Tuesday, January 4, 2011

நுழைவுத் தேர்வை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 1- மத்திய அரசின் மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூர்
மத்திய அரசு கொண்டு வரும் மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குன்னூரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு யா.சத்தியநாதன், மா.இ. தலைவர் தலைமை வகித்தார். இராவணன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், சி.வெங்கடேசு இளைஞர் அணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரு.பிறைநுதல் செல்வி, தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சிறப்புரை யாற்றினார். மருத்துவர் இரா.கவுதமன், பகுத்தறி வாளர் கழகம், நீலமலை, ஆ.கருணாகரன், மா. தலைவர், மு.நாகேந்திரன், மா. செயலாளர், இளைஞர் அணி முருகன் பிரேம்குமார் இரவி. வாசுதேவன், வெங்கடேசு, போட்டோ வாசுதேவன், செந்தில், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு
ஈரோட்டில் மருத்துவக்கல்லூரியில் நுழைவுத் தேர்வைப் புகுத்தும் நடுவண் அரசின் போக்கைக் கண்டித்து கழக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 29.12.2010 மாலை 4 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பா.வைரம் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து விளக்கவுரையாற்றினார்.
மண்டல தி க. இளைஞர் அணி செயலாளர் ப. நடராசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிமாறன், அமைப்பாளர் ஜெயச்சந்திரன், கருப்புசாமி,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,
இதில் கோபி மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் சிவலிங்கம், துணை செயலாளர் அ.பாட்டுசாமி, பொதுக்குழு உறுப்பினர் யோகா னந்தம், ப.க.தலைவர் விடுதலை ராஜமாணிக்கம், எழில்ராமலிங்கம், சீ.மதிவாணன், சுப்பிரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை தமிழ்குமரன், சேகர்,செல்வராசு,தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில்குமார்,மாநகர துணை செயலாளர் பி.என். எம். நடேசன், மண்டல திராவிடர்கழக செயலாளர் த.சண்முகம்,
கோ.பாலகிருட்டினன், இலியாஸ், ஈரோடு மாவட்ட தலைவர் ப.பிரகலாதன், செயலாளர் இரா. நற்குணன், துணை செயலாளர் சி.சுப்பிரமணியம், மாநகர தலைவர் கு.சிற்றரசு, செயலாளர் தேவராசு, பெரியார் புத்தகக்கடை பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, ப.சத்தியமூர்த்தி, ஜெயராணி, கு.சுரேசுகுமார், பெரியார்பிஞ்சு பிரமானந்தா, மதிவாணன், ராஜேஸ்வரி, மகேசுவரி, இனியன் பத்மநாதன், பூந்துறை சேகுவாரா, மு. நல்லசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமைக் கழகம் வடித்துத்தந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார், அனைவருக்கும் ஈரோடு கோ.பால கிருட்டினன் தேநீர் வழங்கினார்.
திருப்பத்தூர்
மத்திய அரசின் நுழைவுத் தேர்வை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார் . 300-க்கும் மேற்பட்ட தோழர்களும் 100-க்கும் மேற்பட்ட மகளிரணியினரும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஜி.இளங்கோவன் ஒலிமுழக்கங்களுக்கு இடையில் மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத் தினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எ.சிற்றரசன் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட முழக்கங்களை முழங்க அனைவரும் கொடிகளை உயர்த்தி உணர்ச்சி முழக்கமிட்டனர் .
ஆர்ப்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர் சாமி பிரபாகரன், புலவர் அண்ணாமலை, திருப்பத்தூர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பழகன், விசமங்களம் தி.மு.க பொறுப்பாளர் மணி, ஊற்றங்கரை நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம், கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்க மிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பரந்தாமன், தொழிலதிபர் அண்ணா. அருணகிரி, மாவட்ட இணை செயலாளர் அரங்க. ரவி, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா, கே.கே.சி. கமலா அம்மாள், ஆசிரியை அழகுமணி, இந்திராகாந்தி, சுப்புலட்சுமி, மாவட்ட ப.க.தலைவர் தமிழ்ச் செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் கமல், ஆனந்தன், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், பெரியார் அணி பயிற்றுநர் திராவிடராசன், கட்டரசம்பட்டி குமார், ராமச்சந்திரன், காவேரி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு , சித.அருள், இர.அன்பு .தீ.பொன்னுசாமி, காளிதாஸ், கனகராஜ், திருப்பதி, வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, சாமி. அரசிளங்கோ, சி.சாமிநாதன், அண்ணா, அப்பாசாமி, துரை, தமிழ்குடிமகன், உள்ளிட்ட ஏராளமான திருப் பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஊற்றங்கரை, மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர். எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்ப் புக்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறி யது. கழக தோழர்களின் உணர்ச்சிகரமான முழக் கங்களையும், கட்டுப்பாடுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்.
