி தேவைப்படும் வண்ணம் உள்ளது!
எடுத்துக்காட்டாக, இவ்வளவு சட்ட ரீதியான பின்னணி இருந்தும், 27 சதவிகித ஒதுக்கீடு (60 சதவிகித மக்கள் உள்ள நாட்டில்) பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிட்டவில்லை. (23 சதவிகிதத்திலும்கூட தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களும் வஞ்சிக்கப்பட்டாலும்கூட அதனைத் தட்டிக் கேட்க, அதற்கென ஒரு நாடாளுமன்றக் குழு Parliamentary Committee for S.C., S.T. என்று ஒன்று இருப்ப தால் ஓரளவு தட்டிக் கேட்டு, கண்காணிக்க முடிகிறது)
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எங்கே?
அதே போன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என பார்லிமெண்டரி நிலைக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதிகாரபூர்வமாக அரசு துறைகளில் சரியான ஒதுக்கீடு சட்டப்படி நடக்கிறதா என்று கண்காணிக்க முடியும் என்பதால் இதை பிற்படுத்தப்பட்ட சமுதாய (எம்.பி.க்கள்) நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும், திராவிடர் கழகமும் ஏனைய சமுதாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இடையறாது வற்புறுத்தி வருகின்றன.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் அமைச்சர் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சுமார் 45 பேர்கள் சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களைச் சந்தித்து வற்புறுத்தியுள்ளனர்.
இதில் அரசியல் வேறுபாடு கருதாமல் எல்லாக் கட்சி எம்.பி.க்களும் - ஒத்தக் கருத்துடன் திரு. (அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களின் சீரிய முயற்சி) அனுமந்தராவ் எம்.பி. அவர்கள் தலைமையில் 45 உறுப்பினர்கள் சென்று நேரில் சந்தித்து வற்புறுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத் தக்கது - பாராட்டத்தக்கது; பேரவையை வாழ்த்துகிறோம்.
சமூகநீதிக்களத்தில் ஒற்றுமை
சமூகநீதிக் களத்தில் கட்சி அடையாளங்கள் நம்மைப் பிரிக்கத் தேவையில்லை என்பதில் ஒன்றுபட்டு 7.9.2011 அன்று அளித்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளது மிக நல்ல திருப்பம் ஆகும். (சபாநாயகரும் உறுதி அளித்துள்ளார்)
அதுபோலவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது, மத்திய அரசின் கல்வி மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் கீட்டைப் புறந்தள்ளிடும் திட்டமிட்ட முயற்சிகளை முறியடிப்பது போன்றவற்றிலும் மிகவும் தொடர்ந்து வாதாட, போராட வேண்டியுள்ளது.
தேவை -இறுதிப் போரிலும் வெற்றி!
இப்போது கட்டப்பட்டுள்ள இந்த ஒற்றுமை தொடரட்டும். சமூகநீதிக்கொடி உயர உயரப் பறந்த வண்ணமே இருக்க, நம் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். போர் நீண்ட காலப் போர் - களங்களில் வெற்றி மட்டும் போதாது! இறுதிப் போரிலும் கவனமாக இருந்து வெற்றி பெறல் வேண்டும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment