Sunday, September 4, 2011

தீட்டாயிடுத்து!


இந்த ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் சித்தி விநாயகனே என்ற பாட்டைப் பாடினாராம். அடுத்தபடி கச்சேரி செய்யவந்த அரியக்குடி ராமானு அய்யங்கார் தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப்படுத்திவிட்டார். நான் இந்த மேடையில் பாடமாட்டேன் என்று கூச்சலிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல, மனமுந்தாதா காலத்திலிருந்து தமிழ் பாஷை நீச்ச பாஷை என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக்கூடாது என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக்கூடாதென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத் திலும், அக்கிரகாரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது.

தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக் குத் தடையுத்தரவு! ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது.

தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க் குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசை யிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷ ணர்களும் உள்ளவரை அரியக் குடிவர்க்கம் அகம்பாவத்தோடுதான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

- குடிஅரசு, 9.02.1946

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...