திண்டுக்கல்
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை அமல்படுத்த மருத்துவக் கவுன்சில் மேற்கொண்டுள்ள முடிவைக் கண்டித்து திண்டுக்கல்லில் 29-12-2010 அன்று மாலை 5 மணியளவில் நாகல் நகர் சிண்டிகேட் வங்கி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா.சுரேசு தலைமைவகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கு.பா. சாக்ரட்டீஸ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ப.க செயலாளர் மு.நாகராசன், பழனி மாவட்ட மாணவரணி செயலாளர் பொன். அருண்குமார், திண்டுக்கல் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க. தலைவர் தி.க.பாலு, திண்டுக்கல் நகரத் தலைவர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் போ. செல்வராசு, இரா.நாராயணன், செல்வம். தி.தொ.க.பே. தலைவர் ஆ.நாகலிங்கம், ஆகியோர் உரையினை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி கண்டன உரை ஆற்றினார். அவரின் உரையில் கடந்த 1984ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வு சட்டத்தை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. நுழைவுத் தேர்வு முடிவால் கிராமப்புற ஏழை மாணவர் பெரிதும் பாதிக்கப்படுவதையும், திராவிடர் கழகம் ஆரம்பம் முதலே இதனை எதிர்த்து வருவதையும் எடுத்துக்கூறி விளக்கி உரையாற்றினார். கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநில துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட தலைவர் வீர. லோகநாதன் ஆகியோர் உரை யாற்றினர். மாநிலத் துணைத்தலைவர் குணசேகரன் அவர்களுக்கு மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டி சால்வை அணிவித்தார். ஆர்ப்பாட்ட முழக்கங் களை மாவட்ட செயலாளர் ப.யாழ் புலேந்திரன் முழங்கினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளா பெ. கிருஷ்ணமூர்த்தி நகரத் துணைச் செயலாளர் சு.தேவேந்திரன், நகர ப.க. தலைவர் ராமசாமி, தெ.புதுப்பட்டி பழனிச்சாமி, கன்னிவாடி சி.வே. பழனிச்சாமி, சின்னாளப்பட்டி விடுதலை மணி, சண்முகம், மார்க்கண்டன், ச.பொன்ராஜ், ஜீவா, எழில் சுந்தர், ப.சேகர், சின்னப்பர், விருவீடு பாஸ்கரன், ரெ.நந்தகுமார், மரிய ஆரோக்கியம், இராசேந்திரன், பழனியப்பன், மகளிரணி சார்பில் ப.தமிழ்மொழி, சங்கமித்ரா, ஜோதிஅப்போஜி, கண்மணிஅப்போஜி, பொன்.நாகலெட்சுமி, ஜெனிபர், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மணி, வாஞ்சிநாதன், ராஜா ஆகியோரும் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுக்கோட்டை
நுழைவுத் தேர்வு முறையைப் புகுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல இளைஞரணிச் செயலாளர் அ.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி மாவட்ட செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், சாமி.இளங்கோ, இராமதி.இராசன், பொன்னமராவதி, ஒன்றிய செயலாளர் மாவலி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மேலும் நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா பொதுக்குழு உறுப்பினர் இர.புட்ப நாதன் சு.கண்ணன் ம.மு.கண்ணன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி சுயமரி யாதை திருமண அமைப்பாளர் த.செயலெட்சுமி மா.சண்முகம் பு.ஆம்ஸ்ட்ராங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் 29.12.2010 புதன் கிழமை காலை சரியாக 11 மணியளவில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் த.அருண் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுதியவர் கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் பா.ஜெயராமன் பேசினார். மாவட்ட தலைவர் எம்.முருகேசன், இராமநாதபுரம் நகர தலைவர் பழ.அசோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கயல் கணேசன், இராமேஸ்வரம் நகர தலைவர் வே.முத்துச்சாமி, செயலாளர் எ.முரு கானந்தம், முதுகுளத்தூர் அமைப்பாளர் தங்க பாண்டியன், காஞ்சிரங்குடி கார்மேகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ஜான், சோ. அண்ணாரவி மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பாக மாவட்ட தலைநகரமான சிவகங்கையில் நுழைவுத் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 29.12.2010 மாலை 4 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் சோ.தமிழரசி தலைமையிலும், மற்றொரு செயலாளர் சேசுராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
நுழைவுத் தேர்வைக் கண்டித்து பதாகையை, கழகக் கொடியை தாங் கிய வண்ணம் தோழர்கள் புடைசூழ, ஆர்ப்பாட்ட நிகழ்வு தொடங்கிய சில மணித்துளிகளிலேயே மழை பெய்திட ஆரம்பித் தும், கொட்டும் மழை யிலும் கொள்கை முழக் கம் இடுவோம் எனும் வகையில் மழையில் நனைந்தபடியே ஆர்ப் பாட்டம் குறித்த தொடக்க உரையினை மாவட்ட திராவிடர் கழகத் தலை வரும், தலைமைச் செயற் குழு உறுப்பினருமான வழக்குரைஞர் ச.இன்பலாதன் தந்திட, அதன் தொடர்ச்சியாய் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளரும், கழக சொற்பொழிவாளருமான உ.சுப்பையா ஆர்ப்பாட்ட அவசியம் குறித்தும், 1984-லிருந்து இன்றுவரை இந்த நுழைவுத் தேர்வு மூக்கை நுழைக்கின்ற பொழுதெல்லாம் முதன் முதலாக தன்னுடைய எதிர்ப்பை எவ்வாறு மக்கள் மத்தியில் தமிழர் தலைவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றார் என்பது பற்றியும், 2009இல் அய்.அய். டி.யில் பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்ட தன்மை, 2010இல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் திறந்த போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர் பற்றிய புள்ளி விவரங்கள் போன்ற வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய தகவல்களை உள்ளடக்கியும் உரையாற்றி கழகத்தின் சமுதாயப் பணிகளை எடுத்துரைத்தார்.
ஆர்ப்பாட்ட முழக்கங்களை சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜெ. தனபாலன் முழங்கிட, கூடியிருந்தோர் அனைவரும் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர். நகர இளைஞரணி நேரு நன்றி உரையுடன் நிறைவுற்ற இந்த நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆசிரியர் மாரியப்பன், சாலைக் கிராமம் ஒன்றிய தி.க. தலைவர் தி.க. பாலு, வேம்பத்தூர் செயராமன், காஞ்சிரங்கால் சோனைமுத்து, சுந்தர்ராசன், பெரியார் பிஞ்சு முகேசுகுமார், திராவிடர் மாணவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கமலா திரையரங்கம் அருகில் மாலை 4 மணியளவில் காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் ந.அறிவுச்செல்வன் தலைமையில், மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனை வரையும் காசிநாதபுரம் செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். மாவட்ட இளைஞரணி தலைவர் கி.எழில், செயலாளர் வ.சற்குணம் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் கொ.சண்முகம் தொடங்கி வைத்தார். மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் பொதட்டூர் புவியரசன், மாவட்ட தலைவர் கெ.கணேசன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். காஞ்சி மண்டல செயலாளர் க.ஏ.மோகனவேலு, மாவட்ட துணைத் தலைவர் பா.மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: கா.சி.தமிழ்மணி நகர செயலாளர், பாடகர் பன்னீர்செல்வம், மு.தயாளன், மாவட்ட அமைப்பாளர் விமல்ராஜ், நகர தலைவர் திருவள்ளூர், ம.அன்பு தலைவர், காசிநாதபுரம் ம. வேணுகோபால், காசிநாதபுரம் த.முருகன் த.ஆனந்தன், ச.கார்த்தி, கு.மதன் குமார், தினேஷ், அ.சூர்யா, ப.ராமு, மற்றும் கழகத் தோழர்களும் ஒத்த கருத்துள்ள தோழர்கள் ஏராள மானோரும் கலந்து கொண்டார்கள் இறுதியாக க.ஏ. தமிழ்முரசு நன்றியுரை ஆற்றினார்.
கரூர்
தே.அலெக்சாண்டர் (மாவட்ட மாணவரணித் தலைவர்), மு.க.இராஜசேகரன் (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம், கரூர்), தலைமை வகித்தார். ம.செகநாதன் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்), குமார் இளைஞரணி, பரமத்தி சண்முகம், திமுக (மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர்).
விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பாக மாநில அமைப்பாளர் அக்னி இல.அகரமுத்து, திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பழ.இராம சாமி, அ.பாரதமணி, ஆ. சங்கரன், பகுத்தறிவாளர் மன்றம் சார்பாக கைலா சம், டிஎன்பிஎல் சண் முகம், வழக்கறிஞர் இரா ஜேந்திரன், திராவிடர் கழக துணைச் செயலா ளர்கள் க.நா. சதாசிவம், வே.ராஜு, மாவட்ட தொழிலாளர் அணி, சு.சாமியப்பன், தி.க. மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, நகர தலைவர் தி.செல்வராஜ், நகர துணைச் செயலாளர் அ.காமராசு, டி.எம்.முருகன் ஆசிரியர் ம.பழனியப்பன், ஆண்டாங்கோயில் கருப்பண்ணன், புலியூர் எஸ்.டி.குப்புசாமி, இரா.துரைசாமி, மா.துரைசாமி, வெங்கல்பட்டி மா.கணேசன், பெ.விடுதலை, இரா.பெருமாள் ஆகியோரும் கலைஞர் பகுத்தறிவுப் பாசறை தோழர்கள் த.வாசு, க.ஆனந்த், பி.மணிமாறன், பாலசந்திரன், லோகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகியோரும் என மொத்தம் 50 தோழர் கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...